search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வர்த்தக வாகனங்கள்
    X
    வர்த்தக வாகனங்கள்

    பொருளாதார மந்த நிலை காரணமாக வர்த்தக வாகனங்கள் விற்பனை சரிவு

    இந்தியாவில் பொருளாதார மந்த நிலை தொடர்வதால் வர்த்தக வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.



    இந்தியாவில் தொடரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு பொருட்களின் விற்பனை சரிந்து வருகிறது. இதில் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை.

    குறிப்பாக வர்த்தக வாகனங்களின் விற்பனை மோசமான சரிவை சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வர்த்தக வாகன விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது 35 சதவீதம் சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த வர்த்தக வாகன விற்பனையை விட கடந்த மாதம் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது.

    டாடா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 39 ஆயிரத்து 111 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த பிப்ரவரியில் 25 ஆயிரத்து 572 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது 35 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்த நிறுவனத்தின் மீடியம் மற்றும் ஹெவி வர்த்தக வாகனங்கள் விற்பனை 46 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அசோக்லேலேண்ட் நிறுவனம் மீடியம் மற்றும் ஹெவி வாகனங்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆயிரத்து 621 எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆயிரத்து 745 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது 47 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.

    மேலும் இந்த நிறுவனம் லாரி விற்பனையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11 ஆயிரத்து 117 லாரிகளை விற்றிருந்தது. இந்த ஆண்டு 4 ஆயிரத்து 706 லாரிகள் தான் விற்றுள்ளன. இது 58 சதவீத வீழ்ச்சி ஆகும். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் பஸ் விற்பனை அதிகரித்துள்ளது. 

    பஜாஜ்

    கடந்த ஆண்டு 1504 பஸ்கள் விற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் 2 ஆயிரத்து 39 பஸ்கள் விற்றுள்ளது. இது 36 சதவீத வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்தமாக இந்த நிறுவனத்தின் வாகன விற்பனை 39 சதவீதம் சரிந்திருக்கிறது.

    பஜாஜ் நிறுவனம் 35 ஆயிரத்து 183 வாகனங்களை விற்றிருந்த நிலையில் இப்போது 21 ஆயிரத்து 871 ஆக குறைந்துள்ளது. இது 38 சதவீத வீழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல இரு சக்கர வாகன விற்பனையும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. ஆனால் சுசுகி நிறுவன இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிக அளவில் விற்பனையாகி இருக்கிறது. 

    கடந்த ஆண்டு 57 ஆயிரத்து 174 வாகனங்கள் விற்றிருந்தன. அவை இப்போது 58 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. இது 2.6 சதவீதம் அதிகம் ஆகும். டி.வி.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 582 வாகனங்களை விற்றிருந்தது. அது இப்போது 1 லட்சத்து 69 ஆயிரத்து 684 ஆக குறைந்துள்ளது. 

    ஹீரோ நிறுவனம் கடந்த ஆண்டு 6 லட்சத்து 614 வாகனங்களை விற்றுள்ளது. இப்போது இப்போது 4 லட்சத்து 80 ஆயிரத்து 196 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இது 20 சதவீத வீழ்ச்சி ஆகும். பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு 1 லட்சத்து 86 ஆயிரத்து 523 வாகனம் விற்றிருந்தது. இப்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 876 வாகனங்களை விற்றுள்ளது.

    மொத்தத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த ஆண்டு 10 லட்சத்து 75 ஆயிரத்து 895 வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன. இப்போது 8 லட்சத்து 55 ஆயிரத்து 400 வாகனங்கள் விற்றுள்ளன. இது 21 சதவீத வீழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×