என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் 37,976 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட காருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டு உள்ளது.
துபாயில் பல்வேறு நாடுகளின் அரங்கங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கண்காட்சி அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு 25 உலக சாதனைகளை படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் காரில் 37 ஆயிரத்து 676 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. அதற்காக கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது. இரவு நேரத்தில் நகரம் முழுவதும் இந்த கார் தற்போது வண்ண விளக்குகளால் வைரங்கள் ஜொலிப்பது போல் ஒளிர்ந்தபடி வலம் வருகிறது.

எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கார் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் தொடக்க விழாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக உலக சாதனை படைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த கார் 2-வதாக சாதனை படைத்துள்ளது. இன்னும் 23 உலக சாதனைகள் படைக்க உள்ளதாக அந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எபிக், ஸ்பிக் மற்றும் டாரியோ என மூன்று பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த விண்ணப்பத்தை டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் சமர்பித்து இருந்த நிலையில், தற்சமயம் பெயர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
காப்புரிமை விண்ணப்பங்களின் படி புதிய பெயர்களை தனது எதிர்கால மாடல்களில் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்கள் எந்த கிளாஸ் வாகனங்களுக்கு சூட்டப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
டாடா நிறுவனம் விரைவில் கிராவிடாஸ் மறஅறும் ஹான்பில் என இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து வால்வோ கார் மாயமாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வால்வோ இந்தியா நிறுவனம் தனது வி90 கிராஸ் கண்ட்ரி மாடலை வலைதளத்தில் இருந்து திடீரென நீக்கி உள்ளது. அந்த வகையில் இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இந்தியாவில் வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி மாடல் சிங்கிள் டி5 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 235 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இததுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இதுதவிர ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் இகோ, கம்பர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோட் என நான்கு வித டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிக ஜாவா பெராக் மாடல்களை விநியோகம் செய்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
ஜாவா மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக புதிய மைல்கல் எட்டியுள்ளதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்து இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்கு பின் ஜாவா பிராண்டு இந்திய சந்தையில் 2018 நவம்பர் மாத வாக்கில் அறிமுகமானது.

அறிமுகமானது முதல் முன்பதிவில் ஜாவா மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்பதிவு துவங்கிய சில காலத்தில் இதனை டெலிவரி காலம் எட்டு முதல் பத்து மாதங்களாக அதிகரித்தது. வரவேற்புக்கு இணையாக உற்பத்தியை வேகப்படுத்த கிளாசிக் லெஜண்ட்ஸ் முயற்சித்து வருகிறது.
சமீபத்தில் இந்தியா மட்டுமின்றி நேபால் மற்றும் ஐரோப்பியா போன்ற சந்தைகளிலும் ஜாவா பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கும் ஜாவா மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்து உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த மாதம் இந்நிறுவனம் புதிய தார் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா மராசோ எம்பிவி மாடலின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் மராசோ ஆட்டோமேடிக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ஸ்பைட படங்களில் உள்ள மஹிந்திரா மராசோ பூட் லிட் பகுதியில் ஆட்டோஷிப்ட் பேட்ஜிங் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் நம்பர் பிளேட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் மஹிந்திரா தனது மராசோ எம்பிவி மாடலின் ஆட்டோமேடிக் வேியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த மாடலில் புதிய தார் மாடலில் வழங்கப்பட்ட 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எஸ்பி மாடலில் ஸ்டான்டர்டு குரூயிஸ் கண்ட்ரோல், டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட், பிரஷ் மற்றும் க்ளியர் கோட் செய்யப்பட்ட ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 890சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 115 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்போதைய எம்டி 09 மாடலில் 847சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 111 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் புதிய யமஹா எம்டி 09 எஸ்பி மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் யூனிட், ஸ்லைடு கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், 3.5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
தற்சமயம் யமஹா எம்டி 09 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய 2021 எம்டி 09 எஸ்பி எடிஷன் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
போர்டு நிறுவனத்தின் 2021 இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்சமயம் விற்பனையாகும் இகோஸ்போர்ட் மாடலின் ரக்கட் மற்றும் ஆப்-ரோடு வெர்ஷன் ஆகும்.
ஆக்டிவ் சீரிசில் இணையும் புதிய எஸ்யுவி மாடலாக புதிய இகோஸ்போர்ட் இருக்கிறது. முன்னதாக பியஸ்டா, போகஸ் போன்ற ஹேட்ச்பேக் மாடல்களில் ஆக்டிவ் பிராண்டிங் பயன்படுத்தப்பட்டு உள்ளது. புதிய மாடல் சற்றே உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது.

