என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜி350டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி வேகன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி கார் விலை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஜி63 மாடல் இந்தியாவில் ரூ. 2.19 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் ஜி350டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதே என்ஜின் எஸ் கிளாஸ் 350டி மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடல் மணிக்கு 199 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் லெதர் இருக்கைகள், பவர் முன்புற சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கென மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் மொத்தம் எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
கே.டி.எம். நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த டியூக் 790 மோட்டார்சைக்கிள் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆஸ்த்ரிய நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். இந்திய சந்தையில் அதற்குள் 41 டியூக் 790 யூனிட்களை விற்பனை செய்துவிட்டது. கே.டி.எம். நிறுவனம் முதற்கட்டமாக 100 டியூக் 790 மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்திருந்தது.
இந்தியாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட டியூக் 790 மாடல் விலை ரூ. 8.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டியூக் 790 மாடல் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டு பஜாஜ் நிறுவன ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
டியூக் 790 மாடல் இந்தியாவில் சுசுகி ஜி.எஸ்.எக்ஸ். எஸ்750, டுகாடி மான்ஸ்டர் 797, டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில், யமஹா எம்.டி. 09 மற்றும் கவாசகி இசட்900 மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. போட்டி நிறுவன மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணிக்கப்பட்டுள்ள போதிலும் டியூக் 790 மாடல் பத்தே நாட்களில் 41 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

டியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். மற்றும் 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்: ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் எலெக்டிரானிக் ஏய்டுகள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது. கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் டு-வே ஷிஃப்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
மற்ற அம்சங்களை பொருத்தவரை கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்பனைட் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அர்பனைட் பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் படிப்படியாக விற்பனைக்கு வர இருக்கிறது.
புதிய வாகனம் என்ற போதும் அர்பனைட் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டராக இருந்த செட்டாக் மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இ ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இதன் மீது பிரஷ் செய்யப்பட்ட குரோம் ஹைலைட்கள், வட்ட வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இதன் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
யமஹா நிறுவனத்தின் பேசினோ பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
யமஹா நிறுவனத்தின் வாகனங்கள் ஒவ்வொன்றாக பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. புதிய புகை விதிகள் அமலாகும் முன் யமஹாவின் பேசினோ ஸ்கூட்டர் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு அப்டேட் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் பேசினோ பி.எஸ். 6 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் பேசினோ பி.எஸ். 6 ஸ்கூட்டர் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய என்ஜின் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி புதிய ஸ்கூட்டரில் தற்போதைய மாடலில் உள்ளதை விட பெரிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கையின் கீழ் அதிக இட வசதியை எதிர்பார்க்கலாம். தற்சமயம் விற்பனை செய்யப்படும் பேசினோ பி.எஸ். 6 மாடலில் 21 லிட்டர் இட வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

