என் மலர்

  ஆட்டோமொபைல்

  அதிநவீன அம்சங்களுடன் ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம்
  X

  அதிநவீன அம்சங்களுடன் ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஆகும். ஹூன்டாய் வென்யூ விலை ரூ.6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  புதிய ஹூன்டாய் வென்யூ கார் முன்பதிவு கட்டணம் ரூ.21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும். இதில் புளு லின்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

  ஹூன்டாயின் புளு லின்க் கனெக்டிவிட்டியில் 33 அம்சங்கள் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை வென்யூ எஸ்.யு.வி. மாடலில் ஹெக்சாகோனல் முன்புற கிரில், டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் மெல்லிய இன்டிகேட்டக், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.  காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் ஹூன்டாயின் வடிவமைப்பு கிரெட்டா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் ஸ்குவாரிஷ் எல்.இ.டி. டெயில் டைல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புற பம்ப்பர்களில் ரிஃப்லெக்டர்கள் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

  ஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

  டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.
  Next Story
  ×