என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவு மற்றும் விலை வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
நிசான் இந்தியா நிறுவனம் தனது புதிய மேக்னைட் மாடல் விலையை அடுத்த மாதம் அறிவிப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. இதன் விநியோகம் நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மோட்டார்சைக்கிள் டீசர் வீடியோக்களை வெளியிட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் புதிதாக Meteor 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள்ளுக்கான வீடியோ டீசர்களை ராயல் என்பீல்டு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் புதிய ராயல் என்பீல்டு Meteor 350 நவம்பர் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய Meteor 350 முற்றிலும் புதிய சேசிஸ், என்ஜின் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

ராயல் என்பீல்டு Meteor 350 இந்திய சந்தையில் தற்போதைய தன்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு Meteor 350 மாடலில் புத்தம் புதிய 349சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 20 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சிஎப்மோட்டோ நிறுவனத்தின் எம்டி800 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சீன மோட்டார்சைக்கிள் பிராண்டு சிஎப்மோட்டோ மிடில்-வெயிட் அட்வென்ச்சர் மாடலை உருவாக்கி வருகிறது. இது கேடிஎம் 790 அட்வென்ச்சர் மாடலை தழுவி உருவாகி வருகிறது. புதிய மோட்டார்சைக்கிள் சிஎப்மோட்டோ எம்டி800 என அழைக்கப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி சிஎப்மோட்டோ எம்டி800 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாக இருந்தது. எனினும், இதன் வெளியீடு 2021 ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது. சமீபத்திய ஸ்பை படங்களில் மோட்டார்சைக்கிள் ப்ரோடக்ஷன் அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

புதிய சிஎப்மோட்டோ எம்டி800 சந்தையில் அதிக பிரபலமான பிஎம்டபிள்யூ எப்750 ஜிஎஸ், பிஎம்டபிள்யூ எப் 850 ஜிஎஸ் மற்றும் டிரையம்ப் டைகர் 900 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
எம்டி800 மாடலில் 799சிசி கேடிஎம் எல்சி8 பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் கேடிஎம் 790 அட்வென்ச்சர் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இது கேடிஎம் மற்றும் சிஎப்மோட்டோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் இகேயுவி100 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது இகேயுவி100 மாடலை இந்திய சந்தையில் 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா தெரிவித்தார்.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இகேயுவி100 மாடலின் விலை விவரங்களை மஹிந்திரா அறிவித்தது. எனினும், தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக இகேயுவி100 வெளியீட்டு திட்டங்களில் தவிர்க்க முடியாத மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

எனினும், தற்சமயம் வெளியீட்டு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த துவங்கி உள்ளதாக மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.
மஹிந்திரா இகேயுவி100 மாடலில் 40 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 15.9 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 53 பிஹெச்பி பவர், 120 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
போர்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.
போர்டு இகோஸ்போர்ட் மாடல் விலை இந்திய சந்தையில் திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய இகோஸ்போர்ட் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1500 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலானதாக போர்டு இந்தியா செரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோகம் மற்றும் இதர பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனாலேயே கார் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் போர்டு இகோஸ்போர்ட் மாடல் ரூ. 8.19 லடசத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
போர்டு இகோஸ்போர்ட் மாடல் தன்டர் எனும் பெயரில் ஸ்பெஷல் எடிஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆறு புதிய பெயர்களுக்கான டிரேட்மார்க் வழங்க விண்ணப்பித்து இருக்கிறது.
நார்டன் மோட்டார்சைக்கிள் ஆறு புதிய பெயர்களை பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்து இருக்கிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நார்டன் மோட்டார்சைக்கிளை கைப்பற்றிய பின் நிகழ்ந்திருக்கும் பெரும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
நார்டன் எலெக்ட்ரா, நார்டன் பாஸ்ட்பேக், நார்டன் நேவிகேட்டர், நார்டன் நாமண்ட், நார்டன் ரேஞ்சர் மற்றும் நார்டன் காம்பேட் என ஆறு பெயர்களுக்கான டிரேட்மார்க் வழங்க நார்டன் மோட்டார்சைக்கிள் விண்ணப்பித்து இருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் நார்டன் மோட்டார்சைக்கிள் வெளியிட இருக்கும் புதிய வாகனங்களுக்கு இந்த பெயர்கள் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரேட்மார்க் விண்ணப்பத்தில் உள்ள சில பெயர்கள் 60 மற்றும் 70களின் காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் நார்டன் மோட்டார்சைக்கிள் பழைய பெயர்களை பயன்படுத்தி விற்பனை மற்றும் லாபத்தை ஈட்ட முயற்சிக்கலாம் என தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 ரக எக்ஸ்டிரீம் 200எஸ் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்6 புகை விதிகள் அமலானது முதல் இந்த மாடல் விற்பனையாகாமல் உள்ளது.
2020 எக்ஸ்டிரீம் 200எஸ் மாடலில் ஆயில் கூலர் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வசதி எக்ஸ்பல்ஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய எக்ஸ்டிரீம் 200எஸ் அதிக சத்தத்தை எழுப்பாமல், மென்மையாக இருக்கும் என தெரிகிறது.

