என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கமிக் ஜி.டி. கார் நவம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய காருக்கான டீசரை ஸ்கோடா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஸ்கோடா கமிக் ஜி.டி. அந்நிறுவனத்தின் இரண்டாவது எஸ்.யு.வி. கூப் மாடல் ஆகும். இந்த கார் சீனாவில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்கோடா விஷன் ஜி.டி. கான்செப்ட் மாடலை தழுவி கமிக் ஜி.டி. உருவாகி இருக்கிறது. சீன சந்தையில் ஸ்கோடாவின் ஐந்தாவது எஸ்.யு.வி. மாடலாக இது இருக்கிறது.
புதிய டீசரின் படி ஸ்கோடா கமிக் ஜி.டி. பார்க்க ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் வித்தியாசமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தோற்றமும் சீன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் உள்ள எஸ்.ஏ.ஐ.சி. ஸ்கோடா மற்றும் செக் குடியரசில் உள்ள ஸ்கோடா வடிவமைப்பு குழுவினரின் ஒருங்கிணைந்த படைப்பாக ஸ்கோடா கமிக் ஜி.டி. உருவாகி இருக்கிறது. டீசரில் காரின் ஸ்போர்ட் தோற்றம் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறது.
காரின் உள்புறம் ரக்கட் எஸ்.யு.வி. தோற்றமும் ஸ்போர்ட் டைனமிக்களின் கலைவையை எதிர்பார்க்கலாம். இத்துடன் உள்புற ஹைலைட்கள், ஸ்போர்ட் சீட்கள் உள்ளிட்டவையும் எதிர்பார்க்கலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்படுவதாகவும் இந்தியாவில் இந்த கார் வணிகரிதியில் அடுத்த ஆண்டு வெளியாகாது என தெரிவித்துள்ளது. 2020 ஆண்டு வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அடுத்தக்கட்ட சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா இதுபற்றி கூறியதாவது,
எலெக்ட்ரிக் வாகன பணிகள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிலையிலேயே இருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை தொடர்ந்து சோதனை செய்யப்படும். மாருதி சுசுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் வணிக ரீதியில் வெளியிடுவதற்கான நிலையில் இல்லை.

இருசக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்க அரசு சலுகைகள் அதிகம் வழங்கப்படுகின்றன. எனினும், பயணிகள் கார்களுக்கு நிலைமை வேறாக இருக்கிறது. இதனாலேயே மாருதி சுசுகி தனது இ.வி. வாகனத்தை வெளியிடுவதில் அமைதி காக்கிறது. எலெக்ட்ரிக் வாகனத்தை தற்சமயம் வணித ரீதியில் வெளியிடும் பட்சத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
மேலும் தற்சமயம் இந்த கார் வெளியானால் அதன் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆடி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ6 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆடி நிறுவனம் இந்தியாவில் 2019 ஏ6 செடான் காரை அறிமுகம் செய்தது. புதிய 2019 ஆடி ஏ6 மாடலின் துவக்க விலை ரூ. 54.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2019 மாடலில் மேம்பட்ட அம்சங்கள், உள்புற மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஆடி ஏ6 மாடல் பார்க்க கூர்மையாகவும் முன்பை விட அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. அதன்படி காரின் முன்புறம் புதிய கிரில், மேம்பட்ட எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், புதிய பொனெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகிறது.
2019 ஆடி ஏ6 மாடலில் டூயல்-டோன் அலாய் வீல்கள், நீண்ட வீல்பேஸ், பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. ஏ6 காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் ஒற்றை க்ரோம் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முற்றிலும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இரட்டை தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், புதிய MMI இன்ஃபோடெயின்மென்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
என்ஜினை பொருத்தவரை 2019 ஆடி ஏ6 காரில் ஒற்றை பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் TFSI யூனிட் ஆகும். இது 240 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ். 6 ரக என்ஜின் ஆகும்.
புதிய 2019 ஆடி ஏ6 கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடிகளில் எட்டிவிடும்.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆறு மாதங்களில் இத்தனை லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2019-2020 நிதியாண்டு காலத்தின் முதல் ஆறு மாதங்களில் முன்னணி ஸ்கூட்டர் பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 13,93,256 ஹோன்டா ஆக்டிவா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோன்டா ஆக்டிவா இருக்கிறது.
