search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 ஹோன்டா ஜாஸ்
    X
    2020 ஹோன்டா ஜாஸ்

    டோக்யோ மோட்டார் விழாவில் 2020 ஹோன்டா ஜாஸ்

    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஜாஸ் ஹேட்ச்பேக் கார் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஹோன்டா ஜாஸ் மாடல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புத்தம் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் வெளியாகி இருக்கிறது.

    அதன்படி புதிய ஜாஸ் மாடலின் முன்புறம் மெல்லிய கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புற பம்ப்பர், சென்ட்ரல் ஏர் இன்டேக், ஃபாக் லேம்ப்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெயில் லைட்கள் எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்புறம் எளிமையான வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    2020 ஹோன்டா ஜாஸ்

    காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அதிநவீன கனெக்டிவிட்டி தொழில்நுட்பம், புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்படலாம். 

    புதிய 2020 ஹோன்டா ஜாஸ் கார் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் சில சர்வதேச சந்தைகளில் வெளியாகலாம்.
    Next Story
    ×