என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன விற்பனையில் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

    1945 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் எட்டிய வரலாற்று நினைவுகளை திரும்பி பார்க்கும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பத்மஸ்ரீ விருது வென்ற அனுபம் கெர் குரல் கொடுத்துள்ளார். 

     டாடா மோட்டார்ஸ்

    வீடியோ நிறைவு பகுதியில் சமீபத்திய பிஎஸ்6 ரக டியாகோ, டிகோர், நெக்சான், ஹேரியர் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களின் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இவை இந்திய சந்தையில் பாதுகாப்பான வாகனங்களாக இருக்கின்றன.

    ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய ரெப்சால் எடிஷன் விலை ரூ. 1.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிள் லிமிட்டெட் எடிஷனாக கிடைக்கிறது. இந்த மாடல் பெயின்டிங் ஹோண்டா ரெப்சால் ரேசிங் அணியில் இருப்பது போன்று செய்யப்பட்டு இருக்கிறது. இது மற்ற ஹார்னெட் மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    ஹோண்டா ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன்

    இதுதவிர, புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹார்னெட் 2.0 மாடலில் 184 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த என்ஜின் 16.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் அப்சைடு-டவுன் போர்க்குகள், பின்புறம் பிரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இருபுறங்களில் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் கார் வெளியீட்டுக்கு முன் வலைதளத்தில் அப்டேட் ஆகி இருக்கிறது.


    ஆட் இந்தியா நிறுவனத்தின் வலைதளம் சத்தமின்றி அப்டேட் ஆகி இருக்கிறது. அதன்படி வலைதளத்தில் எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முந்தைய வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலின் இந்திய விற்பனை விவரம் உறுதி செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் 2020 ஆண்டில் ஆடி அறிமுகம் செய்யும் ஆறாவாது கார் ஆகும். முன்னதாக கியூ9, ஏ8 எல், ஆர்எஸ்7, ஆர்எஸ் கியூ8, கியூ8 செலபிரேஷன் மற்றும் கியூ2 போன்ற மாடல்களை ஆடி அறிமுகம் செய்தது.

     ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்

    முந்தைய தகவல்களின் படி புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பெரிய சிங்கிள் பிரேம் கிரில், எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப்கள், பெரிய அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூப்-லைன் மற்றும் பிளாக்டு-அவுட் ORVMகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துட் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்பிஎக்ஸ் மாடல் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யுவி மாடலினை குளிர் பிரதேசங்களில் சோதனை செய்து வருகிறது. புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் இமாச்சல பிரதேசத்தில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் லே மற்றும் மணாலி நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்படுகிறது.

     டாடா ஹெச்பிஎக்ஸ்

    சோதனை செய்யப்படும் ஹெச்பிஎக்ஸ் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் அந்நிறுவனத்தின் ஆல்பா ஆர்கிடெக்ச்சர் மற்றும் இம்பேக்ட் 2 வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் மாடல் டிமெரோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய ஹெச்பிஎக்ஸ் என்கிற ஹான்பில் மாடல் 2021 மே மாத மாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

    ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் எஸ்யுவி கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பி எஸ்யுவி மாடலின் கான்செப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கைகர் எனும் பெயரில் அறிமுகமாகிறது. ரெனால்ட் கைகர் மாடல் முதற்கட்டமாக இந்தியாவிலும் அதன்பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய கைகர் மாடல் CMFA+ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது ரெனால்ட் - நிசான் - மிட்சுபிஷி கூட்டணியின் பேரில் உருவாகிறது. நிசான் மேக்னைட் மாடலும் இதே பிளாட்பார்மில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

     ரெனால்ட் கைகர்

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடலில் பிரம்மாண்ட தோற்றம், ஏ பில்லர், உயர்த்தப்பட்ட பொனெட் லைன் கொண்டிருக்கிறது. முன்புறம் 2 ஸ்கேல் எல்இடி ஹெட்லைட்கள், 2 ஸ்லாட் கிரில் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது.

    இரண்டாம் கட்ட லைட்கள் பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. பம்ப்பரின் கீழ்புறம் மெஷ் போன்ற ஏர் இன்டேக் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் 2018 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இது இந்தியாவில் அறிமுகமான முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும். 

    தற்சமயம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோனா எலெக்ட்ரிக் மாடலின் பேஸ்லிப்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் டிசைன் அப்டேட் மற்றும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கோனா பேஸ்லிப்ட் மாடலில் கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     ஹூண்டாய் கோனா

    இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், 3 பிராக்ஷன் எல்இடி ஹெட்லைட்கள், கீழ்புறம் அகலமான ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், உள்புறம் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேஸ்லிப்ட் மாடலில் 39.2 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 136 பிஹெச்பி மற்றும் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோமீட்டர் மற்றும் 484 கிலோமீட்டர் வரை செல்கிறது.
    எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 75 அனிவெர்சரியோ எடிஷன் நொடிகளில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    எம்வி அகுஸ்டா நிறுவனம் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சூப்பர்வெலோஸ் 75 அனிவெர்சரியோ எடிஷனை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஸ்டான்டர்டு சூப்பர்வெலோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் நவம்பர் 14 ஆம் தேதி துவங்கி 75 மணி நேரம் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மாடல் மொத்தமே 75 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் விற்பனை துவங்கிய நொடிகளில் விற்று தீர்ந்துள்ளது.

