search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.ஜி. ஹெக்டார்
    X
    எம்.ஜி. ஹெக்டார்

    உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. இந்திய உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    எம்.ஜி. ஹெக்டார் இந்திய உற்பத்தியில் 10,000 யூனிட்களை கடந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் 5000 மைல்கல் கடந்த நிலையில், 1.5 மாதங்களில் மற்றொரு 5000 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    இந்தியாவில் அறிமுகமான எம்.ஜி. ஹெக்டார் முதற்கட்ட உற்பத்தியில் 5000 யூனிட்களை கடக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மூன்று மாதங்களை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா ஆலையில் மாதம் 1500 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

    பின் அமோக வரவேற்பு காரணமாக உற்பத்தி எண்ணிக்கை மாதம் 3000 யூனிட்களாக அதிகரிக்கப்பட்டது. இத்துடன் ஹெக்டார் உற்பத்தியை மேலும் அதிகப்படுத்த எம்.ஜி. மோட்டார் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கு ஏற்கனவே 40,000 முன்பதிவுகளை ஏற்று இதுவரை 6000 யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. விலை ரூ. 12.48 லட்சத்தில் துவங்கி ரூ. 17.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழில்நுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×