என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2020 எம்.டி.-15 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.
புதிய யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் விலை முந்தைய மாடலை விட ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் ரூ. 1.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2020 யமஹா எம்.டி. 15 பி.எஸ். 6 மாடல் ஐஸ் ஃபுளு வெர்மிலான் நிறத்தில் கிடைக்கிறது. இதன் அலாய் வீல்கள் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் டார்க் மேட் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். பிரேக் வழங்கப்படுகிறது.

பி.எஸ். 6 எம்.டி. 15 மாடலில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.3 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் 19 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார் பார்க்க வழக்கமான டிகுவான மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
எனினும், புதிய காரின் வீல்பேஸ் நீளமாக இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. நீளம் 4701 எம்.எம். அளவிலும், அகலம் 1839 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உயரம் 1674 எம்.எம். அளவில் இருக்கிறது. தரையில் இருந்து வீல்பேஸ் உயரம் 2787 எம்.எம். அளவு இருக்கிறது.

புதிய டிகுவான் காரின் வீல்பேஸ் நீளமாக இருப்பதால், இந்த கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படங்ளின் படி புதிய காரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் போன்றவை வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய டிகுவான் மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறம் பார்க்க ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் 2.0 லிட்டர் பி.எஸ். 6 ரக TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ், ஃபோக்ஸ்வேகன் 4மோஷன் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். இ.வி. காரின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காரை அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில். எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் டிசம்பர் 21 ஆம் தேதி துவங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது.

எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் ஹூண்டாய் கோனா காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சான் இ.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சான் இ.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
டாடா நெக்சான் இ.வி. காரின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கும் நிலையில், இதன் முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. புதிய நெக்சான் இ.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரின் விலை வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்.
எனினும், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் டாடா நெக்சான் இ.வி. காரின் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும்.
டாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு சார்ஜ் செய்யும் போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். வீட்டில் உள்ள சார்ஜர் பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் ஒரு நிமிடம் சார்ஜ் செய்யும் போது நான்கு கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் 50 சதவீதம் சார்ஜ் கொண்டு 150 கீலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஃபேசினோ 125 எஃப்.ஐ. ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய 2020 ஃபேசினோ 125 எஃப்.ஐ. ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் யமஹா நிறுவனத்தின் முதல் 125 சிசி ஸ்கூட்டராக புதிய ஃபேசினோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 ஃபேசினோ 125 எஃப்.ஐ. விலை ரூ. 66,430 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய யமஹா ஃபேசினோ 12 எஃப்.ஐ. ல்கூட்டர் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 113 சிசி ஸ்கூட்டருக்கு மாற்றாக வெளியாகி இருக்கிறது.

புதிய 125சிசி மொத்தம் இரண்டு வேரிண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டார் எண்ட் மாடல் விலை ரூ. 69,930 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய யமஹா ஃபேசினோ 125 எஃப்.ஐ. ஸ்கூட்டரில் 125சிசி புளூ கோர் சிங்கிள் சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9.7 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஃபேசினோவின் எரிபொருள் பயன்பாடு முந்தைய மாடலை விட 16 சதவீதம் வரை மேம்பட்டு இருக்கிறது.
மேலும் புதிய ஸ்கூட்டர் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஃபேசினோ மாடலை விட 4 கிலோ வரை எடை குறைவு ஆகும். இத்துடன் புதிய ஸ்கூட்டரில் புதிய 12 இன்ச் அலாய் வீல்கள், யு.எஸ்.பி. சார்ஜிங், மடிக்கக்கூடிய ஹூக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஆறு முன்னணி நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஒட்டுமொத்தமாக 19 சரிவடைந்து இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். மோட்டார், ராயல் என்பீல்டு, சுசுகி மோட்டார்சைக்கிள் ஆகிய ஆறு நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்கள் பிரிவில் முன்னணியில் உள்ளன.
கடந்த நவம்பர் மாதத்தில் இந்த 6 முன்னணி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 15 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தின் விற்பனையை விட 19 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 18.74 லட்சமாக இருந்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 5.16 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 6.10 லட்சமாக இருந்தது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை (3.19 லட்சத்தில் இருந்து) 2.66 லட்சமாக குறைந்துள்ளது. உள்நாட்டில் இதன் விற்பனை 1.91 லட்சமாக குறைந்து இருக்கிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டார் இந்தியா விற்பனை நவம்பர் மாதத்தில் 3.96 லட்சமாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 4.18 லட்சமாக இருந்தது. உள்நாட்டில் விற்பனை 5 சதவீதம் குறைந்து 3.73 லட்சமாக உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 0.9 சதவீதம் குறைந்து 4.03 லட்சமாக இருக்கிறது.
உள்நாட்டில் இந்நிறுவனம் மொத்தம் 2.34 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 69,755- ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 23 சதவீதம் உயர்வாகும். ராயல் என்பீல்டு நிறுவனம், நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி உள்பட மொத்தம் 60,411 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்து 58,292-ஆக குறைந்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் (2018-19) இரு சக்கர வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,11,81,390-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) விற்பனை 28 லட்சம் இரு சக்கர வாகனங்களாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இரு சக்கர வாகனங்கள் விற்பனை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என முன்னணி வாகன நிறுவனம் ஒன்று மதிப்பீடு செய்து இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் காரின் கேப்ன் வரைபடம் வெளியாகியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது விஷன் ஐ.என். கான்செப்ட் காரின் முதல் உட்புற வரைபடங்களை வெளியிட்டுள்ளது. புதிய கான்செப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் 2.0 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் வாகனம் ஆகும். ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய கார் 2021 ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

