என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    தனது வாகனத்தின் நம்பர் பிளேட் வாங்க நபர் ஒருவர் கோடிகளை கொட்டிக்கொடுத்து இருக்கிறார்.


    ஆடம்பர கார் விலை தான் அதிகம் என நினைக்கின்றீர்களா? அப்போ இந்த நம்பர் பிளேட் ஏலம் போன தொகை உங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தும். 

    1902 ஆம் ஆண்டை சேர்ந்த நம்பர் பிளேட் ஒன்று 128,800 பவுண்டுகள் இந்திய மதிப்பில் ரூ. 1.26 கோடி விலைக்கு ஏலம் போனது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த தொகை உலகின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை விட அதிகம் ஆகும்.

     நம்பர் பிளேட்

    ஏலத்தில் இத்தனை கோடிகளை பெற்றுத்தந்த நம்பர் பிளேட் முதன்முதலில் சார்லஸ் தாம்சன் என்பவரால் பிர்மிங்காமில் 1902 ஆம் ஆண்டு பெறப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் வாகனங்களை காண்பது அரிய நிகழ்வாக இருந்தது. அந்த வகையில் இந்த பதிவு எண் மற்றும் வாகனம் மிக எளிதில் காணக்கூடியதாக இருந்தது. 

    இதே பதிவு எண் பல்வேறு ஜாகுவார், ஆஸ்டின் ஏ35எஸ், மின் மற்றும் போர்டு கார்டினா போன்ற மாடல்களுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

    கடந்த சில ஆண்டுகளாக இந்த நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் இருந்து, சமீபத்தில் சில்வர்ஸ்டோன் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. ரூ. 1.26 கோடி கொடுத்து இந்த நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.  
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் ஏஎக்ஸ்1 கான்செப்ட் எனும் குறியீட்டு பெயர் கொண்ட மைக்ரோ எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இது சான்ட்ரோ போன்றே கே1 பிளாட்பார்மில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய மைக்ரோ எஸ்யுவி சான்ட்ரோ மற்றும் வென்யூ மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படலாம் என தெரிகிறது.

    ஸ்பை படங்களின் படி புதிய ஹூண்டாய் கார் டாப்-பாய் டிசைன், பம்ப்பரில் ஹெட்லேம்ப் மவுண்ட் செய்யப்பட்டு, சி வடிவ கிரில் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் சி பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட டோர் ஹேண்டில்கள், 6 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     ஹூண்டாய் கார்

    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே சான்ட்ரோ, ஆரா, கிராண்ட் ஐ10 நியோஸ், இரண்டாம் தலைமுறை கிராண்ட் ஐ10 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் புதிய மினி எஸ்யுவி கொண்டு மைக்ரோ எஸ்யுவி பிரிவில் களமிறங்க ஹூண்டாய் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. 

    இந்திய மைக்ரோ எஸ்யுவி பிரிவில் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, மஹிந்திரா கேயுவி100, இக்னிஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா ஹான்பில் உள்ளிட்ட மாடல்கள் போட்டியை ஏற்படுத்த இருக்கின்றன. 

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஏஎக்ஸ் மாடல் வெளியாகும் பட்சத்தில் இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 4 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். புதிய மாடல் அடுத்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் கான்செப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் தனது புதிய மாடல் காருக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசர் வீடியோவின் படி இந்த மாடல் கைகர் என கூறப்படுகிறது. மேலும் இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ரெனால்ட் கைகர் மாடல் டிரைபர் மற்றும் நிசான் மேக்னைட் உருவான பிளாட்பார்மிலேயே உருவாகி இருக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     ரெனால்ட் கைகர் கான்செப்ட் டீசர்

    முன்னதாக கைகர் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதன் வெளிப்புறம் எல்இடி டிஆர்எல்கள், பம்ப்பரில் ஹெட்லேம்ப், ரூப் ரெயில்கள், ஷார்க் பின் ஆன்டெனா, இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டூயல் டோன் இன்டீரியர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தில் இத்தனை லட்சம் வாகனங்களை விறப்னை செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு வாக்கில் மாருதி சுசுகி டிஜிட்டல் தளத்தை துவங்கியது. பின் 2019 ஏப்ரல் முதல் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

    டிஜிட்டல் தளத்தில் நாடு முழுக்க ஆயிரம் விற்பனையகங்களை கொண்டுள்ளது. இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் கார் விவரங்களை டிஜிட்டல் தளத்தில் கேட்டறிந்துள்ளனர் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது.

     மாருதி சுசுகி கார்

    புதிய கார் வாங்குவோர் பெரும்பாலும் கார் பற்றிய விவரங்களை ஆன்லைனில் ஆய்வு செய்து அதன்பின் விற்பனையகம் செல்கின்றனர். சமீப காலங்களில் வாடிக்கையாளர்கள் அலுவல் வழிமுறைகளை பூர்த்தி செய்யும் முன் விதிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ள விற்பனையகம் செல்கின்றனர். 

