search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death"

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.
    • பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    மேலும் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அண்ணா மலையார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    நேற்று கோவில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.

    இந்த பரண் கிடாய் பூஜையின் போது கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டு கிடாய்களை பூசாரிகள் வெட்டி அவற்றின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவது, அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டுதல் வைத்துள்ள பக்தர்களுக்கு பூசாரிகள் வழங்குவது வழக்கம்.

    அப்போது மதியம் 20-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

    இதனையடுத்து சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை மழை காரணமாக 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி உளளது.

    புதுச்சத்திரத்தில் 15.74 செ.மீ., கல்லணையில் 14.22 செ.மீ., கரூரில் 13.26 செ.மீ., திருச்சி விமான நிலையம் 12.94 செ.மீ., சமயபுரத்தில் 12 செ.மீ. பெய்துள்ளது.

    கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆடு-மாடுகள் இறந்துள்ளன. 24 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி முடிய மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    24-ந்தேதி வரை (வெள்ளி) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல்போன்களில் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது.
    • ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார்.

    ஈரானின் 14 வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அவருடன் வந்த முக்கிய அரசு உறுப்பினர்கள் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

    மோசமான வானிலைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு மீட்டுப்படை சென்றது. பின் இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராகத் துணை அதிபர் முகமது மொக்பர் பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதிபர் முகமது மொக்பர், நிதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி-எஜே மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் தேதி தீர்மானிக்கப்பட்டது.

     

    ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார். இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இந்தியா இன்று (மே 21) துக்க தினம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது. 

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டோவா. இந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் தான் உஸ்தியா. இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிறகு, மூதாட்டி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அந்த இளைஞர் மதுபோதையில் மயக்க நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞர் கைதை தொடர்ந்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது வீட்டின் பின்புறம் யாரோ உதவி கேட்கும் குரல் போலீசாருக்கு கேட்டது. எங்கிருந்து குரல் வருகிறது என போலீசார் தேடினர். சிறிது நேரத்தில் உதவி கேட்கும் குரல் மண்ணுக்குள் இருந்து வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அதன்பின், சம்பவ இடத்தை குழி தோண்டும் பணியில் போலீசார் இறங்கினர். அப்போது 62 வயது முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உயிருடன் புதைக்கப்பட்ட முதியவரை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரும், போலீசார் சற்று முன் கைது செய்த 18 வயது இளைஞரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தும் போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    உடனே முதியவரை கடுமையாக தாக்கிய இளைஞர் அவரை கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது மயக்கமடைந்த முதியவரை, அந்த இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் மறைத்துவைத்துள்ளார். அதன்பிறகு இளைஞர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, முதியவரை அதில் தள்ளி புதைத்துள்ளார். மது போதையில் முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மலரவனுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பெயர் வைத்தார்.
    • சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோவை:

    கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் தீபா கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    கடந்த சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அரசியலில் இருந்து விலகி கோவை கணபதி பாரதிநகரில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை மலரவன் மரணம் அடைந்தார்.

    மலரவனுக்கு இந்த பெயரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலரவன் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய பழக்கத்தில் இருந்தவர்.

    • மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.
    • இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.

    இன்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

     

    நகர் பகுதியைக் காட்டிலும் அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

     

    இதுபோன்று பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

    • திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    சென்னை:

    செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

    விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது.

    அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் பழுதாகி நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே.
    • தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிரிக்கெட் உலகில் பிரபலமானவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்கு உரியவரான சச்சின் டெண்டுல்கருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே.

    39 வயதான பிரகாஷ் கப்டே விடுமுறை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜாம்நர் நகருக்கு சென்றிருந்த பிரகாஷ் கப்டே தனக்கு வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று (மே 15) அதிகாலை 2 மணியளவில் இந்த தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ் கப்டேவுக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    உயிரிழந்த பிரகாஷ் கப்டேவின் உடலை கைப்பற்றிய ஜாம்நர் காவல் துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இது தொடர்பாக பிரகாஷ் கப்டேவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி மீது மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்தது.
    • இந்த விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.

    பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.

    தீ மளமளவென பரவியதால் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், வாக்களித்து விட்டு திரும்புகையில் விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.

    • மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பியபோது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது.
    • விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கல்பாக்கம்:

    சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது நண்பர்களான சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), ஏழுமலை (30), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் (20) உள்ளிட்ட 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டு நேற்று காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்தைக் கண்ட வாயலூர் பகுதி மக்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கிக்கொண்டிருந்தவர்களை மீட்க இரும்பை அறுக்கும் எந்திரம் மூலம் காரை அறுத்து படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுவராஜ் (20) மற்றும் மற்றொரு வாலிபர் என 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
    • இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மும்பையில் நேற்று (மே 13) வீசிய பலத்த காற்றால் ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 74 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெட்ரோல் நிலையம் அருகே சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒதுங்கியிருந்தன. அந்த சமயத்தில் அருகில் நிறுவப்பட்டிருந்த ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் 250 டன் எடை கொண்ட விளம்பரப் பலகை விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

     

    விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஈகோ நிறுவனத்தின் இயக்குனர் பாவேஷ் தலைமறைவாகி உள்ளார். இந்தநிலையில், அந்த விளம்பரப் பலகையை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்றே குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

    ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக ஒரு வருட காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அரசின் அலட்சியத்தாலேயே 14 உயிர்கள் பலியாகி உள்ளதாக பலரும் கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×