என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
வாகன இன்சூரன்ஸ் நடைமுறை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அவசர உலகில் வாகனங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், கார் ஆகியவை ஆடம்பரப் பொருட்களாக கருதப்பட்டு இருந்தன. இப்போது அவை மனிதனின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது.
தற்சமயம் மோட்டார்சைக்கிள் அல்லது கார் வாங்கினால் முதலில் அதற்கான இன்சூரன்ஸ் பெற வேண்டும். ஒருவர் தன் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்வதும். செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் வாகனங்களுக்கு இன்சூர் செய்வது சட்டப்படி கட்டாயம் ஆகும்.
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி இருவகைப்படும். காம்பிரிஹென்சிவ் பாலிசி, மூன்றாம் நபர் பாலிசி. காம்பிரிஹென்சிவ் பாலிசி என்பது பல்வேறு பாதுகாப்புகளை உள்ளடக்கியது.

பாலிசி எடுத்தவரின் பாதுகாப்பு, உடன் செல்பவரின் பாதுகாப்பு, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ், வண்டிக்கு சேதம் அடைந்தால், அதற்கான நிவாரணம், வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ, குளிர்சாதன வசதிக்கான கருவிகள் போன்ற கூடுதல் பிட்டிங்குகள் காணாமல் போனாலோ அல்லது வண்டியே காணாமல் போனாலோ அல்லது திருட்டு போய்விட்டாலோ அதற்கான நிவாரணம், இப்படி பல்வேறு சூழ்நிலைகளிலும், விபத்துகளிலும் காப்பீட்டு பாதுகாப்பு கிடைப்பதற்கு இந்த விரிவான பாலிசி வழி செய்கிறது.
மூன்றாம் நபர் பாலிசி என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டப்படி, கட்டாயமாக எடுத்தே தீர வேண்டிய காப்பீடு. 3-வது நபருக்கு பாதிப்பு அல்லது ஆபத்து நேரும்போது (மோட்டார் வாகனச்சட்டப்படி) நிவாரணம் அளிப்பதற்காக ஏற்பட்டது. இந்த பாலிசி ஆகும்.
ஒருவர் வாகனம் ஓட்டி செல்லும் போது, விபத்து நேரிடக்கூடும். அந்த விபத்தினால், சாலையில் சென்று கொண்டிருந்த மூன்றாம் நபர், துரதிர்ஷ்ட வசமாக உயிர் இழக்க நேரிடலாம். அல்லது ஊனம் அடையக்கூடும். அத்தகைய தருணங்களில் அந்த 3-வது நபர் அல்லது அந்த நபரை சேர்ந்தவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் சட்டப்படி நிவாரணம் கிடைக்க இந்த பாலிசி வழிவகை செய்கிறது.
மினி நிறுவனம் இந்தியாவில் சந்தையில் கூப்பர் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் ஜெசிடபிள்யூ ஜிபி இன்ஸ்பையர்டு எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கூப்பர் மாடல் விலை ரூ. 46.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரேசிங் கிரெ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்பெஷல் எடிஷன் வெறும் 15 யூனிட்களே விற்பனைக்கு வர இருக்கின்றன. இது சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.

தோற்றத்தில் இந்த மாடல் சற்று பிரம்மாண்டமாகவும், ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற கிரில், டோர் ஹேண்டில்கள், பியூவல் பில்லர் கேப், வெளிப்புறம் மற்றும் ஹெட்லைட், டெயில் லைட்களின் உள்புறம் கிளாஸ் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய மினி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் ட்வின் பவர்டு டர்போ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 231 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
டாடா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கேமோ எடிஷன் எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட்பிளஸ் வேரியண்ட்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷனும், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் ட்ரிம்கள் ஆட்டோமேடிக் யூனிட்களுடன் வழங்கப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் புதிய கேமோ கிரீன் ஷேட், 17 இன்ச் பிளாக்ஸ்டோன் அலாய் வீல்கள், கேமோ லோகோ வழங்கப்படுகிறது.

உள்புறம் கன்மெட்டல் கிரே, பிளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் டேஷ்போர்டு மற்றும் ஹார்மோனிசிங் பினெக் கலிகோ பிளாக்ஸ்டோன் லெதர் சீட்கள் மற்றும் கேமோ கிரீன் ஸ்டிட்சிங் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் ஹேரியர் மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Meteor 350 தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது.
புதிய ராயல் என்பீல்டு Meteor 350 அந்நிறுவனத்தின் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட்டான பயர்பால் விலை ரூ. 1,78,825 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு Meteor 350 ஸ்டெல்லார் மாடல் விலை ரூ. 1,81,342 என்றும் சூப்பர்நோவா வேரியண்ட் விலை ரூ. 1,90,536 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, லாங் ஸ்டிரோக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின் சைடெட் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அசத்தலான அலாய் வீல்களுடன் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் 2021 எக்ஸ்யுவி500 மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய ஸ்பை படங்களின் படி 2021 எக்ஸ்யுவி500 முறஅறிலும் புதிய அலாய் வீல்களை கொண்டிருக்கின்றன. இவை கருப்பு நிறம் கொண்டுள்ளன. இத்துடன் பிளஷ் பிட் டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கின்றன. காரின் வெளிப்புறம் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், மல்டி-ஸ்லாட் கிரில், உற்பத்திக்கு தயாரான பாடி பேனல்களை கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 ரி-டியூன் செய்யப்பட்ட மோனோக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது தற்போதைய மாடலை விட அகலமாகவும், நீளமாகவும் இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 40 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இகோ எம்பிவி மாடலை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. ஹெட்லேம்ப் யூனிட்டில் ஸ்டான்டர்டு லோகோ இல்லாததே இந்த மாடல் திரும்ப பெறுவதற்கான காரணமாக இருக்கும் என தெரிகிறது.
ஹெட்லேம்ப்பில் எவ்வித கோளாறும் ஏற்படல்லை. எனினும், சிறு மாற்றம் செய்வதற்காகவே மாஸ் ரீகால் செய்கிறது. நவம்பர் 4, 2019 முதல் பிப்ரவரி 25, 2020 வரையிலான காலக்கட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன.