வடிவமைப்பு முந்தைய மாடலில் இருந்ததை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், இம்முறை புதிய நிற ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். புதிய மாடலின் பெரும்பாலான அம்சங்கள் பிஎஸ்4 மாடலில் இருந்தது போன்றே வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 ரக எக்ஸ்டிரீம் 200எஸ் மாடல் விலையை ரூ. 1.08 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யலாம் என தெரகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா டீசல் டூர் எம் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மாருதி சுசுகி எர்டிகா கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாடல் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பிஎஸ்6 விதிகள் அமலான சமயத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது மாடல்களில் வழங்கப்பட்டு இருந்து டீசல் என்ஜின் ஆப்ஷன்களை நீக்கியது.

அந்த வகையில் இணையத்தில் வெளியாகி இருக்கும் ஸ்பை வீடியோவில் எர்டிகா டூர் எம் வேரியண்ட் ஹரியாணாவில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் இதன் பக்கவாட்டில் டிடிஐஎஸ் பேட்ஜிங் காணப்படுகிறது. வீடியோவில் காரின் சத்தத்தை கொண்டு இதில் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.
முந்தைய எர்டிகா எம்பிவி மாடல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இது 94 பிஹெச்பி பவர், 225 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
புகாட்டி நிறுவனத்தின் 1824 பிஹெச்பி பவர் கொண்ட ஹைப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிரெஞ்சு கார் உற்பத்தியாளரான புகாட்டி சர்வதேச சந்தையில் தனது புதிய ஹைப்பர்கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹைப்பர்கார் பொலைடு என அழைக்கப்படுகிறது. இது பந்தய களத்திற்கென உருவாக்கப்பட்ட கார் ஆகும்.
புகாட்டி பொலைடு என்றால் மிகவும் வேகமான கார் என அர்த்தமாகும். இது ஹைப்பர்கார் கான்செப்ட் உடன் ஒத்துப்போகும் என்பதால் சூட்டப்பட்டு இருக்கிறது.

புதிய பொலைடு மாடலில் புகாட்டியின் பிரபலமான 8.0 லிட்டர் குவாட்-டர்போ டபிள்யூ16 என்ஜினின் மேம்பட்ட வெர்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 1824 பிஹெச்பி பவர், 1850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.17நொடிகளிலும், மணிக்கு 0 முதல் 500 கிலோமீட்டர் வேகத்தை 20.16 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அிகபட்சமாக மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் மாடல் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்கோடா இந்தியா தனது கரோக் மாடலை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது கரோக் எஸ்யூவி மாடல் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத் தீர்ந்ததாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்விஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஜாக் ஹாலின்ஸ் கம்ப்லிட்லி பில்ட்-அப் எஸ்யுவிக்கள் இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்ததாக தெரிவித்து இருக்கிறார்.

இந்திய சந்தையில் முதற்கட்டமாக 1000 ஸ்கோடா கரோக் யூனிட்களை கொண்டுவந்தது. ஸ்கோடா கரோக் அறிமுக நிகழ்விலும் அந்நிறுவனம் இதே தகவலை தெரிவித்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவன தலைமை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களில் கரோக் விற்றுத் தீர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்கோடா கரோக் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் கேண்டி வைட், மேஜிக் பிளாக், மேக்னடிக் பிரவுன், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர் மற்றும் குவாட்ஸ் கிரே என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
யமஹா நிறுவனத்தின் புத்தம் புதிய எம்டி 09 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா நிறுவனம் தனது 2021 எம்டி 09 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாடல் முந்தைய வெர்ஷனை விட சக்தி வாய்ந்ததாக உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் புதிய யமஹா எம்டி 09 மாடலில் 889சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட 42சிசி அதிகம் ஆகும். புதிய என்ஜின் 118 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் மேம்பட்ட பியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், புதிய எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.
யமஹா எம்டி 09 கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது. இதன் லைட்டிங் முழுக்க எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய யமஹா எம்டி 09 விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் சிஎன்ஜி மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. புதிய சிஎன்ஜி வேரியண்ட் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பை படங்கள் ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி வேரியண்ட் பியூவல் பம்ப்பில் எரிபொருள் நிரப்பப்படும் போது எடுக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்6 புகைவிதிகள் அமலானதும், ஸ்கோடா டீசல் என்ஜின்களை தனது மாடல்களில் இருந்து நீக்கி, சிஎன்ஜி வசதியை வழங்கி வருகிறது.

தற்சமயம் ஸ்கோடா ரேபிட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.






