என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    'சென்னை 28', 'தமிழ் படம்', 'கலகலப்பு' போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் மிர்சி சிவா. இவர் சமீபத்தில் நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இதைத்தொடர்ந்து இவர் தற்போது 'கன்னிராசி', 'தர்மபிரபு' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் 'சலூன் - எல்லா மயிரும் ஒன்னுதான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

    இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், சலூன் படத்தின் "மயிர்" என்கிற பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பாடலை, இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
    • தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.

    தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.

    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் முதல் மற்றும் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், போர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வறுகிறது.

    • கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
    • இப்படத்தை பரியேறும் பெருமாள், ரைட்டர், ப்ளூ ஸ்டார் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது

    மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் படமானது மே மாதத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

    கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார்.

    இப்படத்தை பரியேறும் பெருமாள், ரைட்டர், ப்ளூ ஸ்டார் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடங்கினார்.

    இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மேலும், இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது இந்த படத்தின் நாயகியாக பிரபல மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்களை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

    1990-காலக்கட்டத்தில் உருவாகும் இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
    • இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் நாளை (பிப் 29) காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குசாமி, சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் நாசர் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

    • மலையாள நடிகை லீனா இன்ஸ்டாகிராமில் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
    • தனது கணவரின் சாதனை, நாட்டிற்கும் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கும் வரலாற்று பெருமையை தேடித்தரும்.

    மலையாள படத்தின் பிரபல நடிகை லீனா. இவர் ககன்யான் திட்ட விண்வெளி வீரரும் குரூப் கேப்டனுமான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை கடந்த ஜனவரி 17-ந் தேதி திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது திருமணம் பற்றிய தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்து உள்ளார். இந்நிலையில் நேற்று மலையாள நடிகை லீனா இன்ஸ்டாகிராமில் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


    ககன்யான்' விண்வெளி வீரரும், குரூப் கேப்டனுமான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை கடந்த 17-ந்தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளேன். தனது கணவரின் சாதனை, நாட்டிற்கும் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கும் வரலாற்று பெருமையை தேடித்தரும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களின் பட்டியலில் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பெயரை பிரதமர் மோடி அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் நடிகை லீனா வெளியிட்டுள்ளார். லீனா- பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் ஜோடியாக இடம்பெற்றுள்ள புகைப்படங்களின் தொகுப்பையும் அதில் பகிர்ந்துள்ளார்.

    • படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.
    • அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகி உள்ளது.

    ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் புதிய படத்தில் நடிக்கிறார்.

    வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து 5-வதாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்ட பொருட்செலவில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தை இயக்குனர் என்.ஆனந்த் இயக்கி வருகிறார். பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கும் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். தம்பி ராமையா, விவேக் பிரசனா, முனிஷ் காந்த், பாலசரவணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.


    அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகி உள்ளது. இந்நிலையில் படத்துக்கு 'இங்க நான் தான் கிங்கு' என பெயர் வைக்கப்பட்டது. படத்தின் டைட்டிலையும், பர்ஸ்ட் லுக்கையும் நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

    இந்த படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகிறது.

    • ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
    • ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர்.

    சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதரி தர்கா உள்ளது. இங்கு அனைத்து சமூக மக்களும் மத வேறுபாடு இன்றி வழிபடுவது வழக்கம்.

    இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது காரில் வந்து இருந்தார். தர்காவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.

     அப்போது ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ரோட்டிலும் திரண்டு நின்றனர். ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் வந்த காரை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.
    • ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.

    ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கவுதம் நடித்துள்ள ஆர்ட்டிக்கிள் 370 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி இருந்தார்.

    ஆர்டிக்கிள் 370 படத்தை குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திரையிட படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்குள்ள தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதித்தனர்.

    வளைகுடா நாடுகள் தடை காரணமாக அங்கு வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ட்டிக்கிள் 370 படத்தை பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரதமர் பாராட்டிய படத்துக்கு வளைகுடா நாடுகள் தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.

    • "ஜெ பேபி" திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது.
    • குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

    பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் "ஜெ பேபி" திரைப்படம் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.

    பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது.

    "ஜெ பேபி" படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது.

    "ஜெ பேபி" திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

    'ஜெ பேபி' படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

    • டங்கி படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
    • குடும்பத்தார், உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளவர் என தெரிகிறது.

    தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

    இந்த நிலையில், டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்டகால நண்பரும், பேட்மின்டன் வீரருமான மத்யாஸ் போ என்பவரை டாப்சி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

     


    இருவரின் திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும், இதில் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரின் திருணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
    • ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

    இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரவணனின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    • நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி
    • பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்

    பொது இடத்தில் சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான் மன்னிப்பு கேட்கிறேன் என நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவகுமாரும் அவரது நண்பரும் பேசியுள்ளனர்.

    அதில், "நான் சால்வையை தூக்கி எறிந்த நபர் வேறு யாருமில்லை. நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி. 1971-ல் மன்னார்குடியில் ஒரு நாடகத்தை தலைமை தாங்க போயிருந்தேன். அப்போதுதான் இவரை சந்திந்தேன். 1974-ல் நடைபெற்ற எனது திருமணதிற்கு இவர் வந்திருக்கிறார். பின்பு இவரின் கல்யாணத்தையே நான்தான் செய்து வைத்தேன். அதுமட்டுமில்லை அவரின் மகன், பேரன் திருமணத்திற்கும் நான் சென்றுள்ளேன்.

    பொது இடத்தில சால்வை அணிவிப்பது எனக்கு பிடிக்காது. ஆனாலும் பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன்" என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு ஒருமுறை செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டி விட்டது சர்ச்சையானது. அப்போதும் சிவகுமார் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×