என் மலர்
ஆட்டோமொபைல்

மெர்சிடிஸ் பென்ஸ் கார்
நவராத்திரி காலக்கட்டத்தில் 550 கார்களை விநியோகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நவராத்திரி காலக்கட்டத்தில் மட்டும் 550 கார்களை விநியோகம் செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நவராத்திரி காலக்கட்டத்தில் மட்டும் 550 கார்களை விநியோகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்திலும் மெர்சிடிஸ் பென்ஸ் இத்தனை யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, மும்பை மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் இந்த நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 175 புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்கள் இந்த நகரங்களில் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

விற்பனை விவரங்களை பொருத்தவரை சி கிளாஸ், இ கிளாஸ் செடான், ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் எஸ்யுவிக்கள் அதிகளவு வரவேற்பை பெற்று இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில், மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனையை சமன் செய்து இருக்கிறது.
நவராத்திரியில் இத்தனை வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, இதேபோன்ற விற்பனை தீபாவளி காலக்கட்டத்திலும் நடைபெறும் என மெர்சிடிஸ் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
Next Story