search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இன்னோவா டூரிங் ஸ்போர்ட்
    X
    இன்னோவா டூரிங் ஸ்போர்ட்

    டொயோட்டா வலைதளத்தில் இருந்து மாயமான இன்னோவா ஸ்பெஷல் எடிஷன்

    டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து இன்னோவா ஸ்பெஷல் எடிஷன் மாடல் நீக்கப்பட்டு இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் வலைதளத்தில் இருந்து  இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மாடல் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மாடல் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருந்தது. இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறதா என டொயோட்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

     இன்னோவா டூரிங் ஸ்போர்ட்

    டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக ஸ்பெஷல் எடிஷன் இன்னோவா மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.  
    Next Story
    ×