என் மலர்
நீங்கள் தேடியது "Actress Lena"
- மலையாள நடிகை லீனா இன்ஸ்டாகிராமில் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
- தனது கணவரின் சாதனை, நாட்டிற்கும் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கும் வரலாற்று பெருமையை தேடித்தரும்.
மலையாள படத்தின் பிரபல நடிகை லீனா. இவர் ககன்யான் திட்ட விண்வெளி வீரரும் குரூப் கேப்டனுமான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை கடந்த ஜனவரி 17-ந் தேதி திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது திருமணம் பற்றிய தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்து உள்ளார். இந்நிலையில் நேற்று மலையாள நடிகை லீனா இன்ஸ்டாகிராமில் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ககன்யான்' விண்வெளி வீரரும், குரூப் கேப்டனுமான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை கடந்த 17-ந்தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளேன். தனது கணவரின் சாதனை, நாட்டிற்கும் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கும் வரலாற்று பெருமையை தேடித்தரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களின் பட்டியலில் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பெயரை பிரதமர் மோடி அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் நடிகை லீனா வெளியிட்டுள்ளார். லீனா- பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் ஜோடியாக இடம்பெற்றுள்ள புகைப்படங்களின் தொகுப்பையும் அதில் பகிர்ந்துள்ளார்.






