என் மலர்
ஆட்டோமொபைல்

ஃபோர்டு என்டேவர்
இணையத்தில் வெளியான 2020 ஃபோர்டு என்டேவர் புதிய ஸ்பை படங்கள்
ஃபோர்டு நிறுவனத்தின் 2020 என்டேவர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் 2020 என்டேவர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் அப்டேட் செய்யப்பட்டது.
புதிய ஸ்பை படங்களில் புதிய என்டேவர் காரில் மிக குறைவான காஸ்மெடிக் அப்டேட்களும், பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் காரில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 385 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 3.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 200 பி.ஹெச்.பி. பவர், 470 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு என்டேவர் காரின் தற்போதைய விலை ரூ. 29.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 34.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ரக மாடல்களின் விலை ரூ. 3.5 லட்சத்தில் துவங்கி ரூ. 5.5 லட்சம் வரை விலை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 ஃபோர்டு என்டேவர் அறிமுகமானதும் டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஸ்கோடா கோடியாக் மற்றும் இசுசு எம்.யு. எக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புகைப்படம் நன்றி: Rushlane
Next Story






