என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 ப்ரோ சீரிஸ் மாடல்களில் டிமென்சிட்டி 920 சிப்செட் வழங்கப்படுகிறது.


    ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களின் டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போதைய டீசர்களில் புதிய ரெட்மி நோட் 11 மாடல்கள் டிமென்சிட்டி 920 சிப்செட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா, டூயல் ஐ.எஸ்.ஓ. தொழில்நுட்பம், 2.1 ஒற்றை பிக்சல் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி+ 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

     சியோமி ரெட்மி நோட் 11 டீசர்

    ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள் பிளாக், பர்பில் மற்றும் மிஸ்டி பாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ கூடுதலாக மற்றொரு நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. 
    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ்2 போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை 8 இன்ச் எல்.டி.பி.ஒ. ஒ.எல்.இ.டி. பேனல், 120 வாட் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், கலர் ஓ.எஸ். 12 உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஒப்போ ஸ்மார்ட்போன் கோப்புப்படம்

    முன்னதாக ஒப்போ நிறுவனம் எதிர்கால அணியக்கூடிய சாதனத்திற்கான காப்புரிமை பெற்று இருந்தது. புதிய தொழில்நுட்பம் வெனஸ் அன்லாக்கிங் மெத்தட் மற்றும் வெயின் அன்லாக்கிங் டிவைஸ் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இது முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு இணையான பயோமெட்ரிக் சிஸ்டம் ஆகும். எல்.ஜி. நிறுவனமும் இதே போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி அதற்கு ஹேண்ட் ஐ.டி. என பெயர் சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டேப் கே10 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    லெனோவோ நிறுவனம் டேப் கே10 மிட்-ரேன்ஜ் டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 10.3 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ், 5 எம்பி செல்பி கேமரா, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக லெனோவோ தெரிவித்து உள்ளது.

     லெனோவோ டேப் கே10

    லெனோவோ டேப் கே10 மாடல் அபிஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 25 ஆயிரம் ஆகும். எனினும், புதிய டேப் கே10 எல்.டி.இ. 3 ஜிபி+32 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும், வைபை, 4 ஜிபி+64 ஜிபி விலை ரூ. 15,999, எல்.டி.இ. 4 ஜிபி+64 ஜிபி விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரீபட்ஸ் 4ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதில் ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 10 மணி நேரத்திற்கான ஸ்டான்ட்-அலோன் பேட்டரி லைப், புதிய வட்ட வடிவ கேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஹெட்செட் 3டி எர்கோனோமிக் டிசைன், குறைந்த எடை உள்ளிட்டவை காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. 

     ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ

    ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ அம்சங்கள்

    - ப்ளூடூத் 5.2
    - 10 எம்எம் டைனமிக் டிரைவர் 
    - ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரண்ட் மோட்
    - டூயல் மைக்ரோபோன் ஏ.ஐ. கால் நாய்ஸ் ரிடக்‌ஷன்
    - டபுள் டேப் கண்ட்ரோல்
    - லோ-லேடன்சி மோட் 
    - 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - சார்ஜிங் கேசில் 215 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
    - யு.எஸ்.பி. டைப் சி

    ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ செராமிக் வைட், கார்பன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் பிராஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,990 ஆகும். இது அமேசான் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஹூவாய் தீபாவளி சலுகையின் கீழ் இந்த இயர்பட்ஸ் ரூ. 1000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சலுகை நவம்பர் 5 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. பின் செப்டம்பரில் விற்பனைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி ஓ.எஸ். கொண்டிருக்கும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. பிரகதி ஓ.எஸ். இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களை சேர்ந்த தலைசிறந்த குழு இதனை உருவாக்கி இருக்கிறது.

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஓ.எஸ்.-இல் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆட்டோமேடிக் ரீட்-அலவுட், ஆன்-ஸ்கிரீன் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் வசதி, பில்ட்-இன் கேமரா ஏ.ஆர். பில்ட்டர்கள், ஜியோ மற்றும் கூகுள் செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும். 

    ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த பிராசஸரில் சிறப்பான கனெக்டிவிட்டி, லொகேஷன் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.
    ஐகூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் வென்னிலா நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.


    ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. பண்டிகை காலம் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், ஐகூ இந்த ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட் மாடலுடன் ஐகூ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    வென்னிலா ஐகூ 8 மாடல் ஐகூ 8 லெஜண்ட் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐகூ 8 ப்ரோ மாடல்தான் இந்தியாவில் ஐகூ 8 லெஜண்ட் பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

     ஐகூ 8 சீரிஸ்

    சீன சந்தையில் ஐகூ 8 சீரிஸ் மாடல்கள் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டன. இந்த மாடல்களில் சாம்சங்கின் இ5 அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், யு.எப்.எஸ். 3.1 ஸ்டோரேஜ், லிக்விட் விசி கூலிங், எல் வடிவ கேமரா பம்ப், கிம்பல், ஓ.ஐ.எஸ்., ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சர் சிப்செட் பென்ச்மார்க் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை டென்சர் சிப்செட் உடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. புதிய டென்சர் சிப் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இதன் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ரெடிட் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவலில், டென்சர் சிப் ஜிபியு பென்ச்மார்க் புள்ளிகள் இடம்பெற்று இருக்கின்றன. பிக்சல் 6 மாடல் வைல்டு லைப் டெஸ்டில் 6666 புள்ளிகளை நொடிக்கு 39 பிரேம் வேகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது. வைல்டு லைப் எக்ஸ்டிரீம் டெஸ்டில் நொடிக்கு 12.8 பிரேம் வேகத்தில் 2028 புள்ளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. 

     கூகுள் பிக்சல் 6
     
    டென்சர் சிப் கொண்ட பிக்சல் 6 2129 லூப் ஸ்கோர், 56 சதவீத ஸ்டேபிலிட்டியில் 1193 லூப் ஸ்கோர் பெற்று இருக்கிறது. இது மற்ற பிளாக்‌ஷிப் பிராசஸர்களான ஸ்னாப்டிராகன் 888, எக்சைனோஸ் 2100, ஹூவாய் கிரின் 9000 உடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். பென்ச்மார்க் பரிசோதனையின்படி பிக்சல் 6 டென்சர் சிப் சிறந்த ஆண்ட்ராய்டு பிளாக்‌ஷிப் சிப்செட்களில் ஒன்றாக இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் 2022 பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய பிளாக்‌ஷிப் மாடல்களில் அதிகபட்சம் 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், அடுத்த ஆண்டு இந்த நிலையை மாற்ற சாம்சங் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதன்படி கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 45 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இதே தகவல் சீன வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    இந்த மாடலில் உள்ள 45 வாட் சார்ஜிங் ஸ்மார்ட்போனினை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும். முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    ரியல்மி நிறுவனத்தின் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

    ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் உயர்-ரக அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விலை மற்றும் ஹார்டுவேர் அம்சங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது. எனினும், இதன் வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது.

     ரியல்மி ஸ்மார்ட்போன்

    தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ரியல்மி 8 ப்ரோ மாடலில் புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது. 
    பேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி இருக்கிறது. குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது. பயனர்கள் வீடியோ கால் பேசும் போது இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மெசன்ஜர் செயலியை தொடர்ந்து விரைவில் இன்ஸ்டாகிராம் சேவையிலும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் இயங்கும். இவை மல்டி பிளேயர் கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. முதற்கட்டமாக குரூப் எபெக்ட்ஸ் அம்சத்தில் 70-க்கும் அதிக எபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

     பேஸ்புக் மெசன்ஜர்

    உலகம் முழுக்க குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய மெசன்ஜர் செயலியில் வீடியோ கால் அல்லது ரூம் ஸ்டார்ட் செய்து எபெக்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மைலி முகத்தை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு குரூப் எபெக்ட்ஸ் ஆப்ஷன் இருக்கும்.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.


    நாய்ஸ் சென்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஸ்டைல் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இன் இயர் ப்ளூடூத் இயர்போன் 10 எம்.எம். டிரைவர்களை கொண்டிருக்கின்றன. நாய்ஸ் சென்ஸ் இயர்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வைப்ரேஷன் அலெர்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஐ.பி.எக்ஸ்-5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு எட்டு நிமிடங்கள் சார்ஜ் செய்தால் எட்டு மணி நேர பேக்கப் வழங்குகிறது. ப்ளூடூத் வி5 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் நாய்ஸ் சென்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டிருக்கிறது.

     நாய்ஸ் சென்ஸ்

    நாய்ஸ் சென்ஸ் இயர்போன்கள் ரூ. 1,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ.2,499 ஆகும். இந்த இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இது அமேசான் மற்றும் நாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஐகூ நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    ஐகூ நிறுவனம் தனது ஐகூ 7, ஐகூ 7 லெஜண்ட், ஐகூ இசட்3, ஐகூ இசட்5 மற்றும் ஐகூ 3 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12 பீட்டா வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான மாடல்களுக்கு டிசம்பர் 2021 வாக்கில் இந்த அப்டேட் கிடைத்துவிடும்.

    எனினும், ஐகூ 3 மாடலுக்கு இந்த அப்டேட் 2022 மார்ச் மாத வாக்கில் தான் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு 12 பீட்டா இந்த ஸ்மார்ட்போன்களில் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என ஐகூ தெரிவித்து இருக்கிறது. பீட்டா வெளியீடு படிப்படியாக நடைபெறும். இதனால் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும்.

     ஐகூ

    முன்னதாக விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 12 எப்போது கிடைக்கும் என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. வரும் நாட்களில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் புது அப்டேட் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்.
    ×