search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. மைதானத்திற்குள் நுழைய தற்காலிக தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
    X

    வ.உ.சி. மைதானம் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் நிற்கும் காட்சி.

    வ.உ.சி. மைதானத்திற்குள் நுழைய தற்காலிக தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

    • திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.
    • மழையையும் பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதியம் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் சுமார் அரைமணி நேரம் மட்டுமே பெய்த திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை ஏராளமான இடங்களில் முறிந்து விழுந்தன. இதனால் ஒரு சில இடங்களில் கடுமை யான சேதங்கள் ஏற்பட்டது.

    குறிப்பாக புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள பூங்காவில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்குள் திரும்பும் சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.

    மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்ப டுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளை களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒருசில இடங்களில் மாலையில் இருந்து இரவு வரையிலும் மின்சாரம் தடைபட்டது. பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்சாரம் போவதும், வருவதுமாக இருந்தது. பலத்த காற்று காரணமாக உயரமான கட்டி டங்கள் சிலவற்றில் மேற்கூரை கள் காற்றில் பறந்தன.

    வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை சேதம்

    பாளையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக பின்புறமாக முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள அங்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்ப டும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மேற்கூரை சரிந்து விழுந்த மைதா னத்திற்குள் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொ ள்வோர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட யாரும் செல்ல வேண்டாம் என்று கமிஷனர் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார்.

    இதனால் இன்று காலை அங்கு வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டத்தில் பாளையில் அதிகபட்சமாக 8 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    Next Story
    ×