ஹோன்டாவின் லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 5ஜி மாடல் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் பிரபல மாடலாக உருவெடுத்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஹோன்டா நிறுவனம் பத்து பிரீமியம் ஸ்டைலிங்கில், இரண்டு புதிய டூயல் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிக விற்பனை காரணமாக ஹோன்டா இதன் உற்பத்தியை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. துவக்கம் முதலே ஆக்டிவா மாடலின் வடிவமைப்பு, சவுகரியம், மைலேஜ், சிறந்த தொழில்நுட்பம் என பல்வேறு காரணங்களால் அதிகம் விற்பனையாகி வருகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது.
இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஆக்டிவா மட்டும் 14 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஹன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் 56 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.
ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் துவக்க விலை இந்தியாவில் ரூ. 52,887 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விலை ரூ. 56,535 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆக்டிவா 125 மாடல் விலை ரூ. 62,591 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஜாஸ் ஹேட்ச்பேக் கார் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஹோன்டா ஜாஸ் மாடல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புத்தம் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் வெளியாகி இருக்கிறது.
அதன்படி புதிய ஜாஸ் மாடலின் முன்புறம் மெல்லிய கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புற பம்ப்பர், சென்ட்ரல் ஏர் இன்டேக், ஃபாக் லேம்ப்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெயில் லைட்கள் எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அதிநவீன கனெக்டிவிட்டி தொழில்நுட்பம், புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்படலாம்.
புதிய 2020 ஹோன்டா ஜாஸ் கார் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் சில சர்வதேச சந்தைகளில் வெளியாகலாம்.
கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் புதிய மோட்டார்சைக்கிள் ஹாலோஜென் ஹெட்லைட் கொண்டிருக்கிறது. இது பார்க்க டியூக் 250 போன்றே தெரிகிறது.
ஹெட்லைட் உடன் ஹெட்லைட் மாஸ்க் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஸ்பை படங்களில் உள்ள மோட்டார்சைக்கிளில் விண்ட்ஸ்கிரீன் காணப்படவில்லை.
ஹாலோஜென் ஹெட்லைட்கள் தவிர கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடல் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் கார்பன் காப்பி போன்று இருக்கும் என தெரிகிறது. இதன் முன்புறம் 19-இன்ச் வீல், பின்புறம் 17-இன்ச் வீல், ஃபியூயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள், ஒற்றை கிராப் ரெயில் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்பை படங்களில் 250 அட்வென்ச்சர் மாடலில் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலிலும் டியூக் 250 மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இறுக்கும் என தெரிகிறது.
திறனை பொருத்தவரை கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248.8 சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 2.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: BikeDekho
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கிய இரண்டு மாதங்களில் 40,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் பல்சர் 125 விற்பனை துவங்கிய இரண்டு மாதங்களில் 40,000 யூனிட்களை கடந்திருக்கிறது.
பஜாஜ் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பஜாஜ் என்ட்ரி லெவல் மாடல் டிரம் மற்றும் டிஸ்க் என இருவிக வேரியண்ட்களில் கிடைக்கிறது. பஜாஜ் பல்சர் 125 துவக்க விலை ரூ. 64,000 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 66,618 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடலில் 124சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 11.8 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம் மற்றும் 11 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் தனது பிரபல செட்டாக் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அர்பனைட் பிராண்டிங்கில் அறிமுகமான செட்டாக் ஸ்கூட்டர் பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.
டேட்சன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான டேட்சன் இந்தியாவில் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி பண்டிகை காலத்தில் டேட்சன் நிறுவன வாகனங்களை வாங்குவோர் தேர்வு செய்யும் மாடல்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ. 62,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தீபாவளி சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டேட்சன் நிறுவன என்ட்ரி லெவல் மாடலான ரெடி கோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ. 62,000 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 27,000-க்கு தள்ளுபடி, ரூ. 30,000 மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 5,000 வரை வழங்கப்படுகின்றன.
ரெடி கோ ஹேட்ச்பேக் மாடலில் 800சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 63.2 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடனஅ 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

டேட்சன் கோ ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 32,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10,000 மதிப்புள்ள தள்ளுபடி, ரூ. 20,000-க்கு எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 2000-க்கு வழங்கப்படுகிறது.
