என் மலர்
- உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.
- தப்பளகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
தப்பளகுண்டு, நத்தம், பிள்ளையார்கோவில் தெரு, அக்கினி மாடன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.இதில் தி.மு.க. நிர்வாகிகள் மோகன்லால், சரஸ்வதி, கிளை செயலாளர் ஜோசப், தமிழரசன் அண்ணாமலை, நகர பிரதிநிதி ஆதிவிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கேசவராஜ் சாலடியூர் சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்.
- சுடலையாண்டி அந்த பகுதியில் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் நின்றார்.
நெல்லை:
பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் கேசவராஜ்(வயது 51). இவர் அங்குள்ள சாலடியூர் சந்திப்பு பகுதியில் நின்று லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயற்சித்தார்.
உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 460 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தென்காசி அருகே கீழப்புலியூரை சேர்ந்த சுடலையாண்டி(66) என்பவர் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் அந்த பகுதியில் நின்றார். அவரை தென்காசி போலீசார் கைது செய்து லாட்டரியை பறிமுதல் செய்தனர்.
- திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.
- மழையையும் பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதியம் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை
நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் சுமார் அரைமணி நேரம் மட்டுமே பெய்த திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை ஏராளமான இடங்களில் முறிந்து விழுந்தன. இதனால் ஒரு சில இடங்களில் கடுமை யான சேதங்கள் ஏற்பட்டது.
குறிப்பாக புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள பூங்காவில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்குள் திரும்பும் சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்ப டுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளை களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒருசில இடங்களில் மாலையில் இருந்து இரவு வரையிலும் மின்சாரம் தடைபட்டது. பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்சாரம் போவதும், வருவதுமாக இருந்தது. பலத்த காற்று காரணமாக உயரமான கட்டி டங்கள் சிலவற்றில் மேற்கூரை கள் காற்றில் பறந்தன.
வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை சேதம்
பாளையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக பின்புறமாக முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள அங்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்ப டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மேற்கூரை சரிந்து விழுந்த மைதா னத்திற்குள் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொ ள்வோர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட யாரும் செல்ல வேண்டாம் என்று கமிஷனர் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் இன்று காலை அங்கு வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டத்தில் பாளையில் அதிகபட்சமாக 8 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
- ஹசீனா பேகத்துடன் தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார்.
- பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் கான் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் டவுன் முகம்மது அலி தெருவை சேர்ந்த மகபூப்ஜான் என்பவரது மகள் ஹசீனா பேகம் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இளம்பெண் கொலை
இந்நிலையில் நேற்று மனைவியுடன் பேட்டை தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார். தொடர்ந்து இம்ரான்கான் டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
பின்னர் அவர் பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை கைது செய்த பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
குடும்பம் நடத்த வர மறுப்பு
எங்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனக்கும், எனது மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் என்னிடம் கோபித்து கொண்டு டவுனில் உள்ள தாய் வீட்டிற்கு ஹசீனா பேகம் சென்று விட்டார். அவரை என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வருமாறு அழைக்க நேற்று அவரது வீட்டிற்கு சென்றேன்.
அப்போதும் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஹசீனா பேகத்தை தர்காவுக்கு வருமாறு அழைத்து சென்றேன். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த என்னுடன் வருமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததுடன் என்னுடன் வாக்குவாதம் செய்தார்.
இதில் ஆத்திரடைந்த நான் எனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினேன். இதில் பலத்த காயம் அடைந்து அங்கேயே உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
- தி.மு.க. ஆட்சி காலத்தில் வ. உ. சி. மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
- பணிகளை கண்காணிக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் இன்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்தில் உள்ள வ. உ. சி. மைதானம் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும், பெரிய வர்கள் நடைபெற்று மேற்கொள்ளும் வகையிலும் பயன்பட்டு வந்தது. இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதன்படி ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப் பட்டது.
இந்த மைதானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் தரமற்ற முறையில் கட்டப்பட்டதன் விளைவாக நேற்று பலத்த காற்றுடன் அரை மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த மைதானத்தின் மேற்கூரை சேதம் அடைந்தது.
அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே தரமற்ற முறையில் மைதானத்தை அமைத்த ஒப்பந்ததாரர் மீதும், அதனை உரிய முறையில் கண்காணிக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் சேதமடைந்த பகுதி போக மீதமுள்ள கேலரிகளை நிபுணர்கள் கொண்டு உடனடியாக ஆய்வு செய்து அவற்றின் உறுதி தன்மையையும் பரிசோதிக்க வேண்டும். தற்போது சேதம் அடைந்த பொருட்களுக்கான தொகையை கணக்கிட்டு இந்த சம்பவத்திற்கு காரண மானவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அப்போது கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, மேகை சக்தி குமார், மோகன், ஹயாத், கவுன்சிலர் சந்திரசேகர், மகபூப் ஜான், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வட்டச் செயலாளர்கள் வன்னை கணேசன், பாறையடி மணி, நந்தகுமார், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் தாழை மீரான், வெள்ளப்பாண்டி, சம்சு சுல்தான், பக்கீர் மைதீன் வாஸ்து தளவாய், தங்க பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சேதம் அடைந்த கேலரிகளை நேரில் ஆய்வு செய்தேன். அதன் அருகில் உள்ள மற்ற கேலரிகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதன் தரத்தை ஆய்வு செய்ய சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லைக்கு வர உள்ளது.
