search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக வாகனங்கள்"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணி வர்த்தக வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கிறது.
    • பயணிகள் வாகனங்கள் பிரிவிலும் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி வர்த்தக வாகன நிறுவனமாக இருக்கிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விலை ஜூலை 1, 2022 முதல் உயர்த்தப்பட இருக்கின்றன. இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி டாடா வர்த்தக வாகனங்கள் விலை 1.5 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.


    விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். வாகன உற்பத்திக்கு ஏற்படும் செலவீனங்களை குறைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏராளமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தொடர் விலை உயர்வு காரணமாக வாகனங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கார், பயன்பாட்டு வாகனம், பிக்-அப் வாகனம், டிரக் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனனங்களை விற்பனை செய்வதில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகன பிரிவில் இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கிறது.

    ×