search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நம்பர் பிளேட்
    X
    நம்பர் பிளேட்

    நம்பர் பிளேட் வாங்க கோடிகளை கொட்டிக்கொடுத்த நபர்

    தனது வாகனத்தின் நம்பர் பிளேட் வாங்க நபர் ஒருவர் கோடிகளை கொட்டிக்கொடுத்து இருக்கிறார்.


    ஆடம்பர கார் விலை தான் அதிகம் என நினைக்கின்றீர்களா? அப்போ இந்த நம்பர் பிளேட் ஏலம் போன தொகை உங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தும். 

    1902 ஆம் ஆண்டை சேர்ந்த நம்பர் பிளேட் ஒன்று 128,800 பவுண்டுகள் இந்திய மதிப்பில் ரூ. 1.26 கோடி விலைக்கு ஏலம் போனது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த தொகை உலகின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை விட அதிகம் ஆகும்.

     நம்பர் பிளேட்

    ஏலத்தில் இத்தனை கோடிகளை பெற்றுத்தந்த நம்பர் பிளேட் முதன்முதலில் சார்லஸ் தாம்சன் என்பவரால் பிர்மிங்காமில் 1902 ஆம் ஆண்டு பெறப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் வாகனங்களை காண்பது அரிய நிகழ்வாக இருந்தது. அந்த வகையில் இந்த பதிவு எண் மற்றும் வாகனம் மிக எளிதில் காணக்கூடியதாக இருந்தது. 

    இதே பதிவு எண் பல்வேறு ஜாகுவார், ஆஸ்டின் ஏ35எஸ், மின் மற்றும் போர்டு கார்டினா போன்ற மாடல்களுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

    கடந்த சில ஆண்டுகளாக இந்த நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் இருந்து, சமீபத்தில் சில்வர்ஸ்டோன் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. ரூ. 1.26 கோடி கொடுத்து இந்த நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.  
    Next Story
    ×