search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன்
    X
    ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன்

    இந்தியாவில் பி.எஸ். 6 ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் அறிமுகம்

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. ஸ்டான்டர்டு மாடல்களுடன் அந்நிறுவனம் ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 1,22,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    தற்சமயம் பி.எஸ். 4 ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் மாடல் ரூ. 1,10,605 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வடிவமைப்புகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன்

    புதிய பி.எஸ். 6 சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டோ ஜி.பி. எடிஷன் மெட்டாலிக் ட்ரிடான் புளூ நிறத்தில் விசேஷ லிவரி கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில்லைட், ஸ்போர்ட்டி டூயல் மஃப்ளர், 6 ஸ்போக் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஸ்டைல் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மெக்கானிக்கல் அம்சங்களில் 155சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, SOHC என்ஜின் SEP தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13.4 பி.ஹெச்.பி. பவர், 13.8 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பி.எஸ்.4 மாடலில் உள்ளதை விட 1.2 பி.ஹெச்.பி. மற்றும் 0.2 என்.எம். டார்க் வரை குறைவு ஆகும்.

    இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×