என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனம் மூன்றே நாட்களில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்று இருக்கிறது. சியோமியின் எம்.ஐ. வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகை விற்பனையால் இது சாத்தியமானது என சியோமி தெரிவித்து இருக்கிறது.
அமேசான் தளத்தில் விற்பனையான பத்து டிவிக்களில் எட்டு மாடல்கள் எம்.ஐ. மற்றும் ரெட்மி பிராண்டை சேர்ந்தவை ஆகும். ரெட்மி டிவி எக்ஸ் 50 இன்ச், எம்ஐ டிவி 4ஏ 32 இன்ச் மற்றும் எம்ஐ டிவி 5எக்ஸ் 43 இன்ச் மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

தற்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு ரூ. 3500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எம்ஐ டிவி 5எக்ஸ் சீரிஸ் மாடலுக்கு ரூ. 3 ஆயரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கின்றன.
ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனையில் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது.

பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐந்தில் ஒரு வாடிக்கையாளர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிய ஸ்மார்ட்போனினை வாங்கியுள்ளனர். ஆப்பிள் மட்டுமின்றி சியோமி மற்றும் ரியல்மி நிறுவன மாடல்களும் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 குறித்த அறிவிப்பை 2021 ஐ.ஒ. நிகழ்வில் வெளியிட்டது. பல்வேறு டெவலப்பர் பிரீவியூ, பீட்டா பில்டுகளை கடந்து தற்போது ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனினும், இது ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் முறையில் வெளியாகி இருக்கிறது.
தற்போதைய அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படவில்லை. வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் 3, பிக்சல் 3ஏ, பிக்சல் 4, பிக்சல் 4ஏ, பிக்சல் 4ஏ 5ஜி, பிக்சல் 5 மற்றும் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர விரைவில் அறிமுகமாக இருக்கும் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்.
பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தவிர இந்த ஆண்டு இறுதியில் சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, சியோமி, ரியல்மி, டெக்னோ மற்றும் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது. உலகம் முழுக்க பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 4) இரவு 9 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு செட்டிங்களை மாற்றி சோதனை செய்தனர். பலர் செயலிகள் இயங்காததை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின் சில நிமிடங்களில் சர்வர் டவுன் எனும் ஹேஷ்டேக் ட்விட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைதளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதே போன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.
‘முடங்கிய சேவை திரும்ப செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் இதன் சேவைகள் முடங்கி, பின் செயல்பாட்டுக்கு வந்தது.
7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 700 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சூக்கர்பர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடலின் இந்திய விலை மற்றும் விறப்னை விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களை ஐபோன் 13 சீரிஸ் உடன் அறிமுகம் செய்தது. ஐபோன் 13 சீரிஸ் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த நிலையில், இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு அக்டோபர் 8 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு அக்டோபர் 8 ஆம் தேதியே துவங்குகிறது. இந்தியாவில் முன்பதிவு மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இந்திய விலை ரூ. 41,900 என துவங்குகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 துவக்க விலை ரூ. 40,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சாம்சங் சப்போர்ட் வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
கடந்த மாதம் சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 239.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,700 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியவில் இந்த ஸ்மார்ட்போன் ஆப்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இது பிளாக், லைட் புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ப்ரோ அந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பெயரில் புதிய பிராசஸர் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த பிராசஸர் கொண்ட சாதனங்கள் வெளியீடு, உற்பத்தி சிக்கல் காரணமாக தள்ளி போனதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து சில வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் அளவில் மினி எல்.இ.டி. ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிளாட்-எட்ஜ் டிசைன், மேக்சேப் சார்ஜிங் போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படலாம்.
மேக்புக் தவிர பல்வேறு இதர சாதனங்களை அறிமுகம் செய்யவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்புக் ப்ரோ மாடலை தொடர்ந்து மேம்பட்ட மேக் மினி, ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட போல்ட் ஆடியோ நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
போல்ட் ஆடியோ நிறுவனம் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய சோல்பாட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஆக்டிவ் நாய்ஸ் பில்ட்டரிங் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இயர்பட்களில் டச்பேட் உள்ளது. இதை கொண்டு வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்கலாம்.

இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. போல்ட் ஆடியோ ஏர்பேஸ் சோல்பாட்ஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி ஐபோன் மாடல் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் 2021 சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கியது.
சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 12 மினி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் தற்போது ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் ஐபோன் 12 மினி ரூ. 59,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சிறப்பு விற்பனையில் ஐபோன் 12 மினி 128 ஜிபி விலை ரூ. 43,999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 53,999 என்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பு காரணமாக தற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஐபோன் மாடலாக ஐபோன் 12 மினி இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மினி தற்போது ரூ. 69,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ55 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஏ54 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒ.எஸ்.11 கொண்டிருக்கும் ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 15,490 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.
உலகம் முழுக்க ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை குறிவைத்து புதிய மால்வேர் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
சுமார் ஒரு கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் புதிய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான சிம்பெரியம் தெரிவித்துள்ளது. இந்த மால்வேர் க்ரிப்ட்ஹார்ஸ் என அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய ஆண்ட்ராய்டு பயனர்களை பாதித்து இருக்கிறது.
மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த மால்வேர் பரவி இருக்கிறது. ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மால்வேர் பரப்பிய செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

க்ரிப்ட்ஹார்ஸ் மால்வேர் செயலிகளின் குறியீடுகளில் நுழைந்து பயனர்களை தீங்கு விளைவிக்கும் இணைய முகவரிகளை க்ளிக் செய்ய வைக்கும். இந்த இணைய முகவரிகள் பயனர் பணத்தை திருடி ஹேக்கர்களின் அக்கவுண்ட்களுக்கு பரிமாற்றம் செய்கின்றன.
இந்த மால்வேர் பயனர் அனுமதியின்றி பிரீமியம் சேவைகளுக்கு சந்தாதாரர் ஆக மாற்ற வைக்கிறது. மால்வேர் கொண்டு உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல கோடி பேரை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. பயனர்களை ஏமாற்ற உள்ளூர் மொழியிலும் மால்வேர் செயல்பட வைக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிக 5ஜி பேண்ட்களுக்கான வசதி கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் ஒ.எல்.இ.டி. 10 பிட் கலர் ஸ்கிரீன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஸ்கை மற்றும் இரிடிசன்ட் கிளவுட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 36,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.






