என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2020 CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2020 ஆஃப்ரிக்கா ட்வின் மாடலின் துவக்க விலை ரூ. 15.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலில் பல்வேறு எலெக்டிரிக்கல் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல்: ஸ்டான்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களிலும் 1084 சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ப்ரோடெக்டிவ் ஃபிரேம்வொர்க், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், பெரிய ஃபியூயல் டேன்க், டியூப்லெஸ் டையர் மற்றும் என்ஜின் பேஷ் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டான்டர்டு அம்சங்களை பொருத்தவரை இரு வேரியண்ட்களிலும் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோண்டா செலக்டபில் டிராக்ஷன் கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், மூன்று நிலைகளில் வீலி கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் லைட்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில் நான்கு நிலைகளில் என்ஜின் செயல்திறன் மற்றும் மூன்று நிலைகளில் எலெக்டிரானிக் என்ஜின் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளன. 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் 1084 சிசி பேரலெல் ட்வின் என்ஜின் 101 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம்., 105 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. அந்த வகையில் வரும் வாரங்களில் டாமினர் 250 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை மையங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புதிய ஸ்பை படங்களில் டாமினர் 250 மாடல் பார்க்க டாமினர் 400 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் புதிய டாமினர் 250 சிவப்பு நிறத்தில் புதிதாக டி250 பேட்ஜ் கொண்டிருக்கிறது.

புதிய டாமினர் 250 மோட்டார்சைக்கிளில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் கே.டி.எம். டியூக் 250 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டாமினரில் இந்த என்ஜின் செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 விலை ரூ. 1.50 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.6 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டாமினர் 250 முன்பதிவுகள் விரைவில் துவங்கி விநியோகம் அறிமுக நிகழ்வையொட்டி துவங்கும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக போலோ மற்றும் வென்டோ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக போலோ மற்றும் வென்டோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடல்களின் துவக்க விலை ரூ. 5.82 லட்சம் மற்றும் ரூ. 8.82 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய போலோ மற்றும் வென்டோ மாடல்கள் தற்சமயம் பி.எஸ்.6 ரக 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது அதிக மைலேஜ் மற்றும் சீரான செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டி.எஸ்.ஐ மற்றும் எம்.பி.ஐ. தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

புதிய 1.0 லிட்டர் என்ஜின் முந்தைய 1.2 லிட்டர் யூனிட்டிற்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் உயர் ரக மாடல்களில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படலாம்.
புதிய 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் அதிக மைலேஜ், சிறப்பான செயல்திறன் வழங்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்கள் டிரென்ட்லைன், கம்ஃபொர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஹைலைன் பிளஸ் உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரை வாங்க 20 நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். 6 விட்டாரா பிரெஸ்ஸா காரினை வாங்க 20 நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் இந்த எஸ்.யு.வி. மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய விட்டாரா பிரெஸ்ஸா பார்க்க பி.எஸ்.4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் எல்.இ.டி. லைட்டிங், புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.

புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் K சீரிஸ் யூனிட் ஆகும். இதே என்ஜின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் டாப் எண்ட் மாடல்களில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய பெட்ரோல் என்ஜின் தவிர மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காரின் உள்புறம் ஸ்டீரிங் வீல் லெதர் ஸ்டிராப் செய்யப்பட்டு, ஆட்டோ டிம்மிங் IRVMகள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவி்ட்டி கொண்டிருக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. ஸ்டான்டர்டு மாடல்களுடன் அந்நிறுவனம் ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 1,22,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் பி.எஸ். 4 ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் மாடல் ரூ. 1,10,605 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வடிவமைப்புகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய பி.எஸ். 6 சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் மெட்டாலிக் ட்ரிடான் புளூ நிறத்தில் விசேஷ லிவரி கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில்லைட், ஸ்போர்ட்டி டூயல் மஃப்ளர், 6 ஸ்போக் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஸ்டைல் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் அம்சங்களில் 155சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, SOHC என்ஜின் SEP தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13.4 பி.ஹெச்.பி. பவர், 13.8 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பி.எஸ்.4 மாடலில் உள்ளதை விட 1.2 பி.ஹெச்.பி. மற்றும் 0.2 என்.எம். டார்க் வரை குறைவு ஆகும்.
இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவன என்ஜினுடன் உருவாகும் ஃபோர்டு கார் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களிடையே 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இரு நிறுவனங்களிடையே கனெக்ட்டெட் வெஹிகில் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் மற்றும் வாகனங்களை உருவாக்குவது போன்ற பணிகளில் இணைந்து செயல்பட இருநிறுவனங்களும் திட்டமிட்டன.
அந்த வகையில் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ் வெளியாகும் முதல் வாகனமாக ஃபோர்டு இகோஸ்போர்ட் உருவாகி இருக்கிறது. இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தின் என்ஜின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய இகோஸ்போர்ட் காரில் மஹிந்திரா நிறுவனத்தின் 1.2 லிட்டர் டி ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இது தற்சமயம் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் என்ஜினுக்கு மாற்றாக அமைகிறது. 1.2 லிட்டர் டி ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் மஹிந்திராவின் எம் ஸ்டாலியன் பிரிவை சேர்ந்தது ஆகும்.
ஜி12 எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய பி.எஸ்.6 என்ஜின் 130 பி.ஹெச்.பி. பவர், 230 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. எனினும், ஃபோர்டு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ஆப்ஷன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஜி.எல்.சி. கூப் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜி.எல்.சி. கூப் மாடல் காரினை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடல் துவக்க விலை ரூ. 62.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெர்சிடிஸ் நிறுவனத்த்ன் MBUX தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2020 ஜி.எல்.சி. கூப் மாடல்: 300டி 4 மேடிக் மற்றும் 300 4 மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் உயர் ரக டீசல் மாடலின் விலை ரூ. 63.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அசெம்பிள் செய்யப்படும் பத்தாவது மெர்சிடிஸ் மாடலாக புதிய கூப் மாடல் இருக்கும் என தெரிகிறது.

