என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து, முன்பதிவையும் துவங்கி உள்ளது. புதிய மேக்னைட் மாடல் விநியோகம் டிசம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
இந்நிலையில், புதிய நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் டிசம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.5 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய நிசான் மேக்னைட் மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் விற்றுத்தீர்ந்ததை தொடர்ந்து புதிய விலை பட்டியலுடன் முன்பதிவு துவங்கி இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இது சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை அக்டோபர் 31 ஆம் தேதி அல்லது முதல் 20 ஆயிரம் முன்பதிவுகளுக்கு ரூ. 28.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அறிமுகமானது முதல் இந்த கார் 2020 ஆண்டுக்கான யூனிட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் புதிய விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவை அறிமுக விலையை விட ரூ. 1 லட்சம் வரை அதிகம் ஆகும்.
எம்ஜி குளோஸ்டர் மிட்-லெவல் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் விலை முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாகி இருக்கிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜின் நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விநியோகத்தை துவங்கி உள்ளது. இரு மாடல்களும் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விரைவில் மும்பை, ஆமதாபாத், ஐதராபாத் போன்ற நகரங்களில் விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. நாட்டின் மற்ற நகரங்களில் அதன்பின் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் சீரிஸ் 1 ஸ்பெஷல் கலெக்டர்ஸ் எடிஷன் மாடல் விரைவில் கொச்சி, கோழிக்கோடு, டெல்லி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் விற்பனைக்கு வருகிறது. ஏத்தர் 450எக்ஸ் மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் டியோ ரெப்சால் லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் விலை ரூ. 69,757, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டியோ டீலக்ஸ் வேரியண்ட்டை விட ரூ. 2500 வரை அதிகம் ஆகும்.
புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரில் ரெப்சால் ரேசிங் டீம் சார்ந்த ஸ்போர்ட்ஸ் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆரஞ்சு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி புதிய மாடலில் சைலன்ட் ஸ்டார்டர், வெளிப்புற பியூவல் பில்லர் கேப், முன்புற பாக்கெட், டிசி எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் 109.19 சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.65 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5.3 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டுள்ளது.
கவாசகி நிறுவனத்தின் டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கவாசகி நிறுவனம் இந்தியாவில் வெளியிட பிரத்யகே ரெட்ரோ-கிளாசிக் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வந்தது. அந்த வரிசையில், தற்சமயம் கவாசகி டபிள்யூ175 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிள் எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலின் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் பல நாடுகளில் டபிள்யூ175 மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதன் இந்திய வெர்ஷன் அதிக மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. கவாசகி டபிள்யூ175 மாடலில் 177சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 13 பிஹெச்பி பவர், 13.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த என்ஜினுடன் மிகுனி விஎம்24 கார்புரேட்டர் வழங்கப்படுகிறது.
போர்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை சொந்தமாக உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளன. இந்நிலையில், போர்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை சொந்தமாக உற்பத்தி செய்ய இருக்கிறது.
புதிய தகவலை போர்டு மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் பேர்லி தெரிவித்தார். பேட்டரி உற்பத்தி பற்றிய பேச்சுவார்த்தை அதிகாரிகள் மத்தியில் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே டெஸ்லா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு சொந்தமாக பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த வரிசையில் தற்சமயம் போர்டு இணைய இருக்கிறது.
ஜீப் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜீப் நிறுவனம் தனது 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலை சீனாவில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் காம்பஸ் மாடல் மிட்-லைப் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய 2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் போதும் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் அளவில் 29எம்எம் மற்றும் 17எம்எம் வரை நீளமும் உயரமும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

முன்புறம் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது. முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு ஏர் இன்லெட் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த கார் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் கார் 20 நாட்கள் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவு துவங்கிய 20 நாட்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் சுமார் 4 ஆயிரம் யூனிட்களை டெலிவரி செய்ததாக அறிவித்தது. முன்பதிவில் 85 சதவீத யூனிட்கள் ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) ட்ரிம்கள் என ஹூண்டாய் அறிவித்து இருக்கிறது.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் ஆறு சிங்கிள் டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் இது கிடைக்கிறது.
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
கேடிஎம் இந்தியா நிறுவனம் புதிய 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,48,256, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
புதிய 250 அட்வென்ச்சர் மாடலில் 248சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின், எலெக்டிரானிக் பியூவல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 29.5 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செய்லதிறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் WP APEX சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 177 எம்எம் மோனோஷாக், முன்புறம் 43 எம்எம் அப்சைடு-டவுன் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்எம் டிஸ்க், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் பிரேக், போஷ் நிறுவனத்தின் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2021 எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட எஸ் 1000 ஆர்ஆர் புல்லி-பேர்டு மாடலின் நேக்கட் ரோட்ஸ்டர் எடிஷன் ஆகும்.
புதிய 2021 எஸ் 1000 ஆர் மாடல் முந்தைய மாடலை விட மேம்பட்ட ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. முன்புறம் ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், ட்வீக் செய்யப்பட்ட பியூவல் டேன்க் டிசைன், குவாட்டர் பேரிங், எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் மேம்பட்ட சேசிஸ், பிளெக்ஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் எடையை ஒட்டுமொத்தமாக குறைக்க வழி செய்கிறது. இதனால் மோட்டார்சைக்கிளை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கிறது.
2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் மோட்டார்சைக்கிளில் 999சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை செலரியோ மாடலை உருவாக்கி வருகிறது. இது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய செலரியோ அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. முன்புறம் புது வடிவமைப்பில் ஒற்றை ஸ்லாட் கிரில், ஹெட்லைட் மற்றும் பம்பம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பென்டர்களில் இன்டிகேட்டர் லைட்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் பின்புறம் பெரிய, டெயில் லேம்ப்கள், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட ரிப்ளெக்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய செலரியோ மாடலில் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய செலரியோ மாடலில் பிஎஸ்6 ரக 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகியின் புதிய செலரியோ மாடல் டாடா டியாகோ, ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் ரெனால்ட் க்விட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 மேபக் எஸ் கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2015 முதல் விற்பனையாகி வரும் மேபக் எஸ் கிளாஸ் சீரிசில் மெர்சிடிஸ் பென்ஸ் இதுவரை உலகம் முழுக்க 60 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் மாடல் வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் முன்புற கிரில், பொனெட், அலாய் வீல் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர ஆப்ஷனல் டூ-டோன் பெயின்ட்டிங் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் இரண்டாம் தலைமுறை MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.8 இன்ச் டேப்லெட் போன்ற OLED இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் 3டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
புதிய மேபக் எஸ் கிளாஸ் மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள், 48 வோல்ட் இகியூ பூஸ்ட், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வழங்கப்படுகிறது.






