என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஜீப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த கார் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு பின் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஜீப் காம்பஸ் மாடல் 2016 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடல் தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். எனினும், வெளிப்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதன் ஹெட்லேம்ப், எல்இடி யூனிட்கள் மெல்லியதாக இருக்கின்றன.

மேலும் கிரில் கூர்மையான தோற்றம் கொண்டு இருக்கும். முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், மேம்பட்ட அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காரின் வெளிப்புற தோற்றத்தில் செய்யப்படும் மாற்றங்களாக இருக்கின்றன.
புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அதிநவீன எல்2 ஆட்டோனோமஸ் டிரைவிங் சிஸ்டம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹைவே அசிஸ்ட், டிராபிக் ஜாம் அசிஸ்ட், டிராபிக் சைன் ரெகக்னீஷன், லேண் கீப் அசிஸ்ட் போன்றவை வழங்கப்படலாம்.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடலின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 காருக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மட்டுமின்றி புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு ஹூண்டாய் விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது. புத்தம் புதிய ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வருகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஒகினவா நிறுவனம் தனது இ ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒகினவா இந்திய சந்தையில் பண்டிகை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதில் அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குலுக்கலில் தேர்வாகும் பத்து பேருக்கு சிறப்பு பரிசும், முதலில் தேர்வாகும் நபர் புதிய ஒகினவா ஆர்30 மாடலை வென்றிட முடியும்.
அக்டோபர் 24 ஆம் தேதி துவங்கிய சிறப்பு சலுகை நவம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்கள் விவரம் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இத்துடன் புதிய வாகனம் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இலவச பரிசு, ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படுகிறது. முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை ஒகினவா அறிவித்தது. இத்துடன் கஸ்டம் தீம் பெயின்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வரும் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஒகினவா எதிர்பார்க்கிறது. அந்த வகையில் சிறப்பு சலுகைகள் விற்பனையை ஊக்குவிக்க உதவும் என தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் சிடி100 கேஎஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 46,432, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 1542 வரை அதிகம் ஆகும்.
புதிய மாடலின் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் பியூவல் காஜ் இடம்பெற்று உள்ளது. இத்துடன் ரப்பர் டேன்க் பேட்கள், ஹேன்டிள்பாரில் கிராஸ்டியூப், மேம்பட்ட சீட் குஷன்கள், பெரிய கிராப் ரெயில், நீண்ட மிரர் ஸ்டெம், லென்ஸ் இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இவைதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 102சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.79 பிஹெச்பி பவர், 8.34 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் கிளாஸ் எபானி பிளாக் மற்றும் புளூ டீகல்கள், மேட் ஆலிவ் கிரீன் மற்றும் எல்லோ டீகல்கள், கிளாஸ் பிளேம் ரெட் மற்றும் பிரைட் ரெட் டீகல்கள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்சென்ட் மாடல் கார் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வலைதளத்தில் இருந்து எக்ஸ்சென்ட் மாடலை சத்தமின்றி நீக்கி உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடல் அந்நிறுவன வலைதளத்தில் காணப்படாததால், இதன் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹூண்டாய் இந்தியா தனது எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக புதிதாக ஆரா எனும் பெயரில் காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆரா மாடல் எக்ஸ்சென்ட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதுவரை எக்ஸ்சென்ட் மற்றும் ஆரா மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்சமயம் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடல் வாடகை கார் பயன்பாட்டிற்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது சிஎன்ஜி வேரியண்ட் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நவராத்திரி காலக்கட்டத்தில் மட்டும் 550 கார்களை விநியோகம் செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நவராத்திரி காலக்கட்டத்தில் மட்டும் 550 கார்களை விநியோகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்திலும் மெர்சிடிஸ் பென்ஸ் இத்தனை யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, மும்பை மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் இந்த நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 175 புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்கள் இந்த நகரங்களில் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

விற்பனை விவரங்களை பொருத்தவரை சி கிளாஸ், இ கிளாஸ் செடான், ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் எஸ்யுவிக்கள் அதிகளவு வரவேற்பை பெற்று இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில், மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனையை சமன் செய்து இருக்கிறது.
நவராத்திரியில் இத்தனை வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, இதேபோன்ற விற்பனை தீபாவளி காலக்கட்டத்திலும் நடைபெறும் என மெர்சிடிஸ் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய மல்டிஸ்டிராடா 950 எஸ் மாடல் முன்பதிவு துவங்கி உள்ளது. இதன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா 950எஸ் மாடலின் பிஎஸ்6 வெர்ஷனுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்பதிவு மட்டுமின்றி பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் மாடல் இந்தியாவில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விநியோகம் நவம்பர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது.

