என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மினி இந்தியா நிறுவனம் கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.



    மினி இந்தியா நிறுவனம் தனது கன்ட்ரிமேன் காரின் பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை ரூ. 42.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மினி கன்ட்ரிமேன் லிமிட்டெட் எடிஷன் வெறும் 24 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய லிமிட்டெட் எடிஷன் கார் கூப்பர் எஸ் ஜான் கூப்பர் வொர்க்ஸ் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்டான்டர்டு மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் புதிய பிளாக் கிரில், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளது.

    மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன்

    இத்துடன் ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்களில் பியானோ பிளாக் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொனெட்டில் கருப்பு நிற ஸ்டிரைப் செய்யப்பட்டுள்ளது. இதில் 18 இன்ச் JCW அலாய் வீல்கள் மற்றும் ஃபிலாட் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    காரின் உள்புறம் ஹெட்-அப் டிஸ்ப்ளே, மினி வையர்டு பேக்கேஜ், எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் சீட், பானரோமிக் கிலாஸ் ரூஃப், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் உள்புறத்தில் முற்றிலும் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.

    மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 189 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    மஹிந்திரா நிறுவன மாடல்களின் பி.எஸ்.6 வேரியண்ட் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் எக்ஸ்.யு.வி.500 எஸ்.யு.வி. மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களில் எக்ஸ்.யு.வி.500 மாடலின் ஃபியூயல் டேன்க்கில் பி.எஸ்.6 டீசல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மஹிந்திராவின் புதிய பி.எஸ்.6 மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய என்ஜின் அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500, 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் விற்பனையாகும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பி.ஹெச்.பி. பவர், 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய 2.0 லிட்டர் என்ஜின் இதைவிட அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.

    2020 மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 ஸ்பை படம்

    புதிய எஸ்.யு.வி.யின் பி.எஸ். 6 மாடல் தவிர அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500 மாடலையும் மஹிந்திரா உருவாக்கி வருகிறது. அடுத்த தலைமுறை மாடல் அதிகளவு மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மஹிந்திராவின் எக்ஸ்.யு.வி.500 மாடல் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

    அடுத்த தலைமுறை எக்ஸ்.யு.வி.500 மாடலின் வெளிப்புறத்தில் புதிய முன்புறம், மேம்பட்ட பம்ப்பர்கள், ஹெட்லைட் மற்றும் புதிய கிரில் போன்றவை வழங்கப்படலாம். காரின் பின்புறத்தில் மேம்பட்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. உள்புறம் அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய தொடுதிரை டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவில் அறிமுகமானதும் புதிய எஸ்.யு.வி. மாடல் கியா செல்டோஸ், டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், எம்.ஜி. ஹெக்டார் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

    புகைப்படம் நன்றி: Gaadiwaadi 
    ஆஸ்டன் மார்டின் நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆஸ்டன் மார்டின் நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த சுப்பீரியர் நிறுவனத்துடன் இணைந்து லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்க இருக்கிறது. இருநிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    ஆடம்பர வாகனங்களை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இணைந்து தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்மிக்க மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் நிச்சயம் லிமிட்டெட் எடிஷன் மாடலாக இருக்கும் என ஆஸ்டன் மார்டின் தெரிவித்துள்ளது.

    EICMA 2019 நிகழ்வில் முதல்முறையாக ஆஸ்டன் மார்டின் பிராண்டிங் மற்றும் லோகோ உள்ளிட்டவை மோட்டார்சைக்கிளில் இடம்பெற இருக்கிறது. EICMA 2019  விழா நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த விழா இத்தாலியில் நடைபெற இருக்கிறது.

    சுப்பீரியர்

    இங்கிலாந்தை சேர்ந்த புரோ சுப்பீரியர் 1919 முதல் 1940 வரை மோட்டார்சைக்கிள், சைடுகார் மற்றும் கார்களை தயாரித்து வந்தது. இந்நிறுவனம் தயாரித்த வாகனங்கள் மோட்டார்சைக்கிள் பிரிவில் ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டுக்கு இணையான அளவு பிரபலமாக பார்க்கப்பட்டன. இந்நிறுவனம் மொத்தம் 3048 மோட்டார்சைக்கிள்களை தயாரித்தது.

