search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிவிலக்கு

    தமிழ் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழுமையான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக தமிழ் நாடு மாறி உள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி டிசம்பர் 31, 2022 வரை தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படுகிறது. 

    இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ் நாடு மின்சார வாகன கொள்கை 2019 இன் படி மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், பேருந்து மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் என அனைத்திற்கும்  முழுமையான வரிவிலக்கு கிடைக்கும்.

    வரிவிலக்கு மட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரி, சார்ஜிங் அக்சஸரீ உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்வோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×