search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரியசாமி சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    X

    பெரியசாமி சிலைக்கு கனிமொழி எம்.பி.,அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்திய காட்சி.

    6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரியசாமி சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    • 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செய லாளர் என். பெரியசாமியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக் பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் அசைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், அன்ன லட்சுமி, கலைச்செல்வி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்;சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர நாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன், பகுதி செய லாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதி கண்ணன், சின்ன பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன்,

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி,

    உள்பட பலர் மரியாதை செலுத்தி னார்கள்.

    தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன், டேவிட், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர்.

    Next Story
    ×