search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா நெக்சான்
    X
    டாடா நெக்சான்

    மும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மும்பையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    டாடா நெக்சான் இ.வி. கார் மும்பையில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் நெக்சான் கார் 2020 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டாடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரில் சிப்டிரான் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.

    சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. இதன் தோற்றம் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் நெக்சான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், விற்பனைக்கு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இ.வி. கார் தோற்றத்தில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    நெக்சான் இ.வி. ஸ்பை படம்

    காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. நெக்சான் இ.வி. மாடலில் மேம்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த கார் புதிய நிறத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதன் ஸ்பீடோமீட்டர் அனலாக் டையல் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் டாடா நெக்சான் இ.வி. கார் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது ஸ்டான்டர்டு மாடலை விட பிரிமீயம் அம்சங்களை கொண்டிருக்கிறது என்ற போதும், ஹூன்டாய் கோனா இந்த மாடலை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    கோனா எஸ்.யு.வி. ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரிக்கு எட்டு வருட வாரண்டியும், மோட்டார் வாரண்டியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹை வோல்டேஜ் டிரைவ்டிரெயின், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: overdrive
    Next Story
    ×