என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடாலன ஜாகுவார் ஐ பேஸ் முன்பதிவை துவங்கி உள்ளது. ஜாகுவார் ஐ பேஸ் ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த மாடல் புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, இகெய்ர் கிரே, போர்டோபினோ புளூ, பரலூன் பியல் பிளாக் மற்றும் அருபா போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
இதில் உள்ள 90 கிலோவாட் பேட்டரி எட்டு வருடங்கள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐந்து வருடங்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ், ஐந்து ஆண்டுகளுக்கு ஜாகுவார் ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், 7.4 கிலோவாட் ஏசி வால் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் மைல்கல் எட்டி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. இதன் காரணமாக புதிய தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் ஏழு மாதங்களாக அதிகரித்து இருக்கிறது.
புதிய தார் மாடல் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.

புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் தனது அபாச்சி சீரிஸ் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்ததாக அறிவித்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1.31 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை ரூ. 2500 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல் அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட் போன்ற ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 3 ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் 197.75சிசி, ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.21 பிஹெச்பி பவர், 16.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேம்பட்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல் கிளாஸ் பிளாக், பியல் வைட் மற்றும் புதிய மேட் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து இன்னோவா ஸ்பெஷல் எடிஷன் மாடல் நீக்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் வலைதளத்தில் இருந்து இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மாடல் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மாடல் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருந்தது. இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறதா என டொயோட்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக ஸ்பெஷல் எடிஷன் இன்னோவா மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
மழைக்கலாங்களில் கார் பயன்படுத்துவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
மழைக்காலங்களில் கார் ஓட்டுவதை தவிர்க்கவே பலரும் நினைப்பர். அவ்வாறு குறைந்த அளவு பயன்படுத்தும் போது என்ஜினின் இயக்கமும் குறைவாக இருக்கும். அதனால் பேட்டரியில் தேவையான அளவு மின்சாரம் சேமிக்க முடியாமல் போவதால் சில நேரங்களில் என்ஜினை அணைத்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போது, ஸ்டார்ட் ஆகாது.
எனவே மழை காலங்களில் காரைப் பயன்படுத்தாவிட்டாலும் தினமும் ஸ்டார்ட் செய்து ஒரு 10 நிமிடம் வரை என்ஜினை இயக்க செய்வதால் பேட்டரியில் மின் அளவு குறையாமல் இருக்கும்.
கூலிங் பேன் இயங்காமல் போவதும் உண்டு. தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டும்போது பம்பர் கிரில் வழியாக தண்ணீர் வேகமாக கூலிங் பேன் உள்ள திசையை நோக்கி வரும், அப்படி வந்த தண்ணீர் கூலிங் பேன் மோட்டார் மீது படும்போது, மோட்டார் ஷார்ட் ஆக வாய்ப்பு அதிகம். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மெதுவாக வாகனம் ஓட்டுவது நல்லது.

