என் மலர்

  ஆட்டோமொபைல்

  நியூ யார்க் ஆட்டோ விழாவில் ஹூன்டாய் வென்யூ
  X

  நியூ யார்க் ஆட்டோ விழாவில் ஹூன்டாய் வென்யூ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் 2019 நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #HyundaiVenue  ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் 2019 நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் வென்யூ கார் இந்திய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. 

  புதிய வென்யூ கார் வடிவமைப்பு சான்டா ஃபெ மற்றும் பலிசேட் எஸ்.யு.வி. ஆகிய இருமாடல்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஹூன்டாய் தனது வென்யூ கார் பல்வேறு சந்தைகளில் வெவ்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூன்டாய் வென்யூ காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மோட்டார் மற்றும் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.  இத்துடன் சர்வதேச சந்தையில் 1.6 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் இந்த கார் 1.6 லிட்டர் என்ஜின் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

  ஹூன்டாய் வென்யூ காரில் ஹூன்டாயின் புளுலின்க் கனெக்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் புதிய காரில் இந்தியாவுக்கென பிரத்யேகமாக பத்து அம்சங்களை வழங்கும் என்றும் காரில் மொத்தம் 33 கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

  அந்த வகையில் இந்திய மாடலில் வழங்கப்படும் அம்சங்களில் ஜியோ-ஃபென்சிங், ஸ்பீடு அலெர்ட், எஸ்.ஓ.எஸ்., பேனிக் நோட்டிபிகேஷன், டெஸ்டினேஷன் ஷேரிங், ரோட்-சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் புளுலின்க் தொழில்நுட்பம் மிகதீவிரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×