என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டுகாட்டி நிறுவனத்தின் புதிய மல்டிஸ்டிராடா 950 எஸ் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்டிராடா 950 எஸ் மோட்டார்சைக்கிளை இந்திய சந்கையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 15.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த மோட்டார்சைக்கிளில் தற்சமயம் பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பிஎஸ்6 ரக ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 950 மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் இரு மாடல்களும் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன.

     டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ்

    டுகாட்டி மல்டிஸ்டிராடா 950எஸ் மோட்டார்சைக்கிளில் 937சிசி, எல் ட்வின், டெஸ்டாஸ்டிரெட்டா டிவிடி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச், டுகாட்டி குவிக்ஷிப்ட் இவோ வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாடலில் டுகாட்டி நிறுவனத்தின் எலெக்டிரானிக் ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்போர்ட்ஸ் கார்னெரிங் லைட்கள், 5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் என்டியூரோ என நான்குவிதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.
    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் விநியோகம் துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    புதிய மூன்றாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் விநியோகம் இந்தியாவில் துவங்கி உள்ளது. மேலும் ஏலத்தில் முதல் வாகனத்தை வாங்கியவருக்கு மஹிந்திரா தார் விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய எஸ்யுவி-யை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் புதிய தார் விநியோகம் செய்யப்படுகிறது.

    2020 மஹிந்திரா தார் முதல் யூனிட் ரூ. 1.1 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏல தொகை நாட்டின் கொரோனா தொற்று நிதிக்காக வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் ரூ. 2.2 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட இருக்கிறது. 

     மஹிந்திரா தார்

    புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் இதுபோன்று செயலிழந்து போனால் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கோர முடியுமா என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


    கடந்த காலங்களில் மழையால் தமிழகத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமான கார், மோட்டார்சைக்கிள்களும் மழையில் செயலிழந்தன. வாகனம் வாங்கும்போதே பதிவு செய்வதோடு, காப்பீடும் செய்து தருகின்றனர். 

    வாகனங்களுக்கு பொதுவாக ஒருங்கிணைந்த காப்பீடு என்றொரு காப்பீட்டு திட்டமும், 3-ம் நபர் காப்பீடு என்றொரு காப்பீட்டு திட்டமும் உண்டு. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் வாகனங்களின் உரிமையாளர்கள் 3-ம் நபர் காப்பீட்டை தேர்வு செய்வர். அத்தகையோர் மழை, வெள்ள சேதத்துக்கு இழப்பீடு கோர முடியாது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பவர்கள் இழப்பீடு கோரலாம்.

     வாகனங்கள்

    மழை நீர், வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்குள்ளான கார், மோட்டார்சைக்கிள்களுக்கு இழப்பீடு கோரலாம். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் என்ஜின் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம். 

    ஆறுகளைக் கடக்கும்போது கார் அல்லது மோட்டார்சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், பாலங்கள் மீது செல்லும்போது பாலம் திடீரென உடைந்து வாகனம் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், மழையில் மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் வாகனங்கள் மீது விழுந்து சேதம் ஏற்பட்டிருந்தால் இழப்பீடு கோரலாம். 

    தற்போது வரும் வாகனங்களில் அதிநவீன, மின் சென்சார் கருவிகள் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மழை, வெள்ள நீரில் சிக்கிஇருந்தால் அதை மீட்டு விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரிக்கையை வைக்க வேண்டும். 

    காலம் கடந்து இழப்பீடு கோரிக்கை வைக்கும்போது அதை பெரும்பாலும் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. அல்லது உரிய நிவாரணம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.

    ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் மாடல் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களின் படி ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்பட்டது. தற்சமயம் இதன் வெளியீடு கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியிடப்படும் என தெரிகிறது. 

     ரெனால்ட் டிரைபர்

    புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஹெச்ஆர்10 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. இந்த என்ஜின் நிசான் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது ஆகும். இது 1.3 லிட்டர், 4-பாட் ஹெச்ஆர்13 டர்போ பெட்ரோல் யூனிட்டின் 3 சிலிண்டர் யூனிட் ஆகும்.

    இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் புதிய நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் 2020 மாதத்தில் மட்டும் 3750 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 48 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது எம்ஜி மோட்டார் 2537 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    இந்த நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் மாடல் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இந்த மாடல் மட்டும் 3625 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய மாதத்தை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். முந்தைய மாதத்தில் எம்ஜி மோட்டார் 2410 ஹெக்டார் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

     எம்ஜி ஹெக்டார்

    அக்டோபர் மாதத்தில் எம்ஜி இசட்எஸ் இவி மாடல் 125 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. முன்னதாக அக்டோபர் 8 ஆம் தேதி எம்ஜி நிறுவனம் தனது குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. வெளியான முதல் மாதத்திலேயே இந்நிறுவனம் 2 ஆயிரம் முன்பதிவுகளை கடந்தது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் இரண்டு வித டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின்களுடன் கிடைக்கிறது.
    டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அந்நிறுவனம் அசத்தலான பண்டிகை கால சலுகையை அறிவித்து இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு பண்டிகை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிளை அசத்தலான நிதி சலுகை மற்றும் மாத தவணையில் பெற முடியும்.

    அதன்படி டிவிஎஸ் ரேடியான் மாடலை ரூ. 1999 எனும் மாத தவணையில் 6.99 வட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 14,999 முன்பணத்தில் வாங்கிட முடியும். மேலும் இதற்கென ரூ. 5ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

     டிவிஎஸ் ரேடியான்

    டிவிஎஸ் ரேடியான் மாடலில் 109.7சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 60,442 மற்றும் ரூ. 66,442 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    நிசான் இந்தியா நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை நவம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட்

    புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய ஏஎம்ஜி மாடல் காரின் சோதனை ஓட்டத்தை துவங்கி இருக்கிறது.
      

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி எஸ்63 மாடல் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த மாடலின் சோதனை ஓட்டத்தை மெர்சிடிஸ் துவங்கி உள்ளது. 

    முதல் முறையாக புதிய தலைமுறை மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்63 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் இருந்த போதும், இதன் வெளிப்புற வடிவமைப்பு பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. 

     மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்63

    அந்த வகையில் புதிய ஏஎம்ஜி எஸ்63 மாடலில் பானமெரிக்கா கிரில், பெரிய அலாய் வீல்கள், குவாட்-டிப் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் பற்றி அதிக விவரங்கள் இல்லை. எனினும், இது பெரும்பாலும் கார்பன் பைபர் மற்றும் அல்கான்ட்ரா எலிமென்ட்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கலாம்.

    2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்63 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் முதல்முறையாக எலெக்ட்ரிக் மோட்டார் வங்கப்படலாம் என தெரிகிறது. இந்த யூனிட் 700 பிஹெச்பி திறன் வெளிப்படுத்தும் என தெரிகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் புதிய லோகோவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
     

    சர்வதேச சந்தையில் கியா மோட்டார்ஸ் அதிக பிரபலமான நிறுவனம் ஆகும். தற்சமயம் இந்திய சந்தையிலும் இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. 

    தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் சர்வதேச சந்தையில் புத்தம் புதிய லோகோவினை 2021 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிளாஸ் எஸ் எனும் திட்டத்தின் கீழ் பிராண்டை மறுகட்டமைப்பு செய்ய கியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     கியா செல்டோஸ்

    கியா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கியா திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 

    2025 ஆண்டுக்குள் கியா மோட்டார்ஸ் 11 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதற்கென கியா மோட்டார்ஸ் 2500 கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.
    2021 டிரையம்ப் டிரைடென்ட் 660 ரோட்ஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புத்தம் புதிய டிரெடன்ட் 660 ரோட்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 விலை இந்திய மதிப்பில் ரூ. 6.97 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது.

    டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

     2021 டிரைடென்ட் 660

    இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடலில் புத்தம் புதிய டியுபுலர் ஸ்டீல் சேசிஸ், 41எம்எம் ஷோவா யுஎஸ்டி மற்றும் ஷோவா மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 310எம்எம் ட்வின் டிஸ்க் பிரேக், இரண்டு பிஸ்டன் நிசிலன் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. எப்போதும் போன்றே புதிய ஹூண்டாய் மாடலிலும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட இருக்கின்றன. 

    இந்தியாவில் முதல் கனெக்ட்டெட் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை தவிர, இதில் பல்வேறு சவுகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் சன்ரூப் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹோண்டா ஜாஸ் மாடலிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹூண்டாய் ஐ20

    அந்த வகையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சன்ரூப் வசதியை பெறும் இரண்டாவது மாடலாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 இருக்கும். 

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மாடல் அதிரடி அம்சத்துடன் உருவாகி வருவதாக தகவல்.


    டுகாட்டி நிறுவனம் மல்டிஸ்டிராடா வி4 அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு வருகிறது.  அந்த வகையில், டுகாட்டி வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் மல்டிஸ்டிராடா வி4 மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. 

     மல்டிஸ்டிராடா வி4

    டீசர் படங்களின் படி, டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி சார்ந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் அப் & டவுன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
    ×