இந்த மாடல் டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னை என அனைத்து டுகாட்டி விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.
பிஎஸ்6 டுகாட்டி மல்டிஸ்டிராடா 950எஸ் மாடலில் 937சிசி டெஸ்டாஸ்டிரெட்டா எல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மாடல் கார் ஐந்து ஆண்டுகள் அதாவது 59 மாதங்களில் எட்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் 2015 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் ஆனது முதல் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான ஒரே வருடத்தில் இந்த மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

2017 ஆண்டு வாக்கில் இதன் ஆல்பா வேரியணட்டில் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. பின் மூன்று ஆண்டுகளில் பலேனோ ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பலேனோ மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ மாடல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஆர்18 மோட்டார்சைக்கிளின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆர்18 மோட்டார்சைக்கிளின் கிளாசிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த எடிஷன் இந்தியாவில் கிடைக்கும் ஆர்18 பர்ஸ்ட் எடிஷனை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆர்18 கிளாசிக் மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், ஆக்சிலரி லைட்கள், பெரிய விண்ட்ஸ்கிரீன், சேடிள்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவை அனைத்தையும் கழற்றக்கூடிய வசதி மற்றும் ஸ்டான்டர்டு ஆர்18 வேரியண்ட்டில் சேர்த்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

ஆர்18 கிளாசிக் மாடலில் 16 இன்ச் வீல், ஸ்டிரெயிட் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 1802சிசி, பாக்சர் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 89.9 பிஹெச்பி பவர், 158 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இவைதவிர எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக் டார்க் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், ரிவர்ஸ் கியர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் ஆர்18 கிளாசிக் இந்திய சந்தையில் 2021 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது எதிர்கால மாடல்களுக்கு புதுவித பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது எதிர்கால மாடல்களுக்கு பயன்படுத்த எடை குறைந்த பாகங்களை உற்பத்தி செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதற்கென லேண்ட் ரோவர் நிறுவனம் வானியல் துறைக்கென உருவாக்கப்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.

எதிர்கால வாகனங்களில் வழங்கப்பட இருக்கும் பாகங்களில் நிஜ உலகில் மிகவும் கடுமையான கால நிலைகளில் சோதனை செய்யப்பட இருக்கின்றன. மேலும் இவை வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் மொத்தம் 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை சோதனை நடைபெற உள்ளது.
சோதனையில் கிடைக்கும் தரவுகளை ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள உற்பத்தி குழுவுக்கு அனுப்பப்படும். அந்த குழு சோதனையில் கிடைத்த தரவுகள் லேண்ட் ரோவர் தரத்திற்கு இணையானதா என்பதை உறுதிப்படுத்தி, உற்பத்தி பணிகளை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது.
ரெனால்ட் சோ எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக சோ எலெக்ட்ரிக் மாடலை ரெனால்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தி இருந்தது.
அந்த வகையில் ரெனால்ட் சோ மாடல் துளியும் மறைக்கப்படாத நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரெனால்ட் சோ இந்திய வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

எனினும், இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக 2012 ஜெனிவா மோட்டார் விழாவிலேயே ரெனால்ட் சோ அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த கார் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் சோ மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 395 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 16 மணி 10 நிமிடங்கள் ஆகும். பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 9 மணி 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் டிசைன் ஸ்கெட்ச் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதில் புதிய காரின் டிசைன் ஸ்கெட்ச் இடம்பெற்று இருக்கிறது.
தற்போதைய டீசரின் படி புதிய மாடலில் எலைட் எனும் பெயர் நீக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. சர்வதேச மாடல் என்பதால், புதிய ஐ20 ஹூண்டாய் நிறுவனத்தின் சென்சஸ்நஸ் ஸ்போர்டினஸ் வடிவமைப்பு முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பி பிரிவு ஹேட்ச்பேக் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட முன்புறம் கொண்டிருக்கிறது. இதில் கூர்மையான ஹெட்லேம்ப்கள், பிளாக்டு-அவுட் கிரில், பம்ப்பர், பின்புறம் இசட் வடிவ எல்இடி லைட்டிங் வழங்கப்படுகிறது. இதன் அலாய் வீல்களும் அசத்தல் தோற்றம் கொண்டிருக்கின்றன.
புதிய ஐ20 மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதே மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.






