என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டாமினர் 250 சிசி மோட்டார்சைக்கிள் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படுகிறது. பலமுறை இவற்றின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. புதிய டாமினர் 250 சிசி மோட்டார்சைக்கிளில் கே.டி.எம். டியூக் 250 மாடலி்ல் உள்ள பவர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் புதிய டாமினர் மாடலில் 249சிசி சிங்கிள் சிலிணடர் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எனினும், டாமினர் 250 மாடலில் இந்த என்ஜின் டி-டியூன் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய பஜாஜ் டாமினர் இந்திய விலை ரூ. 1.45 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் பல்சர் 150 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 மாடல்- பல்சர் 150 மற்றும் பல்சர் 150 ட்வின் டிஸ்க் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் புதிய ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக செயல்திறன் மற்றும் சிறப்பான எரிபொருள் பயன்பாட்டினை வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை பிப்ரவரி 2020 மாதத்தில் சரிவை சந்தித்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
இந்திய ஆட்டமொபைல் சந்தையில் பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1,47,110 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இது 1.1 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 1,48,682-ஆக இருந்தது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 1.6 சதவீதம் சரிந்து (1,39,100-ல் இருந்து) 1,36,849-ஆக குறைந்துள்ளது.
மாருதியின் ஆல்டோ, வேகன் ஆர் போன்ற சிறிய கார்களின் விற்பனை 11.1 சதவீதம் உயர்ந்து 27,499-ஆக அதிகரித்துள்ளது. ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிசையர், பலினோ உள்ளிட்ட காம்பாக்ட் கார்கள் விற்பனை 3.9 சதவீதம் குறைந்து 69,828-ஆக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 72,678-ஆக இருந்தது.

நடுத்தர செடான் சியஸ் கார்கள் விற்பனை (3,084-ல் இருந்து) 2,544-ஆக குறைந்துள்ளது. மாருதி ஜிப்சி, கிராண்ட் விடாரா, எர்டிகா, எஸ் கிராஸ் மற்றும் விடாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 3.5 சதவீதம் அதிகரித்து 22,604-ஆக இருக்கிறது.
பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 7.1 சதவீதம் உயர்ந்து 10,261 கார்களாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 9,582-ஆக இருந்தது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2020 ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ரக 2020 ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளை பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் வெளியிட்டு இருந்தது. அந்த வரிசையில் தற்சமயம் புதிய ஜாவா மற்றும் ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள்களை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து இருக்கிறது.

புதிய ஜாவா மற்றும் ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள்களில் 293 சிசி, சிங்கிள் சிலிண்டல், 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. கிராஸ் போர்ட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலாக இது வெளியாகி இருக்கிறது.
இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாட் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். உடன் வழங்கப்படகிறது. இதன் பேஸ் வெர்ஷன் பின்புறம் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய கிரெட்டா காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய கிரெட்டா எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய கிரெட்டா காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களை 2020 கிரெட்டா எஸ்.யு.வி. கொண்டிருக்கிறது.
2020 ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவில் மார்ச் 17-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதற்கான விநியோகம் மார்ச் 17 முதல் துவங்கும் என தெரிகிறது. வெளியானதும் புதிய கிரெட்டா எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் கியா செல்டோஸ், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள் மற்றும் பத்து வித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவைதவிர புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதே என்ஜின்கள் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் 115 பி.எஸ். பவர், 1.4 லிட்டர் டி -ஜி.டி.ஐ. மோட்டார் 140 பி.எஸ். செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கிரெட்டா மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக், சி.வி.டி. மற்றும் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2020 கிரெட்டா கார்: இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ்.(ஒ) என ஐந்து முக்கிய வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனத்தின் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் தனது ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலையில் ரூ. 5000 உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையி்ல் விலை உயர்வையடுத்து புதிய ஆர்.வி.400 மோட்டார்சைக்கிளை முழு தொகை செலுத்தி வாங்கும் போது ரூ. 1,03,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத தவணையில் வாங்குவோருக்கு ரூ. 3999 மாத தவணையினை 37 மாதங்களில் இருந்து 38 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 3999 என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கும் ஃபேம் 2 வரிச்சலுகைகளை சேர்த்தே புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆர்.வி.400 மோட்டார்சைக்கிளை மாத தவணையில் வாங்கியவர்களுக்கு விலை உயர்வு அமலாகாது. இதன் குறைந்த அம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிளான ஆர்.வி.300 விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் ஆர்.வி.300 மோட்டார்சைக்கிள் ரூ. 2,999 எனும் மாத தவணையினை 37 மாதங்களுக்கோ அல்லது ஒரே தவணையில் வாங்கும் போது ரூ. 84,999 (எக்ஸ்-ஷோரூம்) செலுத்த வேண்டும்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புத்தம் புதிய ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல் இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி வெளியாகும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய சி.ஆர்.எஃப்.1100எல் ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில் தற்சமயம் 1,084 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய என்ஜின் அலுமினியம் சிலிண்டர் ஸ்லீவ், மேம்பட்ட கேசிங் கொண்டிருக்கிறது. இதனால் இதன் எடை 2.5 கிலோ வரை குறைந்துள்ளது.
மேலும் இதில் மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கிறது. மோட்டார்சைக்கிளின் எடை குறைந்து இருப்பதால், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மோடில் இது லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் மற்றும் 20.8 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த என்ஜின் நான்குவித செயல்திறன், மூன்றுவித எலெக்டிரானிக் என்ஜின் பிரேக்கிங் மற்றும் ஏழு நிலைகளில் ஹோண்டா செலக்டபில் டிராக்ஷன் கண்ட்ரோல் வழங்குகிறது. இத்துடன் ஹோண்டாவின் வீலி கண்ட்ரோல் தொழில்நுட்பம் மேம்பட்ட ஃபேரிங் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
மேலும் இதில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்பட்டுள்ளது. 2020 ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில்- டூர், அர்பன், கிரேவல் மற்றும் ஆஃப்-ரோடு என நான்கு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல் தற்சமயம் ரூ. 13.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2020 மாடல்களின் விலை ரூ. 14.50 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 16.50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஜெனிவா மோட்டார் விழா 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூலம் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுவிட்சர்லாந்து அரசாங்கம், பொது மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளதை தொடர்ந்து மோட்டார் விழா ரத்தாகி இருக்கிறது.

