என் மலர்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
- அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கோவில்பட்டி:
தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. மேலும், மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.
திறமையான காவல்துறை இருந்தாலும், அந்த துறையை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் கண்டு காணாததும் போல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக மக்கள் நடமாடும் இடங் ளில் தாராளமாக கிடைக்கின்றன. மாணவர்களை குறி வைத்தே பொருட்கள் விற்பனை நடக்கின்றன. இதனை தடுக்க இந்த அரசு திராணியற்று இருக்கிறது.
கோடை காலமான தற்போது அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருமான வரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னிச்சையான அமைப்பு. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு யாரை வேண்டுமென்றாலும் சோதனையிட உரிமை உள்ளது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுதான் மரபு.
இதையெல்லாம் பின்பற்றும் வழக்கம் தி.மு.க.வு.க்கு கிடையாது. அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
- தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, மெஞ்ஞான புரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, வெள்ளாளன்விளை, லட்சுமிபுரம், நங்கைமொழி உட்பட 18 ஊராட்சி மன்ற பகுதிகளிலும், அதுவும் செம்மணல் மற்றும் வண்டல் மண் நிறைந்தபகுதிகளில் முருங்கை மற்றும் தென்னை பயிரிடுவதில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரையிலும், தேங்காய் ஒரு கிலோ ரூ.26-க்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக அக்கறை எடுத்து தீவிரமாக பயிரிட்டு வருகின்றனர்.
- ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார்.
- 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.
தென்திருப்பேரை:
மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் பிரிய தர்ஷனி, பிரேமா மற்றும் பொன் ராதா, 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் சுஜி, சுமதி, சஹானா ஆகியோர்களுக்கு பரிசுகள் மற்றும் பொன்னா டை அணிவித்து பாராட்டு கள் தெரிவிக்க ப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்ச்சியில் ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார்.
தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் ராஜகுமார் வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிங்ஸ்லி நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்தார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ராஜாதி பஞ்சாயத்து தலைவர் சவுந்திரராஜன், சேதுக்கு வாய்தான் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன், குருகாட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராணி ராஜ்குமார், குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெய முருகன், சமூக ஆர்வலர் பலவேசம், கவுன்சிலர் ஆனந்த், துர்க்கை யாண்டி, மாரியப்பன், குமார் பெருமாள், ஜெயசிங், வக்கீல் துர்க்கை ராஜா, கடம்பாகுள பாசன விவசாய சங்க உறுப்பினர் கணேசன், சுதா வீரமணி, ஆல்பர்ட் மற்றும் தென்திருப்பேரை சுற்று வட்டார ஆன்மீக அறக்க ட்டளை பொருளாளர் மாரிதுரை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர் முத்து வீர பெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- முகமது ஆரோன் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை கைகளால் தாக்கி விட்டு மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினர். இதில் தலை, காது உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த முகமது ஆரோன் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்பசாமி (25), செல்வகணேஷ் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 வாலிபர்களை பிடிப்பதற்காக தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்த மனீஸ்வரன்(20), மகாராஜன்(22) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் இவர்கள் பெயர் இருப்ப தாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
- 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செய லாளர் என். பெரியசாமியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக் பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் அசைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், அன்ன லட்சுமி, கலைச்செல்வி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்;சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர நாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன், பகுதி செய லாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதி கண்ணன், சின்ன பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன்,
தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி,
உள்பட பலர் மரியாதை செலுத்தி னார்கள்.
தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன், டேவிட், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
- வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள பொன் மாடசாமி கோவில் வைகாசி கொடை விழாவை முன்னிட்டு முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.
போட்டியானது சிறிய மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்ப ட்டது. பின்னர் இப்போ ட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. திருவிழா வையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் ராமர், மாடசாமி, காசி, செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
- சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் மேலூரில் நின்று சென்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம், 2-வது ரெயில்வே கேட் அருகே இருந்து புதிய பஸ் நிலையம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் நின்று சென்றது. அதில் இருந்து மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர். அனைத்து ரெயில்களும் மேலூா் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் மணிகண்டன்(வயது 21). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் சாலை பள்ளத்தில் விழுந்து சறுக்கியபடி சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை- இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் கீழத்தெரு சேனைத் தலைவா் சமு தாயம் சார்பில் கொடை விழா நடை பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்யகல்யாணி அம்மன், பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்கும அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நள்ளிரவு செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் நித்யகல்யாணி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயத்தினர், இளைஞர் சங்கத்தினர், விழா கமிட்டியினா் செய்திருந்தனர்.
- உமைய பார்வதி மீது நவஜோதி இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார்.
- மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் -உமைய பார்வதி தம்பதிக்கும், பன்னீர் - பாப்பம் மாள் தம்பதிக்கும் சுமார் 6 மாத காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களான இவர்க ளுக்குள் அவ்வப்போது சிறு, சிறு தகராறு நடந்து வந்துள்ளது.
பெண் மீது தாக்குதல்
இந்நிலையில் கடந்த 20-ந்தேதி மாலை தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த உமைய பார்வதி மீது பன்னீர் என்பவரது மகன் நவஜோதி (வயது27) இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திர மடைந்த நவஜோதி, உமைய பார்வதியை தாக்கி உள்ளார். தொடர்ந்து நவஜோதியுடன் அவரது தந்தை பன்னீர், தாய் பாப்பம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து, வீட்டுக்குள் சென்ற உமைய பார்வதியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு செங்கல்லை கொண்டு அடித்துள்ளனர்.
இதில் காயங்களுடன் மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி பன்னீர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தலைமறைவான நவஜோதிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது.
- பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது.
- தென்காசி வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், செங்கோட்டை தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது. இங்கு உள்ள விருந்தினர் ஆய்வு மாளிகை கட்டிடம் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது எங்களது பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மேலும் ஆய்வு மாளிகை கட்டிடம் அமையும் பட்சத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே புதிய கட்டிடம் அமைவதற்கு தாங்கள் ஆவணம் செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 11 கூட்டப்பொருட்களும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ராம்லால் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 11 கூட்டப்பொருட்களும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.







