என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1,15,715 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய புகை விதிகளுக்கும் பொருந்தும் அப்டேட் தவிர இந்த மோட்டார்தைக்கிள் புதிதாக பியல் பேட்லெஸ் வைட் எனும் நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பேந்தர் பிளாக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

மேம்பட்ட பிஎஸ்6 மாடலில் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17.8 பிஹெச்பி பவர், 16.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பிஎஸ்6 ரக என்ஜின் புதிய நிறம் தவிர ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 1 லஸட்சம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது.
ரெனால்ட் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
அந்த வகையில் பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைவர் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரையிலான பலன்களும், க்விட் மாடலுக்கு ரூ. 49 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், டிரைவர் மாடலுக்கு ரூ. 39 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.
சிறப்பு சலுகையில் கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் ஊரக பகுதியில் வசிப்போருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் அசத்தல் அப்டேட்கள் நிறைந்த டிஸ்கவரி மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2021 மாடல் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் இதுவரை இல்லாத அளவு மிகவும் சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. தோற்றத்தில் புதிய மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் எஸ், எஸ்இ, ஹெச்எஸ்இ மற்றும் ஆர் டைனமிக் என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இதன் ஆர் டைனமிக் மாடல் பல்வேறு ஸ்போர்டி அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
புதிய டிஸ்கவரி மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 300 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட் வழங்கப்படுகிறது. இது 360 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் பேஸ் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தார் எஸ்யுவி மாடலை சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ததது. புதிய தார் மாடல் இந்தியாவில் பல்வேறு வேரியண்ட்களை கொண்டிருந்தது. மேலும் இதன் துவக்க விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது தார் ஏஎக்ஸ் எஸ்டிடி, ஏஎக்ஸ் பெட்ரோல் மற்றும் எஸ்எக்ஸ் டீசல் வேரியண்ட்களை தார் வலைதளத்தில் இருந்து சத்தமின்றி நீக்கி இருக்கிறது.

மஹிந்திரா தார் மூன்று பேஸ் வேரியண்ட்கள் அதன் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் இதன் துவக்க விலை ரூ. 11.90 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி இருக்கிறது.
தற்சமயம் தார் என்ட்ரி லெவல் மாடல் ஏஎக்ஸ் (ஒ) ஆகும். இது கன்வெர்டிபில் ரூப் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மூன்று பேஸ் வேரியண்ட்களை வலைதளத்தில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை மஹிந்திரா இதுவரை அறிவிக்கவில்லை.
யமஹா நிறுவனத்தின் எப்இசட்-எப்ஐ மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
யமஹா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது எப்இசட்-எப்ஐ 150சிசி மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. அதன்படி பிஎஸ்6 யமஹா எப்இசட் மாடல் விலை ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி இந்த மோ்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1.02 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.04 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யமஹா மோட்டார்சைக்கிள் விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. எனினும், விலை உயர்வுக்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ராயல் என்பீல்டு நிறுவனம் ஏழு ஆண்டுகளில் செயல்படுத்த அதிரடி திட்டம் ஒன்றை தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தனது Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 1.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டு நிகழ்வில் ராயல் என்பீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி வினோத் தசரி அடுத்த ஏழு ஆண்டுகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் 28 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தரிவித்து உள்ளார். மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கான திட்டமிடலை தயார் செய்து இருக்கிறோம். அந்த வகையில் குறைந்தபட்சம் 28 முற்றிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் குறிப்பிட்ட தேதியில் இருந்து இந்த வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ஜனவரி 1, 2021 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதில் 2017, டிசம்பர் 1 அல்லது அதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவில் வரும் பழைய வாகனங்கள் அடங்கும்.
மோட்டார் வாகன சட்டம் 1989 படி 2017 டிசம்பர் மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாஸ்டேக் பொருத்தப்படால் தான் நான்கு சக்கர வாகனத்திற்கான தகுதி சான்று வழங்கப்படும் என அந்த மத்திய அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க பெரும்பாலான பகுதிகளில் பாஸ்டேக் மிக எளிமையாக கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதுதவிர அடுத்த இரண்டு மாதங்களில் ஆன்லைனிலும் பாஸ்டேக் ஐடி பெற முடியும்.
இத்துடன் நாடு முழுக்க அனைத்து டோல்களிலும் எலெக்டிரானிக் பேமண்ட் முறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் டோல்களில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.
பென்ட்லி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பென்ட்லி நிறுவனம் பியாண்ட்100 திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பென்ட்லி நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள தனது கிரீவ் ஆலை தற்சமயம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 75 சதவீதம் வரை குறைக்க இருக்கிறது.
பியாண்ட்100 திட்டத்தை நிறைவேற்றி உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனம் என்ற பெருமையை எட்டுவோம் என பென்ட்லி நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஹால்மார்க் தெரிவித்தார்.

மேலும் 2030-க்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 2021 வாக்கில் பெண்ட்யகா ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
2025 வாக்கில் பென்ட்லி தனது முழுமையான எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹை-ரைடிங் கிராஸ்ஒவர் செடான் மாடல் ஆகும். இது வழக்கமான எஸ்யுவி மற்றும் வழக்கமான கார் மாடலாக இருக்கும்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேக்னைட் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில் புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 5.50 லட்சத்தில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
எம்வி அகுஸ்டா நிறுவனம் புதிதாக அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்வி அகுஸ்டா நிறுவனம் புதிதாக அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது. இந்த தகவலை எம்வி அகுஸ்டா தலைமை செயல் அதிகாரி திமுர் சர்தரோவ் தெரிவித்தார்.
புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட அட்வென்ச்சர் மாடல்களை எம்வி அகுஸ்டா உருவாக்கி வருகிறது. இத்துடன் 500சிசி மற்றும் 1000சிசி மாடல்களும் உருவாகின்றன.

இதில் 500சிசி மாடலில் போரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இதன் 1000சிசி மாடலில் இன்லைன் 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படலாம். சந்தையில் அட்வென்ச்சர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால் எம்வி அகுஸ்டா புதிய மாடல்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அல்ட்ரோஸ் எக்ஸ்எம் பிளஸ் வடிவில் வெளியாகி இருக்கிறது. இது எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்எம் ஸ்டைல் ட்ரிம்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்எம் பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 6.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் வேரியண்ட் பல்வேறு புதிய அம்சங்கள், காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் உபகரணங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்எம் பிளஸ் மாடல் ஹை ஸ்டிரீட் கோல்டு, டவுன்டவுன் ரெட், அவென்யூ வைட் மற்றும் மிட் டவுன் கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் ரெவோடிரான் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மாடலுக்கு புதிய டீசரை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மாடலுக்கென புதிய டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

எனினும், புதிய பலேனோ மாடல் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக பலேனோ ஆர்எஸ் மாடலை 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருந்தது.
எனினும், மோசமான விற்பனை காரணமாக இந்த வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டது. மாருதி சுசுகி பலேனோ ஆர்எஸ் வேரியண்ட் 100 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருந்தது.