2020 ஜெனிவா மோட்டார் விழா மார்ச் 5-ம் தேதி துவங்கி மார்ச் 15-ம் தேதி வரை நடைபெற இருந்தது. 1000-க்கும் அதிகமானோர் கூடும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், எதுவரை தடை விதிக்கப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
2020 ஜெனிவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டுவதாக விழா ஏற்பாட்டு குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு வர்த்தக நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஃபோஸ்வேகன் நிறுவனத்தின் புத்தம் புதிய போலோ செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடங்களை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த தொடர்ச்சியாக, தற்சமயம் போலோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய போலோ கார் விற்பனை முதற்கட்டமாக ரஷ்யாவில் நடைபெற இருக்கிறது.
புதிய போலோ மாடல் 4483 எம்.எம். நீளமாகவும், 1484 எம்.எம். உயரமாகவும், முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 170 எம்.எம். அளவில் இருக்கிறது. தோற்றத்தில் புதிய போலோ செடான் மாடல் அகலமான கிரில், கூர்மையான ஹெட்லேம்ப்கள் மற்றும் குரோம் பிட்களை கொண்டிருக்கிறது.

இதன் பின்புற வடிவமைப்பு எளிமையாக காட்சியளிக்கிறது. இதுதவிர கதவுகள், கிளாஸ்ஹவுஸ் மற்றும் ரூஃப் உள்ளிட்டவை ஸ்கோடா ரேபிட் போன்றே தெரிகிறது. உள்புறம் மல்டி-லேயர் டேஷ்போர்டு, இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய போலோ செடான் மாடல் - 90 பி.ஹெச்.பி. அல்லது 110 பி.ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 1.6 லிட்டர் எம்.பி.ஐ. பெட்ரோல் மற்றும் 125 பி.ஹெச்.பி. பவர் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இதன் 1.6 லிட்டர் வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் ஹீரோ சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 67,300 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மாடலில் புதிய 125சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.73 பி.ஹெச்.பி. பவர், 10.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதில் புரோகிராம் செய்யப்பட்ட ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் எக்ஸ் சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடல்களை விட 19 சதவீதம் கூடுதல் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பி.எஸ்.6 சூப்பர் ஸ்பிலென்டர் மோட்டார்சைக்கிளில் ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மாடல்களில் புதிய டைமண்ட் ஃபிரேம் சேசிஸ், ரீவொர்க் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டுபவருக்கு சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் அல்லது முன்புறம் 240 எம்.எம். டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் காம்பி பிரேக் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மாடல்கள்- கேண்டி பிளேசிங் ரெட், கிளேஸ் பிளாக், ஹெவி கிரே மற்றும் புதிதாக மெட்டாலிக் நெக்சஸ் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ். 6 மாடல்கள் புஷ் ஸ்டார்ட் பட்டன், டிரம் பிரேக் அலாய் வீல்கள் கொண்ட வேரியண்ட் மற்றொன்று புஷ் ஸ்டார்ட் பட்டன், முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல்கள் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 70,800 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள், பத்து வித நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது 2020 கிரெட்டா மாடல் காரினை மார்ச் 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், காரின் பெரும்பாலான விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள் மற்றும் பத்து வித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவைதவிர புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதே என்ஜின்கள் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் 115 பி.