search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2020 மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ்"

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் காரின் முழு விவரங்களை பார்ப்போம்.
    இந்தியாவில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் முற்றிலும் உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூப்பர் எஸ் மாடலை விட இதன் விலை ரூ.9.2 லட்சம் அதிகமாகும். தற்சமயம் கூப்பர் எஸ் மாடல் விலை ரூ.34.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மூன்று கதவுகளைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக வெளியாகியுள்ள இந்த கார் 231 ஹெச்.பி. திறனும், 320 என்.எம். டார்க் இழுவிசையும் கொண்டதாகும். இந்த கார் 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இதில் 8 ஸ்பீடுகியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.



    கூப்பர் எஸ் மாடலில் 7 கியர்கள் மட்டுமே உள்ளன. புதிய மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் பத்து அழகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு வித்தியாசமான வண்ணக் கலவைகளைக் கொண்டதாக இது உள்ளது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒரு நிறத்தில் உள்ளது.

    இதற்கு 17 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. மேட்ரிக்ஸ் எல்.இ.டி. விளக்கு, மேற்கூரை ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. தேவைப்பட்டால் 18 அங்குலம் கொண்ட சக்கரங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

    இதன் உள்பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார் உள்ளது. அத்துடன் ரிவர்ஸ் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் சஸ்பென்ஷன் இருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதியும் உள்ளது.
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை இந்தியா பெற்றுள்ளது. #FIFAWomensWorldCup #U17WWC #IndianFootball #SAFF
    மியாமி:

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.



    ‘இந்திய கால்பந்து சங்கம், 2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்த உள்ளது’ என பிபா தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் இதனை உறுதி செய்தார்.

    2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவின் தேசிய பெண்கள் அணி நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறது. அங்கு புதன்கிழமை நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. #FIFAWomensWorldCup #U17WWC #IndianFootball #SAFF
    2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். #NitinGadkari #Ganga
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம் நாக்பூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ரூ.26 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 30 முதல் 40 சதவீதம் சுத்தம் செய்யும் பணி நிறைவடையும்.

    2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. கங்கை மட்டுமன்றி அதன் கிளை நதிகளையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நம்பிக்கை தெரிவித்தார். #SharathKamal #Olympics
    சென்னை:

    இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் சரத் கமல், ஹர்மீத் தேசாய், அமல்ராஜ், சத்யன் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும், கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்-மனிகா பத்ரா ஆகியோரை கொண்ட இந்திய ஜோடியும் வெண்கலப்பதக்கம் வென்றது. 1958-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியா பதக்கம் வென்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார், வேளச்சேரி நீச்சல் வளாக அதிகாரி கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பதக்கம் வென்று சாதனை படைத்த 36 வயதான சரத் கமல் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் ‘டாப்-10’ இடங்களில் உள்ள 7 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நமது ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் என்னுடன் ஜோடி சேர்ந்த மனிகா பத்ராவும் அருமையாக விளையாடினார்.

    சவால் நிறைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோவில் (ஜப்பான்) 2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. என்னுடைய இந்த வெற்றியில் எனது பயிற்சியாளர்கள், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் எனது குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனது பதக்கத்தை பயிற்சியாளர்கள் இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

    2004-ம் ஆண்டு முதல் நான் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறேன். இதே உத்வேகமும், உடல் தகுதியும் நீடித்தால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை கூட என்னால் விளையாட முடியும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக கடினமாக தயாராகுவதே எனது அடுத்த இலக்காகும்

    இவ்வாறு சரத் கமல் தெரிவித்தார். 
    ×