பி.எஸ். 6 பேசினோ ஸ்கூட்டரில் புதிய அலாய் வீல்கள், முன்புறம் 12 இன்ச் மற்றும் பின்புறம் 10 இன்ச் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லர் கேப், கூர்மையான டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்சமயம் விற்பனையாகும் யமஹா பேசினோ ஸ்கூட்டரில் 113சிசி சிங்கில் சிலி்ண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.2 பி.ஹெச்.பி. பவர், 8.2 என்.எம். டார்க் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே செயல்திறன் வழங்கும் என்ஜின் புதிய ஸ்கூட்டரிலும் எதிர்பார்க்கலாம்.
புகைப்படம் நன்றி: Zigwheels
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் கணிசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் மாடல் கார் ஐந்து ஆண்டுகளில் 14,022 யூனிட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக கலராடோ மாடல் இத்தனை யூனிட்களை கடக்க பத்து ஆண்டுகள் ஆனது.
ஹரிகேன் கூப் வெர்ஷன் கார் 2014 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் ஸ்பைடர் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2018 ஆம் ஆண்டு பெர்ஃபார்மனேட் ஸ்பைடர் மாடல் காரின் செயல்திறன் அளவில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு புதிய ஹரிகேன் இவோ மாடல் அடுத்த தலைமுறை வி10 என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லம்போர்கினி மொத்தம் 4553 கார்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 96 சதவிகிதம் அதிகம் ஆகும்.
இதில் ஹரிகேன் மாடல் 1,211 யூனிட்களும், ஹரிகேன் பர்ஃபார்மனேட் மாடலும் அடங்கும். அதன்பின் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹரிகேன் இவோ மாடலுக்கான வினியோகம் ஜூன் மாதத்தில் துவங்கியது. அவென்டெடார் வி12 எஸ்.வி.ஜே. மாடல் 649 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டன.
டெக்னோ எலெக்ட்ரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
புனேவை சேர்ந்த டெக்னோ எலெக்ட்ரா இ ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவை நியோ, ரேப்டார் மற்றும் எமெர்ஜ் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவி்ல் அறிமுகமான சில மாதங்களில் இவற்றின் விலையை குறைப்பதாக டெக்னோ எலெக்ட்ரா தெரிவித்துள்ளது.
மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ. 41,557, ரூ. 57,423 மற்றும் ரூ. 68,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது முந்தைய விலையை விட ரூ. 2,410, ரூ. 3,348 மற்றும் ரூ. 4,141 குறைவு ஆகும்.
இந்திய சந்தையில் இ.வி. வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து விலை குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக டெக்னோ எலெக்ட்ரா தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்தது.

வரி குறைப்பைத் தொடர்ந்து பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை குறைப்பதாக அறிவித்து வருகின்றன.
மூன்று புதிய ஸ்கூட்டர்களில் எமெர்ஜ் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இது நியோ-ரெட்ரோ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.சி.டி. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் யு.எஸ்.பி. போர்ட், ஃபார்வேர்டு, ரிவர்ஸ் மற்றும் நியூட்ரல் மோட்களுக்கு ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் எமெர்ஜ் மாடலில் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 250 வோல்ட் BLDC மோட்டாருடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.
டெக்னோ எலெக்ட்ரா எமெர்ஜ் மாடலின் சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எர்டிகா எம்.பி.வி. காரின் டூர் எம் டீசல் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. புதிய மாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் வேரியண்ட்களை தொடர்ந்து எர்டிகா டூர் எம் மாடலில் இது மூன்றாவது வேரியண்ட் ஆகும். முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் மே மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்பட்டன.
மற்ற எர்டிகா டூர் எம் வேரியண்டகளை போன்று புதிய டீசல் மாடல் கால் டாக்சி மற்றும் டிராவல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி எர்டிகா டூர் எம் டீசல் மாடல் ஸ்டான்டர்டு VDi வேரியண்ட்டை தழுவி உருவாகியிருக்கிறது. இதன் விலை ரூ. 5000 வரை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா டூர் எம் டீசல் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரியர் காம்பினேஷன் லேம்ப், குரோம் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, அடஜஸ்ட் செய்யக்கூடிய ல்டீரிங் மற்றும் மவுண்ட் கண்ட்ரோல்கள், பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கு மாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட்டில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் அசிஸ்ட், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய எர்டிகா டூர் எம் மாடலிலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த 1498சிசி 4 சிலிண்டர் டீசல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மும்பையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா நெக்சான் இ.வி. கார் மும்பையில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் நெக்சான் கார் 2020 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டாடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரில் சிப்டிரான் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.
சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. இதன் தோற்றம் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் நெக்சான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், விற்பனைக்கு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இ.வி. கார் தோற்றத்தில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.

காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. நெக்சான் இ.வி. மாடலில் மேம்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த கார் புதிய நிறத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதன் ஸ்பீடோமீட்டர் அனலாக் டையல் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் டாடா நெக்சான் இ.வி. கார் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது ஸ்டான்டர்டு மாடலை விட பிரிமீயம் அம்சங்களை கொண்டிருக்கிறது என்ற போதும், ஹூன்டாய் கோனா இந்த மாடலை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.
கோனா எஸ்.யு.வி. ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரிக்கு எட்டு வருட வாரண்டியும், மோட்டார் வாரண்டியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹை வோல்டேஜ் டிரைவ்டிரெயின், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: overdrive
மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டு கார்களில் பி.எஸ். 6 ரக என்ஜின் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஏப்ரல் 2020 முதல் விற்பனைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த விதிகளுக்கு பொருந்த வேண்டும் என்பதால், பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பி.எஸ். 6 அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டத் துவங்கியுள்ளன.
பலேனோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, எக்ஸ்.எல்.6 மற்றும் சமீபத்தில் அறிமுகமான எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்கள் பி.எஸ். 6 ரக என்ஜின்களை கொண்டிருக்கின்றன. மாருதி சுசுகி நிறுவன விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு இயக்குனர் சஷான்க் ஸ்ரீவத்சவா விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் மாடல்களும் விரைவில் பி.எஸ். 6 அப்டேட் பெறும் என தெரிவித்தார்.

தற்சமயம் டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்படும் கார்களில் 1.5 லி்ட்டர் K சீரிஸ் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன.
இதே என்ஜின் மாருதி சுசுகியின் சியாஸ், எர்டிகா மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்.எல்.6 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. சிறிய டீசல் என்ஜின் கொண்டிருக்கும் வாகனங்கள் பி.எஸ். 6 அப்டேட் பெறாது என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல் வாகனங்களை பி.எஸ். 4 இல் இருந்து பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கான கட்டணம் அதிகம் என்பதால் அப்டேட் வழங்கும் திட்டமில்லை என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் பற்றிய விவரங்கள் வெளியாகலாம்.
யமஹா நிறுவனத்தின் ஆர்15 3.0 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆர்15 3.0 மோட்டார்சைக்கிள் விலை அதிகரித்துள்ளது. யமஹா ஆர்15 3.0 ஸ்டான்டர்டு மற்றும் டார்க்நைட் எடிஷன் மாடல்களின் விலை ரூ. 600 அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யமஹா ஆர்15 3.0 துவக்க விலை ரூ. 1,40,880 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வு யமஹா ஆர்15 3.0 ஸ்டான்டர்டு மற்றும் டார்க்நைட் எடிஷன்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 டார்க்நைட் எடிஷன் விலை ரூ. 1,42,880 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யமஹா ஆர்15 மோட்டோஜிபி எடிஷன் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விலை ரூ. 1,42,780 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திடீர் விலை உயர்வுக்கு இதுவரை எவ்வித காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

மற்ற நிறுவனங்கள் தங்களின் வாகனங்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், யமஹா தனது வாகன விலையை அதிகரித்திருக்கிறது. இந்திய சந்தையில் யமஹா ஆர்15 அதிக பிரபல மாடலாக இருக்கிறது. தற்சமயம் மூன்றாம் தலைமுறை மாடல் விற்பனையாகிறது.
யமஹா ஆர்15 3.0 மாடலில் 155சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர் @10,000 ஆர்.பி.எம். செயல்திறனும், 14.7 என்.எம். டார்க் @8500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பாவின் பெலாரஸ் பகுதியில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கார் ஐரோப்பிய நம்பர் பிளேட் கொண்டிருக்கிறது. இது பெரும்பாலும் வணிக விளம்பரத்திற்காக படப்பிடிப்பின் இடைவேளையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
காரின் முன்புறம் பெரிய லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டிலும் மல்டி-லேயர் லேஅவுட் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இம்பேக்ட் 2.0 தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா நிறுவனத்தின் ஹேரியர் காரும் இதே தளத்தில் வடிவமைக்கப்பட்டது.
அல்ட்ரோஸ் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட 45எக்ஸ் கான்செப்ட் மாடல் ஆகும். அல்ட்ரோஸ் காரின் மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்ப்லிட் ரூஃப் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புற கதவோரத்தில் பில்லர் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், பிரத்யேக கிளாஸ்ஹவுஸ் காணப்படுகிறது.