புதிய காரின் முன்புறம் மெர்சிடிஸ் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் டைமண்ட் பேட்டன் கிரில், இருபுறங்களிலும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், புதிய அலாய் வீல்கள், பின்புறம் மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், மோல்ட் செய்யப்பட்ட டிஃப்யூசர், புதிய எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்புறம் 10.25 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் மாடல் பி.எஸ். 6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கிறது. இவற்றில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி.எல்.சி. கூப் 300 4 மேடிக் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஜி.எல்.சி. கூப் 300டி 4 மேடிக் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் ஸ்டான்டர்டு 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
ஜீப் நிறுவனம் இந்தியாவில் புதிய ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் ராங்ளர் ரூபிகான் மாடலின் துவக்க விலை ரூ. 64.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வருவதாக ஜீப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜீப் ராங்ளர் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான விநியோகம் மார்ச் 15-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.
உலக சந்தையில் முன்னணி ஆஃப் ரோடர் மாடல்களில் ஒன்றாக ஜீப் ராங்ளர் ரூபிகான் இருக்கிறது. ஜீப் ராங்ளர் ரூபிகான் மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த என்ஜின் தவிர ஜீப் ராங்ளர் ரூபிகான் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் ஏர்பேக், பார்க் அசிஸ்ட் சிஸ்டம், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டிரெயிலர் ஸ்வே கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிப்ரவரி மாத காலத்தில் டி.வி.எஸ். மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை சரிவடைந்து இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிந்து (2.99 லட்சத்தில் இருந்து) 2.53 லட்சமாக குறைந்து இருக்கிறது. இதில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 94,367-ஆக உள்ளது. ஸ்கூட்டர்கள் விற்பனை (85,299-ல் இருந்து) 72,383-ஆக குறைந்துள்ளது.
மொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் சரிவடைந்து (2.85 லட்சத்தில் இருந்து) 2.35 லட்சமாக குறைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 3 சதவீதம் குறைந்து 1.18 லட்சமாக உள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 30 சதவீதம் குறைந்து 60,633-ஆக இருக்கிறது.