கோ ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
கோ பிளஸ் காம்பேக்ட் எம்.பி.வி. மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 29,000 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 7000 மதிப்புள்ள தள்ளுபடி, ரூ. 20,000 மதிப்பில் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 2000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
ஹோன்டா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஜாஸ் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிய புகைப்படங்களில் இருப்பது அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ்/ஃபிட் எலெக்ட்ரிக் ஹைப்ரிட் வெர்ஷன் மாடல் ஆகும். புகைப்படங்களின்படி அடுத்த தலைமுறை ஹோன்டா கார் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் பெட்ரோல் / டீசல் வெரஷன்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
புதிய தலைமுறை ஹோன்டா ஜாஸ் பார்க்க தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் மெல்லிய கிரில், மேட் பிளாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் புதிய பம்ப்பர், அகலமான ஏர்டேம் உள்ளிட்டவை காணப்படுகின்றன. காரின் ப்ரோஃபைல் பார்க்க இரண்டாம் தலைமுறை ஜாஸ் மாடல் போன்று காட்சியளிக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் குவாட்டர் கிளாஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் பெரிய ஒற்றை சீட் காணப்படுகிறது.
காரில் வழங்கப்பட்ட இருக்கும் என்ஜின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இம்மமாத இறுதியில் நடைபெற இருக்கும் கார் அறிமுக விழாவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹோன்டா ஜாஸ் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.
புகைப்படம் நன்றி: autoblog.rs
ஹூன்டாய் நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
ஹூன்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீன சந்தையில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் செப்டம்பர் மாதம் நடைபெற்ற செங்டு மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய தலைமுறை கிரெட்டா அல்லது ix25 மாடலை தழுவி உருவாகி இருப்பது தெளிவாகி இருக்கிறது. புதிய வெர்னா கார் முந்தைய மாடலை விட கூர்மையாக இருக்கிறது. இதன் கேஸ்கேடிங் கிரில் காரின் தோற்றத்தை சற்று மாற்றினாலும், இது முன்பை விட அகலமாகவே இருக்கிறது.

இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப்கள், ஷார்ப் பம்ப்பர், பிரெசிஷன்-கட் அலாய் வீல்கள் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது. முன்புறம் போன்றே காரின் பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காரின் தோற்றம் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் மத்தியில் இணைக்கப்பட்டு ஹூன்டாய் பேட்ஜ் இடையில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் கேபினும் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இம்முறை வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கனெக்ட்டெட் காராக இருக்கும். இதனால் இதில் ப்ளூலின்க் கனெக்டிவிட்டி மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. இந்திய உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்.ஜி. ஹெக்டார் இந்திய உற்பத்தியில் 10,000 யூனிட்களை கடந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் 5000 மைல்கல் கடந்த நிலையில், 1.5 மாதங்களில் மற்றொரு 5000 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது.
இந்தியாவில் அறிமுகமான எம்.ஜி. ஹெக்டார் முதற்கட்ட உற்பத்தியில் 5000 யூனிட்களை கடக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மூன்று மாதங்களை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா ஆலையில் மாதம் 1500 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
பின் அமோக வரவேற்பு காரணமாக உற்பத்தி எண்ணிக்கை மாதம் 3000 யூனிட்களாக அதிகரிக்கப்பட்டது. இத்துடன் ஹெக்டார் உற்பத்தியை மேலும் அதிகப்படுத்த எம்.ஜி. மோட்டார் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கு ஏற்கனவே 40,000 முன்பதிவுகளை ஏற்று இதுவரை 6000 யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. விலை ரூ. 12.48 லட்சத்தில் துவங்கி ரூ. 17.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழில்நுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டா நிறுவனத்தின் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. விற்றுத் தீர்ந்ததால், இந்திய விற்பனையாளர்கள் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்பட்ட சி.பி.ஆர். 650ஆர் உள்ளூர் ஆலையில் அசெம்பில் செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டது. ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் ரூ. 7.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோன்டா நிறுவனம் அடுத்த 18 மாதங்களுக்குள் 300 சிசி முதல் 500 சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியை ஏற்படுத்த ஹோன்டா திட்டமிடுவதாக தெரிகிறது.

சி.பி.ஆர்.650ஆர் மாடலில் பி.எஸ்.-IV ரக 649சி.சி. இன்-லைன் 4-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர் @11,500 ஆர்.பி.எம். மற்றும் 601 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
இதுதவிர சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.