    புரோ சுப்பீரியர் பெயரை ஜெர்சி ரெஜிஸ்டர் கார்ப்பரேஷன் கைப்பற்றி பாக்ஸ் வடிவமைப்பு கொண்ட எஸ்.எஸ்.100 மாடலை உருவாக்கியது. இந்த மோட்டார்சைக்கிளில் 88 டிகிரி 990சிசி என்ஜின் கொண்டிருந்தது. இந்த மாடல் EICMA 2013 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்7 கார் இந்தியாவில் வெளியான மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்தக் கட்ட மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுக்கான விநியோகம் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: எக்ஸ்டிரைவ் 30டி டிசைன் பியூர் எக்சலென்ஸ் டீசல், எக்ஸ்டிரைவ் 40ஐ பெட்ரோல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டீசல் வேரியண்ட் மாடல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பெட்ரோல் வேரியண்ட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 40ஐ மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7

    இந்த என்ஜின் 260 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மாடல்: மினரல் வைட், பைடோனிக் புளு, பிளாக் சஃபையர், டெரா பிரவுன், ஆர்க்டிக் கிரெ பிரிலியன்ட் எஃபெக்ட் மற்றும் கார்பன் பிளாக் என மொத்தம் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. எக்ஸ்டிரைவ் 40ஐ மாடல் மட்டும் ஆல்பைன் வைட், வெர்மாண்ட் பிரான்ஸ் மற்றும் சொஃபிஸ்டோ கிரே பிரிலியன்ட் எஃபெக்ட் போன்ற கூடுதல் நிறங்களில் கிடைக்கிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் 24,500 யூனிட்களை கடந்துள்ளன. இத்தனை யூனிட்களை தயாரிக்க அந்நிறுவனம் ஆறு மாதங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது.

    பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் கொண்ட இரு மோட்டார்சைக்கிள்களின் விலையே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 3,993 யூனிட்களை தாயாரித்தது. இவற்றில் 2,137 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    கான்டினென்டல் ஜி.டி. 650

    மீதமுள்ள 1856 யூனிட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. சமீப மாதங்களில் 650 ட்வின் மாடல்களுக்கான ஏற்றுமதி 53.52 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களுக்கு வெளிநாட்டிலும் மோகம் அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.

    உள்நாட்டு விற்பனையை பொருத்தவரை 650 ட்வின் மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை சரிவை சந்தித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2019 இல் ராயல் என்ஃபீல்டு மொத்தம் 4,571 யூனிட்களை தயாரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 578 யூனிட்கள் அதிகம் ஆகும்.

    இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை ரூ. 2.51 லட்சம் மற்றும் ரூ. 2.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    மெர்சிடிஸ் பென்ல் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. கார் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. மாடலின் விலை பிப்ரவரி 2020 வாக்கில் அறிவிக்கப்படும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

    நான்காம் தலைமுறை ஜி.எல்.இ. மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எனினும், இதன் வெளிப்புற தோற்றம் முதல் தலைமுறை எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக நீலமாகவும், வீல்பேஸ் 80 மில்லிமீட்டர் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற அம்சம் சமீபத்தில் அறிமுகமான புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

    2020 மெர்சிடிஸ் பென்ல் ஜி.எல்.இ.

    இந்தியாவில் புதிய ஜி.எல்.இ. மாடலில் பி.எஸ். 6 ரக டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பேஸ் மாடலான ஜி.எல்.இ. 400டி காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும். இந்த என்ஜின் 330 ஹெச்.பி. @3600-4000 ஆர்.பி.எம். செயல்திறனையும் 700 என்.எம். டார்க் @1200-3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும்.

    இதைத் தொடர்ந்து ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 245 ஹெச்.பி. @4200 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-2400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். ஜி.எல்.இ. பெட்ரோல் என்ஜின் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் யூனிட் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 367 ஹெச்.பி. @5500-6100 ஆர்.பி.எம். செயல்திறனையும் 500 என்.எம். டார்க் @1600-4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். அனைத்து என்ஜின்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் ஆட்டோமேடிக் வெர்ஷன் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேரியர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மூன்று அடுக்குகளில் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது.

    ஏழு பேர் அமரக்கூடிய ஆட்டோமேடிக் எஸ்.யு.வி. கார் தனிப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஹேரியர் மாடல் இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. 

    புதிய டாடா ஹேரியர் கார் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இதன் புதிய ஸ்பை படங்களில் ஏழு பேர் அமரக்கூடிய டாடா ஹேரியர் கார் 18 இன்ச் அலாய் வீல்கள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய காரின் உயரம் 80மில்லிமீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    டாடா ஹேரியர் ஸ்பை படம்

    இதன் கூடுதல் இடத்தை மூன்றாம் அடுக்கு இருக்கையை முடிந்தவரை வசதியாக வைத்துக் கொள்ள முடியும். மூன்றாம் அடுக்கு இருக்கைகளிலும் ஏ.சி. வென்ட்கள், சார்ஜிங் சாக்கெட் மற்றும் யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி போன்றவை வழங்கப்படுகிறது.

    டாடா ஹேரியர் காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 170 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Rushlane
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் டி ராக் எஸ்.யு.வி. கார் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    2020 ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வரிசையில் டி ராக் முதல் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் டி ராக்

    இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ், எம்.ஜி. ஹெக்டார் மற்றும் ஹூன்டாய் கிரெட்டா மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டி ராக் கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    வெளிநாடுகளில் இருந்து 2500 கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இந்திய சந்தையில் டி ராக் மாடல் அதிகளவு மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் டி ராக் மாடல் ஜூன் 2020 வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் விநியோகம் துவங்கியதாக அறிவித்துள்ளது. முதற்கட்ட விநியோகம் டெல்லியில் துவங்கியுள்ளது.