தற்போதைய தகவல்களின் படி மொத்தம்40,453 இகோ எம்பிவி யூனிட்களை மாருதி சுசுகி திரும்ப பெறுகிறது. ரீகால் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் இலவசமாக சரி செய்து தரப்படுகிறது.
ரீகால் செய்யப்பட வேண்டிய யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி தொடர்பு கொள்ளும். பின் வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களுக்கு சென்று வாகனங்களை சரிசெய்து திரும்ப பெறலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
டாடா நெக்சான் மாடல் கார் உற்பத்தியில் 1,50,000 யூனிட்களை கடந்துள்ளது. இந்த யூனிட் டாடா மோட்டார்ஸ் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.
காம்பேக்ட் எஸ்யுவி மாடல் 2018 செப்டம்பர் வாக்கில் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்தது. பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. அந்த வரிசையில், புதிய மைல்கல் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 2020 வாக்கில் டாடா நெக்சான் அதிக விற்பனையை பதிவு செய்தது. 2018 ஆண்டு வாக்கில் குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்சான் பெற்றது.
இதைத் தொடர்ந்து டாடா நிறுவனத்தின் அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் டிகோர் போன்ற மாடல்கள் அதிக பாதுகாப்பான மாடல் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 ஐ20 மாடல் கார் பல்வேறு புது அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் துவக்க விலை ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஹூண்டாய் ஐ20 மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என தெரிகிறது. இந்த கார் போலார் வைட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, பியரி ரெட், ஸ்டேரி நைட், மெட்டாலிக் காப்பர், போலார் வைட் மற்றும் பிளாக் ரூப், பியரி ரெட் மற்றும் பிளாக் ரூப் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இந்த கார் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார், 6 ஸ்பீடு ஐஎம்டி யூனிட், 7 ஸ்பீடு டிசிடி யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பாக் லைட்கள், முக்கோண வடிவம் கொண்ட பாக் லைட் சரவுண்ட், கேஸ்கேடிங் கிரில் டிசைன், சன்ரூப், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், ஷார்க் பின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
அசத்தல் அப்டேட்களுடன் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி நிறுவனம் புதிய மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிளாக்ஷிப் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் டுகாட்டி வொர்ல்டு பிரீமியர் வெப் சீரிசின் முதல் எபிசோடில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய வி4 மாடல் வி4, வி4 எஸ் மற்றும் வி4 எஸ் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், 22 லிட்டர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் சீட் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அலுமினியம் மோனோக் பிரேம், 19 இன்ச் முன்புற சக்கரம், டபுள் சைடெட் ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் அப் & டவுன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐஎம்யு, ஏபிஎஸ் கார்னெரிங், டுகாட்டி வீலி கண்ட்ரோல், டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் கார்னெரிங் லைட்கள், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல், செமி ஆக்டிவ் டுகாட்டி ஸ்கைஹூக் கண்ட்ரோல் சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழுமையான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக தமிழ் நாடு மாறி உள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி டிசம்பர் 31, 2022 வரை தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ் நாடு மின்சார வாகன கொள்கை 2019 இன் படி மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், பேருந்து மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் என அனைத்திற்கும் முழுமையான வரிவிலக்கு கிடைக்கும்.
வரிவிலக்கு மட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரி, சார்ஜிங் அக்சஸரீ உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்வோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் ஜாவா பெராக் மாடல்களை விநியோகம் செய்துள்ளது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் 2 ஆயிரம் ஜாவா பெராக் மாடல்களை விநியோகம் செய்து இருக்கிறது. பிஎஸ்6 ஜாவா மற்றும் ஜாவா பார்டி டூ மாடல்களால் விற்பனை அதிகரித்து இருக்கிறது.

ஜாவா பெராக் மாடல் நவம்பர் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கியது. இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுக்க விற்பனையகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது.
இந்தியாவில் ஊரடங்கு விதிமுறை தளர்வுகளின் போது கிளாசிக் லெஜண்ட்ஸ் 58 விற்பனையகங்களை திறந்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு விற்பனையகங்கள் எண்ணிக்கையை 205 ஆக அதிகரிக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் திட்டமிட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றில் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அதன்படி மாருதி சுசுகி செலரியோ மாடலுக்கு மொத்தத்தில் ரூ. 51 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு ரூ. 31 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

மாருதி டிசையர் மாடலுக்கு ரூ. 36 ஆயிரம், ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 39 ஆயிரம், எர்டிகா மாடலுக்கு ரூ. 5 ஆயிரம், வேகன் ஆர் மற்றும் இகோ மாடல்களுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
நெக்சா பிராண்டிங் மாடல்களான எஸ் கிராஸ் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகளும், ரூ. 37 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீ பேக் வழங்கப்படுகிறது. சியாஸ் மாடலுக்கு ரூ. 51 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.






