என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மைல்கல் கடந்துள்ளது.
இந்திய சந்தையில் பயணிகள் கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. உற்பத்தியில் மூன்று தசாப்தங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி உள்ளது.
புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் #WeLoveYou4Million எனும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் சியரா மாடலுடன் 1991 ஆண்டு டாடா மோட்டார்ஸ் உற்பத்தியை துவங்கியது. வெளியானது முதல் இந்த எஸ்யுவி இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்டிகா, சியெரா, சுமோ என பல்வேறு மாடல்களில் மொத்தம் பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை 2005-06 ஆண்டு காலக்கட்டத்தில் எட்டியது. பின் 20 லட்சம் யூனிட்களை 2015 ஆம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்தது. இதைத் தொடர்ந்து சபாரி மற்றும் டாடா நானோ போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
இந்த இரு மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இதில் டாடா நானோ மாடல் குறைந்த விலை பயணிகள் காருக்கான வரலாற்றை திருத்தி எழுதியது. பின் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தியில் 40 லட்சம் யூனிட்களை டாடா மோட்டார்ஸ் கடந்து உள்ளது.
2021 ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் தனது சிபி1000ஆர் மாடலின் டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய 2021 ஹோண்டா சிபி1000ஆர் மாடல் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
டீசர் வீடியோவில் 2021 ஹோண்டா சிபி1000ஆர் மாடல் சில்ஹவுட்டில் காட்சியளிக்கிறது. எனினும், இதன் ஹெட்லைட் பெசல் தற்போதைய மாடலில் உள்ளதை விட சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த மாடலில் அலாய் வீல்கள், புதிய டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் 999சிசி லிக்விட் கூல்டு, இன் லைன் 4 சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 143 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மேலும் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இன்வெர்ட்டெட் முன்புற போர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 310 எம்எம் ட்வின் டிஸ்க், பின்புறம் 256எம்எம் ரோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்250 மோட்டார்சைக்கிள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கவாசகி நிறுவனம் 2021 இசட்250 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் பியல் நைட் ஷேட் டியல் எக்ஸ் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி கார்டினல் ரெட் எக்ஸ் மெட்டாலிக் பிளாட் ஸ்பா்ர்க் பிளாக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

இதன் தோற்றம் பெரிய இசட் சீரிஸ் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 248சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு எனஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 36.5 பிஹெச்பி பவர், 22.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் டீலர் நெட்வொர்க் எண்ணிக்கையை ரெனால்ட் நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா முழுக்க சுமார் 34 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்து இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனம் ஒரு ஆண்டிற்குள் 90 புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயிண்ட்களை திறந்துள்ளது.

புதிய டீலர்ஷிப்கள் மத்திய பிரதேசம், தமிழ் நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.
தற்சமயம் ரெனால்ட் இந்தியாவின் ஒட்டுமொத்த டீலர் நெட்வொர்க்கில் 415 விற்பனை மற்றும் 475-க்கும் அதிக சர்வீஸ் டச்பாயிண்ட்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 200-க்கும் அதிகமான வொர்க்ஷாப் ஆன் வீல்ஸ் சேவையும் அடங்கும்.
ஜீப் காம்பஸ் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
ஜீப் நிறுவனம் தனது பிரபல காம்பஸ் எஸ்யுவி மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய ஜீப் காம்பஸ் மாடல் 2021 வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஜீப் காம்பஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்களின் படி புதிய காம்பஸ் மாடல் அதிக மாற்றங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. பின்புறம் புதிய வீல் ஆர்ச்கள், டி பில்லர், பின்புறம் குவாட்டர் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏழு பேர் இருக்கைக்காக காரின் பின்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
முன்புறம் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய கிரில், பம்ப்பர் மற்றும் பொனெட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த என்ஜின் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸமிஷன் வழங்குகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஎம்ஜி ரக கார்களை உற்பத்தி செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஏஎம்ஜி ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடல் நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து உள்ளது.