    டிஜிட்டல் தளத்தில் புதிய கார் பற்றிய தகவல்களை சேகரிக்கும் வாடிக்கையாளர்கள் பத்து நாட்களுக்குள் காரை வாங்கிவிடுகின்றனர் என மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு காலாண்டிற்கு ஒன்று எனும் வீதத்தில் திட்டத்தை தீட்டி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக எண்ணிக்கையில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்த தகவலை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் 28 மாடல்களை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேவையான உற்பத்தி திறன் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    இவை நிற வேரியண்ட்கள் இன்றி அனைத்தும் புதிய மாடல்கள் ஆகும். இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 250சிசி - 750சிசி பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களை உருவாக்குவது, எலெக்ட்ரிக் மாடல்களை உற்பத்தி செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு உள்ளது.

    இதுதவிர பெரும்பாலான நிதி சர்வதேச சந்தை விரிவாக்க பணிகளுக்கும் செலவிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளியான முதல் மாடலாக Meteor 350 சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்த தேதியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. மேக்னைட் மாடல் ப்ரோடக்ஷன் வெர்ஷன், என்ஜின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கடந்த மாதம் வெளியிட்டது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் நிசான் மேக்னைட் மாடல் இந்தியாவில் நவம்பர் 26 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய மேக்னைட் மாடல் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி நிசான் மேக்னைட் வெளியாகும் பட்சத்தில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய நிசான் மேக்னைட் மாடல் துவக்க விலை ரூ. 5.50 லட்சம் முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாடு முழுக்க சில விற்பனையாளர்கள் இந்த சலுகைகளை வழங்கி வருகின்றன. சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. 

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 2.20 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ எஸ்5 வேரியண்ட்டிற்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     மஹிந்திரா மராசோ

    மஹிந்திரா எக்ஸ்யுவி300 பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகையும், எக்ஸ்யுவி500 மாடலின் டபிள்யூ5 மற்றும் டபிள்யூ7 வேரியண்ட்களுக்கு ரூ. 24 ஆயிரமும், டபிள்யூ9 மற்றும் டபிள்யூ11 வேரியண்ட்களுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. 

    மராசோ மாடலுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எம்2 வேரியண்ட்டிற்கு ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் மினி எஸ்யுவி மாடலை ஹெச்பிஎக்ஸ் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இதே மாடலின் கான்செப்ட் வடிவத்தை டாடா மோட்டார்ஸ் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது.

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஹெச்பிஎக்ஸ் என்கிற ஹான்பில் மாடல் 2021 மே மாத மாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

     டாடா ஹெச்பிஎக்ஸ்

    எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு திட்டம் தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் ஸ்பை படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    ஸ்பை படங்களில் இந்த காரின் பெரும்பாலான அம்சங்கள் தெரியவந்து இருக்கின்றன. புதிய டாடா கார் அந்நிறுவனத்தின் ஆல்பா ஆர்கிடெக்ச்சர் மற்றும் இம்பேக்ட் 2 வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் மாடல் டிமெரோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனம் சமீபத்திய பண்டிகை காலம் அமோகம் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் சமீபத்திய பண்டிகை கால விற்பனையில் 12 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் புதிய பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

     டொயோட்டா கார்

    பண்டிகை காலம், தட்டுப்பாடு மற்றும் அசத்தலான சலுகைகள் உள்ளிட்டவை விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. விற்பனை மட்டுமின்றி முன்பதிவிலும் 10 முதல் 13 சதவீதம் வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக டொயோட்டா தெரிவித்து உள்ளது.

    அக்டோபர் மற்றும் நவம்பர் மாத விற்பனை பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபெற்று இருக்கிறது. பண்டிகை காலம் நிறைவுற்றதும் வாகனங்கள் விற்பனை குறைய வாய்ப்புகள் இருப்பதாக அந்நிறுவனம் கணித்திருக்கிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விநியோகத்தில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் சிபி350 மாடல் ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. 

    இந்த மைல்கல் விநியோகம் துவங்கிய 20 நாட்களில் எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎலஎக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்கள் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

     ஹைனெஸ் சிபி350

    இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஹோண்டா ஹைனெஸ் மாடலில் 348சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 20.78 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Meteor 350 மோட்டார்சைக்கிள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் புதிய Meteor 350 மாடல் இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

    அமெரிக்காவில் ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 349சிசி சிங்கிள் சிலிண்டர், யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

     ராயல் என்பீல்டு Meteor 350

    இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த குரூயிசர் மோட்டார்சைக்கிள் - பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் விலை ரூ. 1.76 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 என்ட்ரி லெவல் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்தசமயம் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் பல்வேறு வேரியண்ட்கள், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     2020 ஹூண்டாய் ஐ20

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய தலைமுறை ஐ20 மாடல் பேஸ் வேரியண்ட் ஒன்று இரா எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஆர்டிஒ அரசு ஆவணம் மூலம் புதிய பேஸ் வேரியண்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    புதிய பேஸ் வேரியண்ட் பற்றிய தகவல்களை ஹூண்டாய் இதுவரை வெளியிடவில்லை. முன்னதாக பலமுறை ஹூண்டாய் தனது வாகனங்களின் பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதனால் புதிய ஐ20 மாடலின் இரா பேஸ் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×