என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
      • சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

      நெல்லை:

      நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்த்து உள்ளனர்.

      இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூர்யாவை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது பணியில் இருந்த 15 போலீசார் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்.

      பின்னர் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

      • இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
      • 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

      வள்ளியூர்:

      வள்ளியூர் அருகே உள்ள தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலயதிருவிழா கடந்த 21-ந் தேதி பங்குதந்தை லூர்துசாமி மற்றும் தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கே. மணி ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

      தேர்ப்பவனி

      திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை, திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று மாலை பாதிரியார் போஸ் தலைமையில் பாதிரியார்கள் சந்தியாகு, செல்வின், கோட்டார் ஷிபு ஆகியோர் முன்னிலையில் பெருவிழா மாலை ஆராதனை மற்றம் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

      நிகழ்ச்சியின் போது வி.பி.எஸ். மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அசனவிருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

      10-ம் திருவிழா

      10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர் பங்குகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      ஏற்பாடுகளை தெற்குபுதூர் பங்குதந்தை லூர்துசாமி, சி.எம். அடிகளார், தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

      • லெட்சுமியை கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் துரத்தியது.
      • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

      களக்காடு:

      களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி லெட்சுமி (வயது70). இவருக்கு குழந்தைகள் இல்லை. கணவர் சுப்பிரமணியனும் பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் பத்மநேரியில் பொதுமக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை நாய்கள் துரத்தியது. இதனால் பயத்தில் ஓடியவர் தவறி கீழே விழுந்தார்.

      இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெட்சுமி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

      • ஆலங்குளத்திற்கு அதனை சுற்றி அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
      • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறந்துள்ளனர்.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு அதனை சுற்றி அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

      குறிப்பாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், ரேசன் கார்டு, பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கும் ஆலங்குளம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு தான் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

      இந்த அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அந்த வளாகத்தில் ஆதார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் ஒரு மாதமாக அந்த மையம் பூட்டியே கிடந்தது. இதனால் பொதுமக்கள் அங்கு வந்து ஏமாந்து திரும்பி சென்றனர்.

      இதுதொடர்பாக கடந்த 22-ந்தேதி மாலைமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மையத்தின் முன்பு ஒரு நோட்டீசையும் ஒட்டி உள்ளனர்.

      அதில், நிரந்தர பணியாளர் வரும் வரைக்கும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் ஆதார் மையம் தற்காலிக பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூட்டிக்கிடந்த நிலையில், தற்போது வாரத்தில் 3 நாட்கள் ஆதார் மையம் செயல்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை.
      • குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட த்திற்கு முதன்மை மருத்துவமனையாக இயங்கி வரும் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

      குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகம் பேர் பிரசவத்திற்காக தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். இங்கு குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை எனவும், அவர்க ளுக்கான அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போதுமான அளவில் இல்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.

      தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் பயன்படுத்தி வரும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

      எனவே தினமும் ஆயிர க்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் தென்காசி அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட அறைகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வா கம் முன்வர வேண்டும் என சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • நிகழ்ச்சியில் 7 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது.
      • பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.

      கடையம்:

      கடையம் பெரும்பத்து ஊராட்சியில் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி சபரி நகர், மேட்டூர், ஸ்டாலின் நகர், கானாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். கிராம நிர்வாக அதிகாரி அரிகரன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      • திருவிழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது.
      • பெண்கள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்களை பாடினர்.

