search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. மைதான கேலரி இடிந்து விழுந்த விவகாரம்:அதிகாரிகள்-ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- துணை மேயரிடம், இந்து முன்னணி மனு
    X

    துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் பொதுமக்கள் மனு அளித்த காட்சி. 

    வ.உ.சி. மைதான கேலரி இடிந்து விழுந்த விவகாரம்:அதிகாரிகள்-ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- துணை மேயரிடம், இந்து முன்னணி மனு

    • சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது.
    • பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் அளித்த மனுவில், தச்சநல்லூர் மண்டலம் 3-வது வார்டுக்கு உட்பட்ட சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது. தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் வாழும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சமுதாய நலக்கூடத்தை செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், சுடலை ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. முறையாக கட்டப்படாததால் இது ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×