உள்நாட்டில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 27 சதவீதம் குறைந்து 1.69 லட்சமாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2.31 லட்சமாக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்து 82,877-ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 66,570-ஆக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3.54 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 10 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் இதன் இரு சக்கர வாகனங்கள் விற்பனை (1.86 லட்சத்தில் இருந்து) 1.46 லட்சம் வாகனங்களாக குறைந்து இருக்கிறது.
இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து 1.63 லட்சமாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1.41 லட்சமாக இருந்தது.
இந்தியாவில் பொருளாதார மந்த நிலை தொடர்வதால் வர்த்தக வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
இந்தியாவில் தொடரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு பொருட்களின் விற்பனை சரிந்து வருகிறது. இதில் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை.
குறிப்பாக வர்த்தக வாகனங்களின் விற்பனை மோசமான சரிவை சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வர்த்தக வாகன விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது 35 சதவீதம் சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த வர்த்தக வாகன விற்பனையை விட கடந்த மாதம் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது.
டாடா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 39 ஆயிரத்து 111 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த பிப்ரவரியில் 25 ஆயிரத்து 572 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது 35 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்த நிறுவனத்தின் மீடியம் மற்றும் ஹெவி வர்த்தக வாகனங்கள் விற்பனை 46 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அசோக்லேலேண்ட் நிறுவனம் மீடியம் மற்றும் ஹெவி வாகனங்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆயிரத்து 621 எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆயிரத்து 745 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது 47 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.
மேலும் இந்த நிறுவனம் லாரி விற்பனையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11 ஆயிரத்து 117 லாரிகளை விற்றிருந்தது. இந்த ஆண்டு 4 ஆயிரத்து 706 லாரிகள் தான் விற்றுள்ளன. இது 58 சதவீத வீழ்ச்சி ஆகும். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் பஸ் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 1504 பஸ்கள் விற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் 2 ஆயிரத்து 39 பஸ்கள் விற்றுள்ளது. இது 36 சதவீத வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்தமாக இந்த நிறுவனத்தின் வாகன விற்பனை 39 சதவீதம் சரிந்திருக்கிறது.
பஜாஜ் நிறுவனம் 35 ஆயிரத்து 183 வாகனங்களை விற்றிருந்த நிலையில் இப்போது 21 ஆயிரத்து 871 ஆக குறைந்துள்ளது. இது 38 சதவீத வீழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல இரு சக்கர வாகன விற்பனையும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. ஆனால் சுசுகி நிறுவன இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிக அளவில் விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு 57 ஆயிரத்து 174 வாகனங்கள் விற்றிருந்தன. அவை இப்போது 58 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. இது 2.6 சதவீதம் அதிகம் ஆகும். டி.வி.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 582 வாகனங்களை விற்றிருந்தது. அது இப்போது 1 லட்சத்து 69 ஆயிரத்து 684 ஆக குறைந்துள்ளது.
ஹீரோ நிறுவனம் கடந்த ஆண்டு 6 லட்சத்து 614 வாகனங்களை விற்றுள்ளது. இப்போது இப்போது 4 லட்சத்து 80 ஆயிரத்து 196 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இது 20 சதவீத வீழ்ச்சி ஆகும். பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு 1 லட்சத்து 86 ஆயிரத்து 523 வாகனம் விற்றிருந்தது. இப்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 876 வாகனங்களை விற்றுள்ளது.
மொத்தத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த ஆண்டு 10 லட்சத்து 75 ஆயிரத்து 895 வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன. இப்போது 8 லட்சத்து 55 ஆயிரத்து 400 வாகனங்கள் விற்றுள்ளன. இது 21 சதவீத வீழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்து உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய 2020 இ கிளாஸ் மாடல் காருக்கான டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அதிக பிரபலமான கார் மாடலாக இருக்கிறது. 2021-ம் ஆண்டிற்கு மெர்சிடிஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் மாடலினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் 2020 ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட இருந்தது.
எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த அச்சம் காரணமாக ஜெனிவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் மெர்சிடிஸ் நிறுவனம் புதிய காரினை டிஜிட்டல் முறையில் உலக சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கென மெர்சிடிஸ் நிறுவனம் புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது.

டீசர்களில் புதிய காரின் முன்புறம் ட்வீக் செய்யப்பட்டு கூர்மையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், சற்றே மேம்பட்ட கிரில் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. இதே போன்று காரின் பின்புறமும் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காரில் ஹைப்ரிட் என்ஜின் செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. காரின் உள்புறம் தற்போதைய இ கிளாஸ் மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அந்த வகையில் ட்வின் ஸ்கிரீன் செட்டப், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் கியா கார்னிவல் ஆடம்பர எம்.பி.வி. கார் விற்பனை பிப்ரவரி மாதத்தில் அதிகரித்து இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,620 கார்னிவல் எம்.பி.வி. கார்களை விற்றுள்ளது.
இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா கார்னிவல் விலை ரூ. 24.95 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கியா கார்னிவல் கார் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது என மூன்று வித இருக்கை அமைப்புகளில் பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமோசின் என மூன்று ட்ரிம் மற்றும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

கார்னிவல் கார் மட்டுமின்றி செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலையும் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் செல்டோஸ் கார் மொத்தம் 14,024 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இரு கார்கள் தவிர கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. காரினை சொனெட் எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் 2020 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட இருக்கிறது.
இந்த கார் இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.