      சிவகிரி:

      சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் வருகிற 4 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1-ம் திருநாள் நடைபெற்றது. 2-ம் திருநாளான நேற்று இரவு 7 மணியளவில் திரவுபதி அம்மன் கோவிலில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 401 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத்தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சீதாராமன், பொருளாளர் சிதம்பரம் குருசாமி, துணைத்தலைவர் குமார், துணைச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதோஷ வழிபாட்டு குழுவை சேர்ந்த தலைவி சரஸ்வதி தலைமையில், தேவி, குழந்தை நாச்சியார், மீனா ஆகியோர் பக்தி பஜனை பாடல்கள் பாட திருவிளக்கு ஏற்றி பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை ஒன்று சேர்ந்து பாடி 401 திருவிளக்கு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவிழா நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

      • கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
      • முகாமில் கலந்து கொண்டவர்களில் தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

      சுரண்டை:

      சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சுரண்டையில் நடைபெற்றது. நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      முகாமை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தேவைபட்டோருக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

      முகாமில் சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், வியாபாரி சங்கத் தலைவர் காமராஜ், வத்தல் வியாபாரி சங்க பொறுப்பாளர் ரத்தினசாமி, காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரி சங்கத் தலைவர் சேர்மசெல்வன், நகர காங்கிரஸ் பிரதிநிதி சமுத்திரம், கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, பூபதி செல்லத்துரை, ஜெயராணி வள்ளி முருகன், கல்பனா அன்னபிரகாசம், உஷா பிரபு, செல்வி, ரமேஷ், சாந்தி பட்டு முத்து, மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகர், பிரபு, கந்தையா, மகேஷ், கஸ்பா செல்வம், அரசு ஒப்பந்தக்காரர் சண்முகராஜ், ஆட்டோ செல்வராஜ், அய்யப்பன், பாலகணேஷ்சங்கர், மகேந்திரன், மாரிச்செல்வம், பிரபாகரன், ராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • வீரம் கொண்ட அம்மன் கோவிலின் நிர்வாகியாக பாலசுப்பிரமணியன் என்பவர் இருந்து வருகிறார்.
      • திருட்டு குறித்து பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் புகார் அளித்தார்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் வீரம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரில் கீழத்தெருவில் வசிக்கும் பாலசுப்பிர மணியன்(வயது 53) என்பவர் இருந்து வருகிறார்.

      சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடை கொண்ட தங்கப்பொட்டு திருட்டு போயிருந்தது.

      இதுதொடர்பாக பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

      • ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.
      • நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      விளாத்திகுளம்:

      தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்மாந்தை, வடக்கு செவல், கே.குமரெட்டி யாபுரம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் சமு தாய நலக்கூடம், அங்கன் வாடி மையம் மற்றும் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

      தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட த்தின் கீழ் தலா ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்மாந்தை, கே. குமரெட்டி யாபுரம் கிரா மத்தில் பயணியர் நிழற்குடை, கீழ விளாத்தி குளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-22 திட்டத்தில் ரூ. 6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை மற்றும் எட்டயபுரம் பேரூ ராட்சி 3, 15-வது வார்டு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மே ம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.

      நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மார்க் கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், தாசில் தார்கள் ராமகிருஷ்ணன், மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், மாநில நெச வாளர் அணி செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், நவநீத கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா கண்ணு, விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமை ப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      • தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரையூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
      • இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

      ஆறுமுகநேரி:

      தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் பல்வேறு கோவில்களின் கொடை விழாக்கள் நடை பெற்ற நிலையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

      இந்த நிலையில் தற்போது மேலும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

      இதன்படி தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரை யூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

      அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணி யிலும் ஈடுபட்டு வருகின்ற னர்.

      இதனிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆத்தூருக்கு வருகை தந்து போலீசாரின் பாது காப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிவுரை களை வழங்கினார்.

      அப்போது திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால முருகன், திருச்செந்தூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ரகு ஆகியோர் உடன் சென்றனர்.

      • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார்.
      • கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

      விளாத்திகுளம்:

      விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட 18-ம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார். கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

      நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் சக்கலா சுரேந்திர பாபு, மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ், நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் திருமாறன், தொழிலதிபர் ராஜங்கம் சீனிவாசன், தேசிய பிச் வாலிபால் தலைவர் சோலைராஜ், ஆல்ரின், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், கந்தவேல், கிராம நிர்வாக அலுவலர்கள், மகேஷ், ஜான்சி பேபி, படர்ந்த புளி மேலாளர், லியா கைப்பந்து கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

      ×