search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மேக்புக் ப்ரோ
    X
    மேக்புக் ப்ரோ

    புதிய பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ வெளியீட்டு விவரம்

    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ப்ரோ அந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பெயரில் புதிய பிராசஸர் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த பிராசஸர் கொண்ட சாதனங்கள் வெளியீடு, உற்பத்தி சிக்கல் காரணமாக தள்ளி போனதாக கூறப்படுகிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து சில வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

     மேக் மினி

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் அளவில் மினி எல்.இ.டி. ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிளாட்-எட்ஜ் டிசைன், மேக்சேப் சார்ஜிங் போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படலாம்.

    மேக்புக் தவிர பல்வேறு இதர சாதனங்களை அறிமுகம் செய்யவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்புக் ப்ரோ மாடலை தொடர்ந்து மேம்பட்ட மேக் மினி, ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
    Next Story
    ×