search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி.
    X
    கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி.

    இணையத்தில் லீக் ஆன கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஸ்பை படங்கள்

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யும் பணிகள் துவங்கி இருக்கிறது. 

    சொனெட் கான்செப்ட் மாடலை தழுவிய புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் இந்த கார் சப்காம்பேக்ட் எல்.யு.வி. என்பது உறுதியாகி இருக்கும் நிலையில் இதன் அலாய் வீல்கள் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. 

    கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஸ்பை படம்

    காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டேடைம் லேம்ப்களை கொண்டிருக்கிறது.

    முன்புற பம்ப்பர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள், பெரிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

    கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×