அல்ட்ரோஸ் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. அல்ட்ரோஸ் காரில் கீலெஸ் என்ட்ரி மற்றும் கோ, 16 இன்ச் ரிம்கள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.
இதன் டேஷ்போர்டு வடிவைப்பு ஹேரியர் மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் ஸ்பீடோமீட்டர், பெரிய மல்டி-இன்ஃபோ-டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் ஹேரியர் மாடலில் உள்ளதை விட சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதன் யூசர் இன்டர்ஃபேசில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது.
புகைப்படம் நன்றி: Team BHP
வோல்வோ நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொகுசு கார்களைத் தயாரிக்கும் வோல்வோ நிறுவனம் இப்போது பேட்டரி எஸ்.யு.வி. மாடல் கார்களையும் தயாரித்து அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. எக்ஸ்.சி 40. என்ற பெயரில் மிகவும் பாதுகாப்பான, சிறிய ரக எஸ்.யு.வி.யாக இது இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த ஜீலி குழுமம் வாங்கிஉள்ளது. இருப்பினும் சுவீடனின் கோதென்பர்க் நகரில் உள்ள டோர்ஸ்லான்டா என்ற இடத்தில் தலைமையகத்தைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேட்டரி காருக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மாறிவரும் சூழலில் வோல்வோ நிறுவனமும் பேட்டரி கார் தயாரிப்பில் தீவிரம் காட்டியுள்ளது.
இந்நிறுவனத் தயாரிப்புகளில் பாதிக்கும் மேலான வாகனங்களை பேட்டரி வாகனங்களாக தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடுத்த 6 ஆண்டுகளில் எட்ட முடிவு செய்து முதலாவதாக எக்ஸ்.சி 40. மாடலை பேட்டரி காராக களமிறங்க திட்டமிட்டுள்ளது.

வோல்வோ தயாரிப்புகளில் எக்ஸ்.சி 40. மாடல் மிகவும் பிரபலமானது. இதில் பேட்டரி காரை அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்ட இந்த பேட்டரி காருக்கான முன்புற சக்கரத்திற்காக பிரத்யேகமாக ஒரு என்ஜினும், பின்புற சக்கரத்திற்காக பிரத்யேகமாக ஒரு என்ஜினும் உள்ளது. மோட்டாரை இயக்கத் தேவைப்படும் பேட்டரியை காரின் கீழ் பகுதியில் வைத்துள்ளது.
பெட்ரோலில் இயங்கும் எக்ஸ்.சி 40. மாடலை பேட்டரி மாடலாக உருமாற்றம் செய்யும்போது அதற்கேற்ப தேவையான மாற்றங்களை இந்நிறுவனம் செய்துள்ளது. பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பானவையாக இருக்கும் வகையில் பேட்டரியின் மேல்பகுதி அலுமினியத்தால் ஆனதாக இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தக் காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டென்ட் சிஸ்டம் (ஏ.டி.ஏ.எஸ்.) சென்சார் உள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான போல்ஸ்டார் தனது பேட்டரி காரில் 78 கிலோவாட் பேட்டரியை பயன்படுத்திஉள்ளது. அந்தக் கார் 408 ஹெச்.பி. திறன் மற்றும் 660 என்.எம் டார்க் செயல்திறனை கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் ஓடக் கூடியது.
இதே தொழில்நுட்பத்தை எக்ஸ்.சி 40. பேட்டரி காரிலும் இந்நிறுவனம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் காரை முழுவதும் இறக்குமதி செய்து விற்பனை செய்வதா அல்லது பெங்களூருவில் உள்ள ஆலையில் அசெம்பிளி செய்து விற்பனை செய்வதா என்பது குறித்தும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.






