search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி
    X

    கைப்பந்து போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    விளாத்திகுளம் அருகே மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார்.
    • கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட 18-ம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த கைப்பந்து அணியினர் கலந்து கொண்டனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைப்பந்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை தொடங்கி வைத்தார். கனரா வங்கி 5 அடி சுழற்கோப்பையை கைப்பற்ற விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பெண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அணியினர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் சக்கலா சுரேந்திர பாபு, மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ், நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் திருமாறன், தொழிலதிபர் ராஜங்கம் சீனிவாசன், தேசிய பிச் வாலிபால் தலைவர் சோலைராஜ், ஆல்ரின், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், கந்தவேல், கிராம நிர்வாக அலுவலர்கள், மகேஷ், ஜான்சி பேபி, படர்ந்த புளி மேலாளர், லியா கைப்பந்து கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×