    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் துவங்கியது. முதற்கட்டமாக டெல்லியில் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ரெவோல்ட் ஆர்.வி.300, ஆர்.வி.400 மற்றும் ஆர்.வி.400 பிரீமியம் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய துவங்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து புனேவில் அடுத்த மாத வாக்கில் விநியோகம் துவங்கும் என ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    முன்னதாக 2019 ஆண்டிற்கான வாகனங்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்தது. தற்சமயம் அடுத்த ஆண்டிற்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் மாத தவணை முறை வசதியில் கிடைக்கிறது.

    மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஏ.ஐ. தொழில்நுட்பம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

    ரெவோல்ட் ஆர்.வி.400 மாடலில் 3கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் மூன்று ரைடிங் மோட்கள் வெவ்வேறு கிலோமீட்டர் மற்றும் வேகத்தில் கிடைக்கிறது.
    பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ‘எம்’ சீரிசில் அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய ‘எம்8’ மாடல் கிராண் கூப் காரை காட்சிப்படுத்தி இருக்கிறது.

    இந்த காரில் 4.4 லிட்டர், டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியதாகும். மேலும் இந்த கார் ஸ்டார்ட் 3.3 விநாடி நேரத்திற்குள் மணிக்கு 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு விடமுடியும்.

    பி.எம்.டபிள்யூ. எம்8 கிராண் கூப்


    இந்த கார் மணிக்கு அதிகபட்சமாகம் 306 கிலோமீட்டர் வரை செல்லும். இது நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பின்புற சக்கர சுழற்சியை மட்டும் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இடது பக்க ஸ்டீரிங் உள்ள மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.1.40 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவுக்கு ஏற்ற மாற்றங்களுடன் (வலது புற ஸ்டீரிங் வசதியோடு) இங்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஆனிக்ஸ் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ‘ஆனிக்ஸ்’ என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.19.99 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ.21.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கேன்டி ஒயிட், கோரிடா ரெட் மற்றும் புதிய ரேஸ் புளூ வண்ணத்தில் வந்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. பெட்ரோல் மாடல் 1.8 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் கொண்டது. 180 ஹெச்.பி. திறன் 250 என்.எம். டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டு உள்ளது. டீசல் மாடல் 2 லிட்டர் டி.டி.ஐ. என்ஜினைக் கொண்டது.

    ஸ்கோடா ஆக்டேவியா ஆனிக்ஸ்

    இது 143 ஹெச்.பி. திறன், 320 என்.எம். டார்க் இழுவிசையைக் கொண்டது. டீசல் மாடல் 6 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஆக்டேவியா ஸ்டைல் வேரியன்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியோடு மிரர் லிங்க் இணைப்பு வசதி கொண்டது.

    டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, டிரைவர் இருக்கையை தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, இதேபோல பயணிகள் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்வது கூடுதல் சிறப்பாகும். ஆட்டோமேடிக் வைபர் வசதியோடு 6 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட் வசதிகளை உள்ளடக்கியதாக இது வந்து உள்ளது. 

    இத்துடன் கூடுதலாக டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகியவையும் இதில் உள்ளன. புதிய செடான் மாடல் கார் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹூண்டாய் எலன்ட்ரா, டொயோட்டா கொரோலா ஆல்டிஸ், ஹோண்டா சிவிக் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    சொகுசு கார்களை தயாரிக்கும் லெக்சஸ் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல். எனும் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    சொகுசு கார்கள் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல். மாடலை அறிமுகம் செய்தது. புதிய கார் இதில் மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது செல்ப் சார்ஜிங் ஹைபிரிட் மாடல் காராகும். 

    இந்தியாவில் இதன் விலை ரூ.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் பேட்டரியில் ஓடக் கூடியது. இதில் 3.5 லிட்டர் என்ஜின் உள்ளது. இது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டுள்ளது.

    இந்த காரில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம், தொடுதிரை என பிரீமியம் காருக்குரிய தொழில்நுட்பங்கள்  வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் அளிக்கப்பட்டு 10 ஏர் பேக்குகளை வைத்துள்ளது இந்நிறுவனம்.

    லெக்சஸ் ஆர்.எக்ஸ். 450 ஹெச்.எல்.

    இத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், இ.எஸ்.சி., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட், அசிஸ்ட் ஆக்டிவ் கார்னரிங் அசிஸ்ட், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார், ரியர் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

    பிரீமியம் மாடலில் வந்துள்ள ஹைபிரிட் எஸ்.யு.வி.க்கு வசதி படைத்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இந்த கார் ஆடி கியூ 7, பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5, மெர்சிடஸ் ஜி.எல்.இ. உள்ளிட்ட பிரீமியம் கார்களுக்குப் போட்டியாக களமிறங்கி உள்ளது.
    ×