search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா ஆக்டிவா
    X
    ஹோன்டா ஆக்டிவா

    ஆறு மாதங்களில் இத்தனை லட்சங்களா? விற்பனையில் மாஸ் காட்டும் ஹோன்டா ஆக்டிவா

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆறு மாதங்களில் இத்தனை லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2019-2020 நிதியாண்டு காலத்தின் முதல் ஆறு மாதங்களில் முன்னணி ஸ்கூட்டர் பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது.

    ஏப்ரல் முதல் செப்டம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 13,93,256 ஹோன்டா ஆக்டிவா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோன்டா ஆக்டிவா இருக்கிறது.

    ஹோன்டாவின் லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 5ஜி மாடல் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் பிரபல மாடலாக உருவெடுத்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஹோன்டா நிறுவனம் பத்து பிரீமியம் ஸ்டைலிங்கில், இரண்டு புதிய டூயல் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிக விற்பனை காரணமாக ஹோன்டா இதன் உற்பத்தியை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 

    ஹோன்டா ஆக்டிவா

    இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. துவக்கம் முதலே ஆக்டிவா மாடலின் வடிவமைப்பு, சவுகரியம், மைலேஜ், சிறந்த தொழில்நுட்பம் என பல்வேறு காரணங்களால் அதிகம் விற்பனையாகி வருகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்கிறது.

    இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஆக்டிவா மட்டும் 14 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஹன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் 56 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. 

    ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் துவக்க விலை இந்தியாவில் ரூ. 52,887 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விலை ரூ. 56,535 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆக்டிவா 125 மாடல் விலை ரூ. 62,591 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×