     சூப்பர்வெலோஸ் 75 அனிவெர்சரியோ எடிஷன்

    சூப்பர்வெலோஸ் 75 அனிவர்சரியோ மாடலில் 798சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 147 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் காரை இந்திய சந்தையில் ரீகால் செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்யுவி டீசல் யூனிட்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் பியூவல் பம்ப்பில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்யப்படுவதற்கான காரணமாக கூறப்படுகிறது.

    அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கியா செல்டோஸ் டீசல் யூனிட்கள் ரீகால் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், எத்தனை யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

     கியா செல்டோஸ்

    வாடிக்கையாளர்கள் தங்களின் செல்டோஸ் டீசல் வேரியண்ட்டை அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் கொண்டு சென்று காரை சரி செய்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த கோளாறு இலவசமாக சரி செய்து வழங்கப்படுகிறது. 

    கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கேடிஎம் நிறுவனம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மாடலாக இருக்கும். புதிய அட்வென்ச்சர் மாடல் வெளியீடு பற்றி கேடிஎம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    இந்நிலையில், புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேடிஎம் 250 அட்வென்ச்சர்

    முன்னதாக கேடிஎம் விற்பனையாளர்கள் புதிய கேடிஎம் 250 மாடலுக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை துவங்க இருப்பதாகவும், முன்பதிவு கட்டணம் ரூ. 1000 வரை வசூலிப்பதாக தகவல்கள் வெளியானது.

    கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    ஹோண்டா நிறுவனத்தின் 2022 ஹோண்டா சிவிக் ப்ரோடோடைப் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் செடான் ப்ரோடோடைப் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சிவிக் ப்ரோடோடைப் தற்போதைய சிவிக் மாடலை விட அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது.

    2022 சிவிக் மாடல் மினிமலிஸ்டிக் ஸ்டைலிங், சிறு வளைவுகள், கிரீஸ்கள் இடம்பெற்று இருக்கின்றன. இவை காருக்கு நவீன தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், பியானோ-பிளாக் பினிஷ் செய்யப்பட்ட கிரில், முன்புற பம்ப்பரில் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     2022 ஹோண்டா சிவிக் ப்ரோடோடைப்

    இத்துடன் 19 இன்ச் அலாய் வீல்கள், கருப்பு நிற ORVMகள் வழங்கப்பட்டுள்ளன. இது பிளாக்டு-அவுட் பி-பில்லருடன் மேட்ச் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பின்புறம் ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்கள் டூயல் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய ஹோண்டா சிவிக் 11-ஆம் தலைமுறை மாடல் பல்வேறு பாடி டைப்களில் கிடைக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது செடான் மற்றும் ஹேட்ச்பேக் வடிவில் கிடைக்கும். இதுதவிர டைப் ஆர் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடல் 5.5 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

     மாருதி சுசுகி எர்டிகா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் அதிகம் விற்பனையாகும் எம்பிவியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் எர்டிகா மாடல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    மாருதி எர்டிகா எம்பிவி மாடல் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நவம்பர் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளிப்புறம் மற்றும் உற்புறங்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

    பின் 2019 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா மாடலின் 6 பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷனை எக்ஸ்எல்6 பெயரில் அறிமுகம் செய்தது. இந்த மாடலும் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்து இருக்கிறது. 

    புதிய மாடல் ரோட்-ஒரியன்டெட் அட்வென்ச்சர் டூரர் ஆகும். இது சமீபத்தில் அறிமுகமான டைகர் 900 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இந்த மாடல் டைகர் 900 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புதிய பாடி கிராபிக்ஸ், டூயல் டோன் பெயின்ட்டிங் செய்யப்பட்டு உள்ளது. 

     டைகர் 850 ஸ்போர்ட்

    டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் கிராபைட் / டைப்ளோ ரெட் மற்றும் கிராபைட் / கேஸ்பியன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஷீல்டு, ப்யூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட் மற்றும் எல்இடி லைட்கள் டைகர் 900 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் 888சிசி லிக்விட் கூல்டு இன் லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது டைகர் 900 மாடலை விட 10 பிஹெச்பி மற்றும் 5 என்எம் குறைவு ஆகும். 

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இதனுடன் குவிக் ஷிப்டர் கூடுதல் அக்சஸரீயாக வழங்கப்படலாம். 

    ×