காரின் டேஷ்போர்டு அகலமாகவும், பல்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டின் ஓரங்களில் ஏர்-கான் வென்ட் இடம்பெற்றுள்ளது. இதன் மத்தியில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் விர்ச்சுவல் காக்பிட் மற்றும் புதிய க்ரிஸ்டலைன் எலிமென்ட் உடன் வழங்கப்படுகிறது.
கேபினில் 3-ஸ்போக் மல்டி-ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல் பட்டன்களுடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் 4.26 மீட்டர் நீலமாக இருக்கும் என ஸ்கோடா ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. புதிய விஷன் ஐ.என். கான்செப்ட் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவன்தின் வேகன் ஆர் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் விற்பனை துவங்கியது முதல் இதுவரை 1,03,325 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது.
நவம்பர் 2019 இல் மாருதி வேகன் ஆர் மொத்தம் 14,650 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.5 சதவீதம் அதிகம் ஆகும். மாருதியின் டால் பாய் மாடலுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்சமயம் விற்பனையாகும் மாருதி வேகன் ஆர் மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள்: 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் மற்றும் 90 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாருதியின் ஏ.ஜி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மாருதியின் வேகன் ஆர் பெட்ரோல் மாடல் விலை ரூ. 4.42 லட்சத்தில் துவங்கி ரூ. 5.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை வாங்குவோருக்கு ரூ. 1.66 லட்சம் மதிப்புள்ள பலன்களை அறிவித்துள்ளது.
2019 ஆண்டு இறுதி நெருங்கி வருவதையொட்டி டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.சி.எக்ஸ். மற்றும் டிரையம்ப் 800 எக்ஸ்.ஆர்.எக்ஸ். மாடல்களுக்கு ரூ. 1.66 லட்சம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களை வாங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினியம் பேனியர் செட், ரூ. 31,000 மதிப்புள்ள இரண்டு ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 35,000 மதிப்புள்ள ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் டிசம்பர் 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர டைகர் 800 எக்ஸ்.ஆர். மாடலுக்கு ரூ. 2.88 லட்சம் மதிப்புள்ள பலன்களை வழங்குவதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினியம் பேனியர் செட் தவிர, இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் 2020 என்டேவர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் 2020 என்டேவர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் அப்டேட் செய்யப்பட்டது.
புதிய ஸ்பை படங்களில் புதிய என்டேவர் காரில் மிக குறைவான காஸ்மெடிக் அப்டேட்களும், பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் காரில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 385 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 3.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 200 பி.ஹெச்.பி. பவர், 470 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு என்டேவர் காரின் தற்போதைய விலை ரூ. 29.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 34.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ரக மாடல்களின் விலை ரூ. 3.5 லட்சத்தில் துவங்கி ரூ. 5.5 லட்சம் வரை விலை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 ஃபோர்டு என்டேவர் அறிமுகமானதும் டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஸ்கோடா கோடியாக் மற்றும் இசுசு எம்.யு. எக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புகைப்படம் நன்றி: Rushlane
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் செடான் மாடல் ஆரா காரின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா காம்பேக்ட் செடான் காரின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அந்நிறுவனத்தின் எக்ஸ் சென்ட் மாடலுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரைபடங்களின் படி ஹூண்டாய் ஆரா காம்பேக்ட் செடான் மாடலில் அதிரடியான ஸ்போர்ட் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், பெரிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது.

காரின் பக்கவாட்டில் எளிமையான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் சி பில்லர், ஃபுளோட்டிங் ரூஃப் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறத்தில் புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ரூஃப் ஸ்லோப்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பார்க்க கூப் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.
டேஷ்போர்டு டூயல் டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இது நியோஸ் காரில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா காரில் கியர் லீவர் சென்டர் கன்சோலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெறுகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெறுகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 23.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூன்டாய் கோனா இ.வி. காரில் 39.2 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ARAI சான்றுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

கோனா இ.வி. மாடலில் உள்ள பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 52 நிமிடங்களே போதும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான சார்ஜிங் முறைகளில் ஹூன்டா கோனா இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்பது மணி நேரம் ஆகும்.
ஹூன்டாய் கோனா இ.வி. மாடலில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பி.ஹெச்.பி. பவர் 395 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நிமிடங்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