புதிய ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடல் விலை ரூ. 80 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் மாடலில் 3.0 லிட்டர் வி6 பை-டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அர்பன் குரூயிசர் எஸ்யுவி மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்த மாத துவக்கத்தில் அர்பன் குரூயிசர் மாடல் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் இவை விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. மேலும் அர்பன் குரூயிசர் மாடலுக்கான விநியோகம் துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 8.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டிரையம்ப் நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனம் புதிதாக என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. எனினும், இந்நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் டைகர் 900 மாடலை தழுவி உருவாகிறது. எனினும், இதன் வடிவமைப்பு டைகர் 900 மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்புறம் பெரிய பேரிங், ட்வின் ஹெட்லேம்ப் செட்டப், பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் டைகர் 900 மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவரை 8750 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.
அறிமுகமானதும் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் பிஎம்டபிள்யூ எப்900எக்ஸ்ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதுவரை டைகர் ஸ்போர்ட் பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய பிஎஸ்4 மாடல்களை விட சற்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
விலை குறைவை தொடர்ந்து இரு மாடல்களும் விரைவில் ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளன. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய மைல்கல்லை பிஎம்டபிள்யூ எட்டி இருக்கிறது.

இந்தியாவில் ஜி 310 ஆர் மாடல் விலை ரூ. 2.45 லட்சம் என்றும், ஜி 310 ஜிஎஸ் மாடல் விலை ரூ. 2.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை பிஎஸ்4 மாடல்களை விட முறையே ரூ. 54 ஆயிரம் மற்றும் ரூ. 64 ஆயிரம் வரை குறைவு ஆகும்.
புதிய மாடல்களில் மேம்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மோட்டார்சைக்கிள் இந்திய விநியோக விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஹைனெஸ் சிபி 350 மோட்டார்சைக்கிளை விநியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ஹரியானா மாநிலத்தில் இருந்து விற்பனையகங்களுக்கு அனுப்பும் பணிகள் துவங்கியது.
இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய ஹோண்டா ஹைனெஸ் மாடல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஜாவா மற்றும் பெனலி இம்பீரியல் 400 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி100 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கேயுவி100 என்எக்ஸ்டி மாடலை சத்தமின்றி அப்டேட் செய்து உள்ளது. அந்த வகையில் புதிய மாடல் தற்சமயம் டூயல் டோன் பெயின்ட்டிங்கில் கிடைக்கிறது. புதிய மேம்பட்ட கேயுவி100 டூயல் டோன் மாடல் துவக்க விலை ரூ. 7.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கார் விவரங்கள் மஹிந்திரா அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் அப்டேட் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில் புதிய கார் சில்வர் \ பிளாக் மற்றும் ரெட் \ பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. டூயல்-டோன் ஆப்ஷன் டாப் எண்ட் கே8 மாடலில் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கேயுவி100 டூயல் டோன் வேரியண்ட் ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 7500 வரை விலை அதிகம் ஆகும். மஹிந்திரா மோனோ டோன் மாடல் பியல் வைட், டேஸ்லிங் சில்வர், பிளேம்பொயன்ட் ரெட், பியரி ஆரஞ்சு, டிசைனர் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் மஹிந்திரா கேயுவி100 கே2 பிளஸ், கே4 பிளஸ், கே6 பிளஸ் மற்றும் கே8 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் எம்பால்கன் ஜி80 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 82 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து பத்து லட்சமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. மாருதியின் குஜராத் ஆலையில் இது புதிய சாதனையாக அமைந்து இருக்கிறது. இந்த சாதனை அக்டோபர் 21 ஆம் தேதி எட்டப்பட்டு இருக்கிறது.
குஜராத் ஆலை உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் 3 ஆண்டுகள் 9 மாதங்களில் எட்டியிருக்கிறது. இது மற்ற ஆலைகளை விட வேகமானது என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி பணிகள் பிப்வரி 2017 வாக்கில் துவங்கப்பட்டது.

புதிய மைல்கல் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது நெக்சா பிரீமியம் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலேனோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த மாடல் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது.






