search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி டிசையர்
    X
    மாருதி சுசுகி டிசையர்

    இணையத்தில் லீக் ஆன மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது டிசையர் மாடலின் புதிய வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2020 மாருதி சுசுகி டிசையர் மாடலில் புதிய பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் புதிய செடான் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    புதிய ஸ்பை படங்களின் படி காரின் முன்புற வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காரின் கிரில் ஏர் டேமுடன் இணையும் வகையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்புற ஃபாக் லேம்ப் ஹவுசிங்கள் மாற்றப்பட்டு, புதிய குரோம் இன்செர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    முன்புற வடிவமைப்பு மாற்றங்கள் தவிர, புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பின்புறமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அலாய் வீல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. உள்புறம் 2020 டிசையர் மாடலில் மாருதியின் புதிய ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் வழங்கப்படலாம்.

    மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    இதுதவிர காரில் புதிய இருக்கை கவர்கள் மற்றும் புதிய ஃபாக்ஸ் வுட் வடிவமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிசையர் காரின் மிகப்பெரும் மாற்றாக பி.எஸ். 6 ரக என்ஜின் இருக்கிறது. இதில் 1.2 லிட்டர் கே12சி டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இதே என்ஜின் பலேனோ ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலில் உள்ளதை விட 7 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும்.
    Next Story
    ×