என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். விற்பனையாளர்கள் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் துவங்கியதாக தெரிவித்துள்ளன. இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரு மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ. 1.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு கட்டணம் ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மோட்டார்சைக்கிள்கள் கோவாவில் நடைபெற்ற 2019 இந்திய பைக் வாரம் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஸ்வீடன் நாட்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹஸ்க்வர்னா கே.டி.எம். குழுமத்தின் அங்கமாக இந்திய சந்தைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹஸ்க்வர்னாவின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இரு மாடல்களிலும் 248.76சிசி ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யும் பணிகள் துவங்கி இருக்கிறது.
சொனெட் கான்செப்ட் மாடலை தழுவிய புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் இந்த கார் சப்காம்பேக்ட் எல்.யு.வி. என்பது உறுதியாகி இருக்கும் நிலையில் இதன் அலாய் வீல்கள் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது.

காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டேடைம் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
முன்புற பம்ப்பர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள், பெரிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரை சேர்ந்த யுலு எனும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ. 60 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் இந்நிறுவனம் தற்தமயம் குறைந்த செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யுலு பிராண்டிங்கில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 40 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. யுலு பிராண்டு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவதற்கு ரூ. 44 ஆயிரம் வரை செலவிடுகிறது. யுலு நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களை சீனாவில் உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவில் அசெம்பில் செய்கிறது.

இவ்வாறு செய்யும் போது ஸ்கூட்டர் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கி ரூ. 37 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் பஜாஜ் மாடல்களை விட சிறப்பான ஒன்றாக இருக்க வேண்டும் என யுலு விரும்புவதாக தெரிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பஜாஜ் ஆட்டோ உருவாக்கிய சுமார் 1 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள யுலு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் ஐந்து நகரங்களில் 4000 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது. யுலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 48 வோல்ட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இவை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் எஸ்.யு.வி. கார் மாடல் முன்பதிவில் 300 யூனிட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டி ராக் எஸ்.யு.வி. மாடலினை மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதுவரை சுமார் 300 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிகுவான் ஆல்ஸ்பேஸ், டி ராக் மற்றும் டைகுன் என மூன்று மாடல் கார்களை வெளியிட ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வரிசையில் நான்காவதாக புதிய எஸ்.யு.வி. ஒன்று இணைந்து இருக்கிறது. எனினும் புதிய எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை.

புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 205 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொணடிருக்கிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.4 நொடிகளில் எட்டிவிடும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய டாமினர் 250 மோட்டார்சைக்கிளுக்கான வீடியோ டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய பஜாஜ் டாமினர் 250 வரும் நாட்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது.
டீசர் வீடியோவில் பஜாஜ் டாமினர் 250 இடம்பெறவில்லை என்ற போதும், இது விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனும் தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் டாமினர் 250 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருந்தது.
தோற்றத்தில் டாமினர் 250 மாடல் பார்க்க டாமினர் 400 போன்றே காட்சியளிக்கிறது. மேலும் டாமினர் 250 சிவப்பு நிறத்தில் டி250 பேட்ஜ் கொண்டிருக்கிறது.

புதிய டாமினர் 250 மோட்டார்சைக்கிளில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் கே.டி.எம். டியூக் 250 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டாமினரில் இந்த என்ஜின் செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 விலை ரூ. 1.50 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.6 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டாமினர் 250 முன்பதிவுகள் விரைவில் துவங்கி விநியோகம் அறிமுக நிகழ்வையொட்டி துவங்கும் என கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தன் வாகனங்கள் உற்பத்தியை குறைத்து இருக்கிறது.
பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தன் வாகனங்கள் உற்பத்தியை 5.38 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாடுகளை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அண்மைக் காலமாக இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை.
விற்பனை நிலவரம் திருப்தி இல்லாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 5.38 சதவீதம் குறைத்து 1,40,933 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 1,48,959 வாகனங்களை உற்பத்தி செய்து இருந்தது.

இந்நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,47,110 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இது 1.1 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 1,48,682-ஆக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 1.6 சதவீதம் சரிவடைந்து 1,36,849-ஆக குறைந்துள்ளது.
இந்நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.1,587 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 4.1 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.1,524 கோடியாக இருந்தது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரின் துவக்க விலை ரூ. 33.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஐந்து பேர் அமரக்கூடிய டிகுவான் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடலாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியாகி இருக்கிறது. புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் வாகனமாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் இருக்கிறது. மேலும் புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்.யு.வி. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 மோஷன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்: ஹபனிரோ ஆரஞ்சு மெட்டாலிக், பியூர் வைட், ரூபி ரெட் மெட்டாலிக், பெட்ரோலியம் புளூ, பிளாட்டினம் கிரே மெட்டாலிக், பைரிட் சில்வர் மற்றும் டீப் பிளாக் பியல் என ஏழு நிறங்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. முதல் முறையாக அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் புதிய காரில் பி.எஸ். 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடலில் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு பார்க்க ஹனிகொம்ப் மெஷ் போன்று காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், புதிதாக எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்புற மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய அலாய் வீல்களும் வழங்கப்படலாம்.
வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வெஸ்பா எலெக்ட்ரிக் மற்றும் அப்ரிலியா ஆர்.எஸ்.660 மாடல்கள் இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இரு மாடல்களின் விலை சற்றே அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பாவின் பாரம்பரிய வடிவமைப்பில் வளைந்த பாடி பேனல்கள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. முன்புறம் இன்டிகேட்டர்கள் அப்ரானில் பொருத்தப்பட்டுள்ளது.

பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் இன்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் பிரெஷ்லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டாருடன் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் வெஸ்பா எலெட்ரிக்கா 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இகோ மற்றும் பவர் என இரண்டு மோட்கள் உள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது டிசையர் மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2020 மாருதி சுசுகி டிசையர் மாடலில் புதிய பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் புதிய செடான் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிய ஸ்பை படங்களின் படி காரின் முன்புற வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காரின் கிரில் ஏர் டேமுடன் இணையும் வகையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்புற ஃபாக் லேம்ப் ஹவுசிங்கள் மாற்றப்பட்டு, புதிய குரோம் இன்செர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்புற வடிவமைப்பு மாற்றங்கள் தவிர, புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பின்புறமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அலாய் வீல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. உள்புறம் 2020 டிசையர் மாடலில் மாருதியின் புதிய ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் வழங்கப்படலாம்.

இதுதவிர காரில் புதிய இருக்கை கவர்கள் மற்றும் புதிய ஃபாக்ஸ் வுட் வடிவமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிசையர் காரின் மிகப்பெரும் மாற்றாக பி.எஸ். 6 ரக என்ஜின் இருக்கிறது. இதில் 1.2 லிட்டர் கே12சி டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இதே என்ஜின் பலேனோ ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ளதை விட 7 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும்.
ஜெனிசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஜி80 கார் ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜெனிசிஸ் நிறுவனம் புத்தம் புதிய ஜி80 மாடலை ஆன்லைன் மூலம் அறிமுகம் செய்தது. புதிய ஜி80 மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இது ஆத்லெடிக் எலிகன்ஸ் வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இதிலுள்ள கிரெஸ்ட் கிரில், குவாட்லேம்ப்களிடையே செல்லும் இரண்டு கோடுகள் கார் முழுக்க நீண்டு இருப்பது ஜெனிசிஸ் பாரம்பரயத்தை பிரதிபலிக்கிறது.

புதிய ஜி80 தோற்றத்தில் அழகாகவும், அதிநவீன அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. காரின் பின்புறம் குவாட்லேம்ப்கள் மற்றும் ஹார்ஸ்ஷூ வடிவமைப்பு டெக்லிட் காணப்படுகிறது. இதன் டிரன்க் ரிலீஸ் பட்டன் மற்றும் சரவுன்டிங் குரோம் கார்னிஷ் ஜெனிசிஸ் லோகோவை பிரதிபலிக்கிறது.
காரின் உள்புறம் டேஷ்போர்டில் 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மெல்லிய ஏ.சி. வென்ட்கள் கேபின் வழியே நீள்கிறது. புசிய ஜி80 மாடல் இம்மாதமே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய வடிவமைப்பு, பவர்டிரெயின்கள் மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 எக்ஸ்1 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. இந்தியாவில் 2020 எக்ஸ்1 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடல்: ஸ்போர்ட் எக்ஸ், எக்ஸ்லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடலான பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 1 ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 42.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் எக்ஸ் லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் ஸ்போர்ட் எக்ஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் டாப் எண்ட் ஸ்போர்ட் எக்ஸ் மாடல் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

அதன்படி பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடலில் பி.எஸ். 6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. மேம்பட்ட 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 192 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம்., 280 என்.எம். டார்க் @ 1350 - 4600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
இதன் டீசல் யூனிட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 400 என்.எம். டார்க் @ 1700-2500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது. டீசல் என்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடல்: ஆல்பைன் வைட், பிளாக், பிளாக் சஃபையர், கிளேசியர் வைட், மினரல் வைட், மினரல் கிரே, ஸ்பார்க்ளிங் பிரவுன், ஸ்பார்க்ளிங் ஸ்டாம், மெடிட்டரேனியன் புளூ, சன்செட் ஆரஞ்சு, ஜூகாரோ பெய்க் மற்றும் ஸ்டாம் பே மெட்டாலிக் என 12 நிறங்களில் கிடைக்கிறது.






