search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிரையம்ப் 800 எக்ஸ்.ஆர்.
    X
    டிரையம்ப் 800 எக்ஸ்.ஆர்.

    மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ. 1.66 லட்சம் மதிப்புள்ள பலன்களை வழங்கும் டிரையம்ப்

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை வாங்குவோருக்கு ரூ. 1.66 லட்சம் மதிப்புள்ள பலன்களை அறிவித்துள்ளது.



    2019 ஆண்டு இறுதி நெருங்கி வருவதையொட்டி டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.சி.எக்ஸ். மற்றும் டிரையம்ப் 800 எக்ஸ்.ஆர்.எக்ஸ். மாடல்களுக்கு ரூ. 1.66 லட்சம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களை வாங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினியம் பேனியர் செட், ரூ. 31,000 மதிப்புள்ள இரண்டு ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 35,000 மதிப்புள்ள ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகிறது.

    டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.சி.எக்ஸ்.

    இந்த சலுகைகள் டிசம்பர் 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதுதவிர டைகர் 800 எக்ஸ்.ஆர். மாடலுக்கு ரூ. 2.88 லட்சம் மதிப்புள்ள பலன்களை வழங்குவதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினியம் பேனியர் செட் தவிர, இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×