search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அருகே   3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    ஆத்தூர் அருகே 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

    • தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரையூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் பல்வேறு கோவில்களின் கொடை விழாக்கள் நடை பெற்ற நிலையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது மேலும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரை யூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணி யிலும் ஈடுபட்டு வருகின்ற னர்.

    இதனிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆத்தூருக்கு வருகை தந்து போலீசாரின் பாது காப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிவுரை களை வழங்கினார்.

    அப்போது திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால முருகன், திருச்செந்தூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ரகு ஆகியோர் உடன் சென்றனர்.

    Next Story
    ×