மழைக்காலங்களில் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகும். இது அதிகம் ஓடாத கார்களில் அதிகமாக நிகழும். ஏனென்றால் டயர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பது ஒரு காரணம். அது மட்டும் இல்லாமல் ஓடாமல் உள்ள டயரில் கல் மற்றும் கண்ணாடி போன்றவை எளிதில் உள்ளே சென்று டியூப்பை பஞ்சர் செய்து விடும்.
தண்ணீர் மிக அதிகம் தேங்கியுள்ள பகுதியில் (சைலன்ஸர் வரை) வாகனம் செல்லும்போது என்ஜின் ஆப் ஆகி விட்டால் திரும்பவும் ஸ்டார்ட் செய்யக்கூடாது. தண்ணீரில் இருந்து வெளியே நகர்த்தி பின்பு என்ஜினில் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்த்து விட்டு தண்ணீர் புகாமல் இருந்தால் என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு இயக்கலாம்.
அதேபோல் மழைக்காலங்களில் அடிக்கடி ஏர் பில்டரை பரிசோதிப்பது சிறந்தது. ஏனென்றால் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் செல்லும்போது தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. இதில் தண்ணீர் போனால் ஏர் பில்டரில் அடைப்பு ஏற்படலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்சி 43 ஏஎம்ஜி கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி 4மேடிக் கூப் மாடல் இந்திய சந்தையில் ரூ. 76.70 லட்சம், எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஏஎம்ஜி மாடல் ஆகும்.
இந்த மாடல் பூனேவின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் மற்ற ஏஎம்ஜி மாடல்கள் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. புதிய மெர்சிடிஸ் மாடலில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடலில் பேன்னமெரிக்கா கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் ஏஎம்ஜி ஸ்பெக் அலாய் வீல்கள், புதிய எல்இடி லைட்கள், குவாட் டிப் ஏஎம்ஜி பெர்பார்மன்ஸ் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் விலை இந்தியாவில் சத்தமின்றி மாற்றப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி மாடல் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. புதிய குளோஸ்டர் மாடல் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மாடலை வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர்.
இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் ரூ. 28.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஆண்டிற்கான யூனிட்கள் அனைத்து விற்றுத்தீர்ந்து விட்டன. அந்த வகையில் இதன்பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகள் புதிய விலையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இது ஆறு மற்றும் ஏழு இருக்கை கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போதைய விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பேஸ் மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மிட், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் சேவி மாடல் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 07 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
யமஹா நிறுவனம் புதிய எம்டி 07 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2021 மாடலில் ஏஸ்தெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்கிரேடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி புதிய எம்டி 07 மாடல் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்த மாடலில் 680சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய எக்சாஸ்ட் சிஸ்டம், மேம்பட்ட ஏர் இன்டேக் டக்ட் டிசைன் மற்றும் மேம்பட்ட பியூவல் இன்ஜெக்ஷன் செட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் முந்தைய மாடலை விட சற்றே குறைவான செயல்திறனை வழங்குகிறது. இந்த மாடலின் பியூவல் டேன்க்கை சுற்றி புதிய சைடு கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் முன்புற பிரேக் 292எம்எம் டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் மிஷெலின் பிஆர்5 ரக டையர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த மாடல் முன்புறம் புதிய எல்இடி ஹெட்லேம்ப் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
டாடா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. புதிய பண்டிகை கால சலுகைகள் டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் பல்வேறு இதர சலுகைகள் அடங்கும். இந்த சலுகைகள் மாடல் மற்றும் வேரியணட்டிற்கு ஏற்ப வேறுபடும்.

இவை நவம்பர் 1 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 வரை வழங்கப்படுகின்றன. சலுகைகளை பொருத்தவரை டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகையும், டிகோர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் நெக்சான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சலுகை வழங்கப்படுகிறது.
இதுதவிர டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டாடா அல்ட்ரோஸ் மாடலுக்கு பண்டிகை காலத்தில் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
புதிதாக கார் வாங்கும் முன் அனைவரும் கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புதிதாக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசைகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கும். அனைவருக்கும் தான் வாங்கும் முதல் கார் மிகவும் விசேஷமாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர்.
கார் வாங்கும் முன் அதன் விலை, டிரைவிங் ஸ்டைல், பராமரிப்பு விஷயம் என பலவற்றை கருத்தில் கொண்டு அவரவர் விருப்பப்படி ஒரு திட்டத்துடன் காரை தேர்வு செய்வர்.

அந்த வகையில் கார் வாங்கும்போது பலர் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் கார் வாங்கும்போது, அதன் உதிரிப் பாகங்கள் விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டுதான் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
‘நான் தான் இந்த ஊரிலேயே காரைப் பயன்படுத்துகிறேன்’ என்று அறிமுகமில்லாத காரை பயன்படுத்தும்போது, பழுது ஏற்பட்டு அல்லது தேய்மானம் அடைந்து, உதிரி பாகங்களை மாற்றும் நிலை வந்தால் அவை கிடைப்பது கடினம். பராமரிப்பு செலவும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 எம் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எக்ஸ்3 எம் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் உயர் ரக மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் துவக்க விலை ரூ. 99.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். புதிய மாடலை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என பிஎம்டபிள்யூ அறிவித்து இருக்கிறது.

இந்த எஸ்யுவி மாடல் சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. எம் மாடல் என்பதால், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் பல்வேறு தனித்துவ அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடலில் 3.0 லிட்டர் எம் ட்வின்பவர் டர்போ இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 473 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் மற்றும் டபிள்யூஆர்வி மாடல்கள் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தியாளராக திகழ்கிறது. ஹோண்டோ அமேஸ் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்குளுசிவ் என இரண்டு புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹோண்டா அமேஸ் கார், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல்களில் விண்டோ குரோம் மோல்டிங், பிரீமியம் சூடோ பிளாக் சீட் கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலில் விண்டோ குரோம் கார்னிஷ்டு கிரில் மற்றும் பாக் லேம்ப், ஸ்டெப் இலுமினேஷன் மற்றும் முன்புற புட் லைட், எக்ஸ்குளூசிவ் எடிஷன் எம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா அமேஸ் மற்றும் டபிள்யூஆர்வி எக்ஸ்குளுசிவ் எடிஷன் மாடல்களின் விலை முறையே ரூ. 7.96 லட்சம் மற்றும் ரூ. 9.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