இதுதவிர புதிய இகோஸ்போர்ட் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இவை மாடலுக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது. புதிய மாடல் வீல் ஆர்ச், பம்ப்பர்களில் பிளாக் கிளாடிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பக்கவாட்டில் ஆக்விட் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடலில் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 125 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021 ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் 2021 ஹோண்டா சிபி1000ஆர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடலில் மேம்பட்ட ஹெட்லேம்ப் பெசல், இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவை சுற்றி கவர் போன்ற பாதுகாப்பு, ரேடியேட்டர், சைடு பிளேட்களில் புதிய ஸ்டைலிங் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 மாடலில் டபிள்யூ ஸ்போக் கேஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் யுஎஸ்பி போர்ட், டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் சார்ந்த ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிபி1000ஆர் மாடலில் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 143 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதே மாடலின் பிரத்யேக பிளாக் எடிஷன் ஆப்ஷனையும் ஹோண்டா வழங்குகிறது.
இந்திய சந்தையில் 2021 ஹோண்டா சிபி1000ஆர் மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் பாதுகாப்பு சோதனையில் பெற்ற புள்ளிகள் பயனர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் சமீபத்திய குளோபல் NCAP சோதனையில் பூஜ்ஜியம் புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த மாடலில் டிரைவர் சைடு ஏர்பேக் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் ஓட்டுனரின் தலையை மட்டும் பாதுகாக்கிறது. ஒட்டுனரின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை என குளோபல் NCAP அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பில் எஸ் பிரெஸ்ஸோ இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ஐசோபிக்ஸ் ஆங்கரேஜ்கள் இல்லாத காரணத்தால் இத்தனை புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வாகனத்தின் வடிவம் நிலையற்றதாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது வாகனங்கள் விலை இப்படி தான் இருக்கும் என தெரிவித்து இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது அனைத்து மாடல்களின் விலையில் 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 1, 2021 முதல் அமலாகும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.
2020 ஆண்டில் ஆடி நிறுவனம் கியூ8, ஏ8 எல், ஆர்எஸ் 7 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ் கியூ8 மற்றும் கியூ2 போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. சமீபத்தில் ஆடி நிறுவனத்தின் கியூ8 செலபிரேஷன் மாடல் ரூ. 98.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆடி கியூ2 மாடலுடன் பீஸ் ஆப் மைண்ட் எனும் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இது 5 ஆண்டுகள் சர்வீஸ், 2+3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 2+3 ஆண்டுகள் ரோட் சைட் அசிஸ்டண்ஸ் வசதியை வழங்குகிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா புத்தம் புதிய டைகர் 850 ஸ்போர்ட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலை நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அட்வென்ச்சர் டூரர் ரக மாடல்களில் புதிய மாடலாக டைகர் 850 ஸ்போர்ட் அறிமுகமாக இருக்கிறது. புதிய டைகர் 850 ஸ்போர்ட் டைகர் 900 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய மாடலில் மேம்பட்ட என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

டீசரில் புதிய மாடலின் அதிக விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வடிவமைப்பு டைகர் 1050 மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் டைகர் 900 மாடலை விட இது வித்தியாச தோற்றம் பெற்று இருக்கும் என தெரிகிறது.
முதற்கட்டமாக டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும். பின் இந்தியாவில் 2021 வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்திய சந்தையில் இது என்ட்ரி லெவல் டைகர் சீரிஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலாக இருக்கும்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது கார் மாடல்களை குத்தகைக்கு வழங்கும் புதிய திட்டத்தை துவங்கி உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஆரிக்ஸ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து கார்களை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்த திட்டம் மாத சம்பளம் வாங்கும் நபர்கள், எஸ்எம்இ-க்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்காக அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா தெரிவித்து உள்ளது.
புகிய கிளெவர் லீஸ் திட்டத்தில் ஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ மற்றும் சூப்பர்ப் மாடல்கள் 24, 36, 48 மற்றும் 60 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மாத வாடகை ரூ. 22,580 முதல் துவங்குகிறது.

இந்த கட்டணத்தில் சாலை வரி, பிரேக்டவுன் அசிஸ்டண்ஸ், விபத்துகளின் போது ஏற்படும் செலவீனங்கள், சர்வீஸ் பராமரிப்பு, டையர் மற்றும் பேட்டரி மாற்றம் உள்ளிட்டவை அடங்கும்.
புதிய சேவை ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, மும்பை, பூனே, பெங்களுரு, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளது.