எஸ். பவர், 1.4 லிட்டர் டி -ஜி.டி.ஐ. மோட்டார் 140 பி.எஸ். செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கிரெட்டா மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக், சி.வி.டி. மற்றும் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் புதிய 2020 கிரெட்டா கார்: இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ்.(ஒ) என ஐந்து முக்கிய வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. நிறங்களை பொருத்தவரை எட்டு ஒற்றை டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இவற்றில் மல்பெரி ரெட், கேலக்ஸி புளூ, டைஃபூன் சில்வர், ஃபேண்டம் பிளாக், லாவா ஆரஞ்சு மற்றும் போலார் வைட் உள்ளிட்டவை ஒற்றை நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஐரோப்பியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கே.டி.எம். தனது பெரும்பாலான வாகனங்களை இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. கே.டி.எம். ஸ்போர்ட் கார் ஜி.எம்.பி.ஹெச். கொண்டு அந்நிறுவனம் ஸ்போர்ட் கார்கள் பிரிவில் களமிறங்குகிறது.
கே.டி.எம். நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்த கே.டி.எம். எக்ஸ் போ மற்றும் அதன் பின் வெளியான மாடல்கள் உலகம் முழுக்க விற்பனை செய்யப்பட்டன. அந்த வரிசையில் கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
புதிய கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். மாடலினை சுமார் 1000 கிலோ எடையில் அதிகபட்சம் 600 ஹெச்.பி. திறன் வழங்கும் வகையில் உருவாக்கி இருக்கிறது. இதற்கு ஆடியின் 2.5 லிட்டர், 5 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.டி.2 ரேசராக களமிறங்கும் கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். இரண்டு கிலோ எடைக்கு ஒரு ஹெச்.பி. திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்படுகிறது.

முதல் 20 கார்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் எஸ்.ஆர்.ஒ. எனும் சுய ஒழுங்குமுறை வாரியத்தால் உறுதி செயப்பட்டு, பின் ஜி.டி.2 ரேசிங் சீரிசில் களமிங்க முடியும். அந்த வகையில் ஆடி மற்றும் போர்ஷ் நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது நிறுவனமாக இதுபோன்ற ரேசிங் காரை உருவாக்கிய பெருமையை கே.டி.எம். பெறுகிறது.
இதுதவிர புதிய 500 ஹெச்.பி. வரையிலான செயல்திறன் வழங்கும் என்பதால், கே.டி.எம். எக்ஸ் போ ஜி.டி.எக்ஸ். ஜி.டி. விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் ரேசிங் சீரிஸ்களிலும் பங்கேற்க முடியும்.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஆக்டேவியா ஆர்.எஸ். 245 காருக்கான முன்பதிவுகளை ஆன்லைன் தளத்தில் நடைபெற இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்.எஸ். 245 காருக்கான முன்பதிவினை மார்ச் 1-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஸ்கோடா ஆக்டேவியா 245 கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல் வெறும் 200 யூனிட்களே முன்பதிவு செய்ய முடியும். 2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 காரின் விலை ரூ. 36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல்- ரேலி கிரீன், ரேஸ் புளூ, கொரிடா ரெட், மேஜிக் பிளாக் மற்றும் கேண்டி வைட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. ஆர்.எஸ். 245 மாடலில் 242 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இதன் விலை ஸ்கோடா ஆக்டேவியா எல் அண்ட் கே வேரியண்ட்டை விட ரூ. 13 லட்சம் வரை அதிகமாகி உள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் ஆடி மாடல்களில் உள்ளதை போன்ற விர்ச்சுவல் காக்பிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.