அவர்கள் ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியிலான மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
- நெல்லை மாவட்டத்தில் இடி- மின்னல் மழை, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறி யாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் முத்துக்குட்டி மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசியதாவது:-
மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31-ந்தேதி கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்த அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும்.
கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.
இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும்.
மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
- சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
- கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விநாயகர், சாஸ்தா கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் உள்ளன. மேலும் இந்த கிராமத்தை சுற்றி நீரோடைகளும் ஓடுகின்றன. தலையணை ரோட்டில் இருந்து, சிவபுரம் கிராமத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய களக்காடு பேரூராட்சி நிதி ஒதுக்கீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. சிவபுரம் அருகே சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் குழாய் மூலம் பாலமும் அமைக்கப்பட்டது.
அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு வனத்துறையினர் கடந்த மாதம் சிவபுரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்தனர். அத்துடன் சாலையில் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நீரோடையில் அமைக்க ப்பட்ட பாலத்தையும் பெயர்த்து, குழாய்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் சிவபுரத்திற்கு செல்லும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்களுக்கு டிராக்டர், லாரிகள் மூலம் இடு பொடுட்களை கொண்டு செல்ல முடியாமலும், விளை பொருட்களை விளைநிலங்களில் இருந்து ஊர்களுக்கு கொண்டு வர முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சேதப்படுத்தி, கிராம மக்களை அவதிக்குள்ளாகி வரும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரத்தை மூடி அங்குள்ள மக்களை வெளியேற்றி, விளைநிலங்களையும் கையகப்படுத்தி, விவசாயத்தை அழிக்க வனத்துறையினர் சதி செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதற்காகத்தான் வனத்துறையினர் முதல் கட்டமாக சிவபுரம் சாலையை அடைத்து, பின்னர் போக்குவரத்தை தடை செய்ய, சாலையை துண்டித்துள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது.
- பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் அளித்த மனுவில், தச்சநல்லூர் மண்டலம் 3-வது வார்டுக்கு உட்பட்ட சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது. தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் இந்த பகுதியில் வாழும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சமுதாய நலக்கூடத்தை செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், சுடலை ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. முறையாக கட்டப்படாததால் இது ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
- கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரி வாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
- பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு,கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- வாகனத்தில் முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி இ.சி.சங்கரன்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பஸ்களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்வது போன்று இந்த ஆண்டும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் 136 பள்ளி வாகனங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதுமட்டுமின்றி வாகனத்தில் படிக்கட்டு, அவசர வழி, சி.சி.டி.வி. காமிரா,வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளதா என்றும், முதலுதவி பெட்டிகள், மருந்துகள் சரியாக இருக்கிறதா என்றும் சரிபார்க்கப்பட்டது.
வாகனத்தில் முன்புறமும், பின்புறமும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் ஓட்டுநர் வாகனத்தை இயக்குவதற்கு வசதியாக முன்பும், பின்பும் தெரியும் படி காமிரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார், தீயணைப்பு துறை அலுவலர் மகா லிங்கம், நேர்முக உதவி யாளர் முருகன், கண்கா ணிப்பாளர் சிவன் ஆறுமு கம், உதவியாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2, வட்டார போக்குவரத்து அலுவலகம் மணிபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
- வேதியியல் பாடத்தில் மாணவி அனுசியா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தென்காசி:
பிளஸ்-1 பொதுத்தேர்வை இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 63 பேர் எழுதினர். மாணவி ஹரிணி சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெ ண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், வணிகவியலில் 76 மதிப்பெ ண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், வணிக கணிதத்தில் 80 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தில் சாதனை படைத்தனர். மாணவி மரியம் தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 91 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 92 மதிப்பெண்களும், வேதியலில் 94 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 73 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி அனுசியா தமிழில் 75 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 86 மதிப்பெ ண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களும், கணிதத்தில் 87 மதிப்பெண்களும் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் பாடவாரியாக தமிழில் 92 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெ ண்களும், சமஸ்கிருதத்தில் 99 மதிப்பெண்களும், இயற்பியலில் 97 மதிப்பெண்களும், வேதியலில் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெ ண்களும், பொருளியலில் 98 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 92 மதிப்பெண்களும் பெற்றுச் சாதனை படைத்தனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.
- பழைய பொ ருட்கள் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தென்காசி:
சென்னை பேரூ ராட்சிகளின் இயக்குநர் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் அறிவு ரைப்படி தென்காசி மாவ ட்டம் ஆய்க்குடி பேரூ ராட்சியில் 7-வது வார்டு சிவன் கோவில் மைதா னத்தில் பொது மக்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள், பழைய காலணிகள் போன்றவை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆய்க்குடி பேரூ ராட்சி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பழைய பொ ருட்கள் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது துணை த்தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சாந்தி, வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலக ம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வள ர்மதி, ஷோபா, பேச்சிமுத்து மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். பொது மக்களிடம் மஞ்சப்பை விழிப்பு ணர்வும் ஏற்படுத்த ப்பட்டது. முடிவில் சிறப்பாக பணி யாற்றிய தூய்மை பணியா ளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.







